இன்டெல் நிறுவனத்தை உருவாக்கிய குரோவ் மறைவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
00:00

உயிர் பிழைப்பதற்காக, ஹங்கேரியிலிருந்து தப்பி வந்து அமெரிக்காவினை அடைந்த ஆண்டி குரோவ், பின் நாளில், மனித இனம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களின் வளர்ச்சிக்கும், அமெரிக்க பொருளாதாரம் உச்சிக்குச் செல்லவும் காரண கர்த்தாவாகச் செயல்பட்டார். இன்டெல் நிறுவனத்தின் முதல் பணியாளராக, பொறியாளராக இணைந்து, அதன் தலைவராக உயர்ந்து பின் பணி ஓய்வு பெற்ற ஆண்டி குரோவ் தன் 79 ஆவது வயதில் நோய் காரணமாக, சென்ற மார்ச் 21 அன்று மறைந்தார். “அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தந்தை” எனப் பாராட்டப்பட்ட இவர் மனித இனத்தின் வாழ்க்கை முறையையே மாற்றியவர் என்றால் அது மிகையாகாது.
பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், கேமரா, ஏன் எந்த டிஜிட்டல் சாதனத்தை ஒருவர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்டி குரோவ் அவர்களின் கண்டுபிடிப்பின் பயன் இருக்கும். இன்டெல் நிறுவனத்தை நிறுவி, அதனை மெமரி சிப் உருவாக்கத்திலிருந்து, மைக்ரோப்ராசசர் தயாரிப்பிற்கு மாற்றினார். அவர் தலைமையில் உருவான 386 மற்றும் பென்டியம் ப்ராசசர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்களின் செயல் திறனையே புரட்சிகரமாகப் புரட்டிப் போட்டன. பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல் திறன் பன்மடங்கு அதிகரித்தது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உலகில், மைக்ரோசாப்ட் நிலையாகச் செயல்பட்டு புகழ் பெற, இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்கள் பெரிதும் கை கொடுத்தன. பெருமையாக Intel Inside என கம்ப்யூட்டர்கள் விளம்பரப்படுத்தியது இவரின் புகழைத்தான். இவர் எடுத்த முடிவினால் தான், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து, விண்டோஸ் + இன்டெல் கூட்டு முயற்சியாக, "Wintel" எனப் பல ஆண்டுகள் கூட்டாக கம்ப்யூட்டர்கள் இயக்கப்பட்டன.
1994ல், தவறான பென்டியம் சிப்கள் விற்பனை செய்யப்பட்டதை அறிந்து, அனைத்தையும் மாற்றிக் கொடுக்க முடிவு செய்து, குரோவ் அதனைச் செயல்படுத்தினார். அந்த வகையில், இன்டெல் நிறுவனம் அப்போது 50 கோடி டாலர் இழந்தது. ஆனால், அதன் பின்னால், குரோவ் என்ற மா மனிதனின் நியாய உணர்வு வெளியானது.
குரோவ் தலைமையில், இன்டெல் நிறுவனத்தின் வருமானம், ஆண்டுக்கு 109 கோடி டாலரிலிருந்து 2,600 கோடி டாலருக்கும் மேலாக உயர்ந்தது.
ஒரு சிறந்த நிறுவன நிர்வாகியாக அமெரிக்கா இவரை தொடர்ந்து மதித்தது. அமெரிக்க வர்த்தகத்தின் சரித்திரத்தில், அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக மதிக்கப்படுவார் என்று பல சரித்திர ஆசிரியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். “ஒரு நிறுவனத்தில் என்ன பதவியில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என குரோவ் தன் நூல்களில் விரிவாக எழுதி உள்ளார். இவர் எழுதிய ஏழு நூல்களில், High-Output Management மற்றும் Only the Paranoid Survive என்ற நூல்கள், நிர்வாக இயலைப் படிப்பவர்களுக்கு, புதிய சிந்தனையைக் காட்டுவதாக அமைந்தன. இன்றும் அவை விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவரைப் பற்றிய நூல் ஒன்று Andy Grove: The Life and Times of an American என்ற தலைப்பில் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. டைம் இதழ் 1997 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. இவரின் மறைவினை ஒட்டி, பில்கேட்ஸ் கூறுகையில், “20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நிர்வாகத் தலைவர்களில் ஒருவர் ஆண்டி குரோவ்” என்று குறிப்பிட்டுள்ளார். “இது நடக்காது என்று கூறியதை நடத்திக் காட்டியவர் குரோவ்” என இன்டெல் நிறுவனத்தின் இன்றைய தலைவர் ப்ரையன் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2, 1936ல் ஹங்கேரியில் பிறந்து, 8 வயதுச் சிறுவனாக, நாஸிகளின் அடக்குமுறைக்கு ஆளாகி, தப்பித்து 1956ல் முதலில் ஆஸ்திரியாவிற்கும், பின்னர் அமெரிக்காவிற்கும் குரோவ் வந்தார். நியுயார்க் நகரில் தன் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர்,1963ல், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார். இவருக்கு ஈவா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும், எட்டு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கும் வரை, ஆண்டிகுரோவ் அவர்களின் நினைவு இந்த உலகில் இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X