பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
00:00

இன்டெக்ஸ் நிறுவனம் சென்ற வாரம், பட்ஜெட் விலையில் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அவை, இன்டெக்ஸ் அகுவா ட்விஸ்ட் (Intex Aqua Twist) மற்றும் இன்டெக்ஸ் க்ளவ்ட் போர்ஸ் (Cloud Force). அவற்றின் சிறப்பம்சங்கள்:

இன்டெக்ஸ் அகுவா ட்விஸ்ட்: இதன் திரை 5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன், FWVGA டிஸ்பிளேயுடன் உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் MT6580 ப்ராசசர் இயங்குகிறது. 1 ஜி.பி. அளவிலான டி.டி.ஆர்.3 ராம் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் துணையுடன் அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியுடன் 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.
இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சிறப்பம்சம், இதில் தரப்பட்டுள்ள சுழலும் தன்மையைக் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்கும் பின்புறக் கேமரா. இதில் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் OmniVision OV5648 சென்சார் இணைந்துள்ளது. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2200mAh திறன் கொண்டதாய் உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் உள்ள இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 5,199.

இன்டெக்ஸ் க்ளவ்ட் போர்ஸ் ஸ்மார்ட் போன்: இதன் திரை 5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன், FWVGA டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் திரைக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும், குவாட் கோர், ஸ்ப்ரெட் ட்ரம் MT6580 SC7731 ப்ராசசர் இயங்குகிறது. 1 ஜி.பி. அளவிலான டி.டி.ஆர்.2 ராம் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் துணையுடன் அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியுடன் 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். பின்புறமாக, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் பரிமாணம் 145.3x72x9.5 மிமீ. எடை 158 கிராம். முன்புறமாக ஒரு வி.ஜி.ஏ. கேமரா தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2500mAh திறன் கொண்டதாய் உள்ளது. டார்க் கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் உள்ள இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 4,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X