ஸ்மார்ட் போன் சந்தையில் ஓர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
00:00

இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாட்டு பரவல், வாடிக்கையாளர் சேவை, விற்பனை போன்றவை குறித்து பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
'டெலி அனாலிசிஸ்' (TeleAnalysis) என்ற அமைப்பு, வாடிக்கையாளர் சேவை குறித்த ஆய்வினை மேற்கொண்டது. ஸ்மார்ட் போன் செயல்பாடு மற்றும் விற்பனைக்குப் பின்னர் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கான தகவல் திரட்டலில், சாம்சங் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. முன்னணி இடத்தைப் பிடித்த மற்ற நிறுவனங்கள், மைக்ரோமேக்ஸ், லாவா மற்றும் இண்டெக்ஸ் ஆகியவையாகும். சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான லிஎக்கோ (LeEco) மற்றும் ஸியாமி (Xiaomi) தயாரிப்புகளும், வாடிக்கையாளர்களிடம் பரவலாக இடம் பெற்று, விற்பனையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்களும் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளன. இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (IDC), 2017ல் ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், இந்தியா, அமெரிக்காவினை மிஞ்சிவிடும் என அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில், இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை உயர்வு இரண்டு இலக்க அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பயனாளர்கள் பெரும் அளவில், ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவதாலும், சேவையில் 4ஜிக்கு மாறுவதாலும், இந்த உயர்வு இருக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது. இண்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா (IAMAI) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில் மொபைல் பயனாளர் எண்ணிக்கை 23.6 கோடியாக இருக்கும் என்றும், இது 2017ல், 31.4 கோடியாக உயரும் என்றும் அறிவித்துள்ளது.
கவுண்டர் பாய்ண்ட் (Counterpoint) அறிக்கையில், 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், சாம்சங் 23% பங்குடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. மைக்ரோமாக்ஸ் 17%, இண்டெக்ஸ் 11%, லாவா 7% மற்றும் லெனோவா 6% என அடுத்த இடங்களில் உள்ளன.
ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைச் சந்தையில் பல நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குவதால், போன் தன்மையும், அதன் வசதிகள், விலை மற்றும் விற்பனைக்குப் பின் சேவை ஆகியன இன்று கவனைக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்குவதில், சாம்சங் நிறுவனமே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா ஆகியவை, சாம்சங் நிறுவனத்திற்கு பல முக்கிய நகரங்களில் கடும் போட்டியை அளித்து வருகின்றன. ஸ்மார்ட் போன்களில், பட்ஜெட் விலையில் போன்களை வழங்குவதில், 43% பயனாளர்கள், மோட்டாரோலா நிறுவனப் போன்களே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளைக் கணக்கிடுகையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், ஆசிய நாடுகள் அனைத்திலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
பயனாளர்களால், அதிகக் குறைகள் சொல்லப்படாத போன்களில், லாவா நிறுவனப் போன்கள் முன்னணியில் உள்ளன. எப்படியாவது சந்தையில் தனக்கென ஓர் இடம் பிடிக்க வேண்டும் என்று போராடுவதில், இண்டெக்ஸ் நிறுவனப் போன்கள் முதல் இடத்தில் உள்ளன.
சீன நிறுவனப் போன்களும், இந்திய சந்தையில் தங்களை நிலை நிறுத்த தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அண்மையில் இந்த சந்தையில் நுழைந்த லிஎக்கோ (LeEco) இந்த வகையில் முதல் இடத்தில் உள்ளது. அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கவர்வதில், ஸியோமி நிறுவனப் போன்கள் முதல் இடத்தில் உள்ளன.
இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களில் தான் தற்போதைக்கு ஸ்மார்ட் போன் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்நிலைகளில் உள்ள 31 நகரங்கள், மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில், 21.3% பங்கினைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட் போன் விற்பனையாளர்களுக்கு, இந்த நகரங்கள் தற்போது சரியான சுறுசுறுப்பினைத் தந்துள்ளன. குறிப்பாக, பட்ஜெட் விலையில் வெளிவரும் ஸ்மார்ட் போன்களுக்கு, இந்த நகரங்களில் உள்ள பயனாளர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். ரூ.6,000 மற்றும் குறைவாக விலையிடப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கு இங்கு நல்ல விற்பனை கிடைத்து வருகிறது. ஸ்மார்ட் போன் விற்பனையில், இவை மூன்றில் இரண்டு பங்கினைக் கொண்டுள்ளன.
“இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்ற மத்திய அரசின் கொள்கை அறிவிப்பினால், பல சீன நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை அமைத்திட முயற்சி எடுத்து வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 200 முதல் 300 கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகளை இப்பிரிவில் எதிர்பார்க்கலாம். சீன நிறுவனமான, ஜியோனி (Gionee) வரும் மூன்று ஆண்டுகளில், ரூ. 300 கோடி முதலீடு செய்திட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X