இணைய வழி வர்த்தகம் சந்தர்ப்பங்களும் சவால்களும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
00:00

இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் போட்டி தொடந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் கவனத்தையும் கூடுதலாக ஈர்த்டு வருகிறது. பிரம்மிக்கத்தக்க வகையில் வளர்ச்சி இருக்கும் என்ற உறுதியைத் தருகிறது. இதன் தன்மையை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தப் பிரிவில் நூறு சதவீதம் முதலீடு செய்திடலாம் என்ற அரசின் புதிய கொள்கை அறிவிப்பு, இந்த வர்த்தகப் பிரிவின் தன்மையை மாற்ற இருக்கிறது. இது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

வர்த்தக வாய்ப்புகள்: இந்தியாவின் 125 கோடி ஜனத்தொகையில், மொபைல் போன்களை முதன் முதலாகப் பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ஆங்கிலத்தினை ஒரு பொது மொழியாகப் பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளனர். அத்துடன், வேகமாக உயர்ந்து வரும் மத்திய தர வர்க்க மக்களும் இவர்களுடன் இதே வகையில் இணைகின்றனர். இதனால், இணைய வழி வர்த்தகத்தில் இந்தியாவில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள், வெளிநாட்டு நிறுவனங்களின் கவனத்தினை ஈர்த்துள்ளன.
அண்மையில், இந்திய அரசு Department of Industrial Policy and Promotion என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கொள்கை முடிவு, வெளிநாட்டு நிறுவனங்கள், இணைய வழி வர்த்தகத்தில் 100 சதவீத முதலீட்டினை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இதன் மூலம், இணைய வழி வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களும், வழக்கமான முறையில், பொருட்களைக் கொள்முதல் செய்து வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களும் புதிய பலன்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால், அரசு ஒரு விஷயத்தில் உறுதியாய் உள்ளது. இந்த புதிய கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் இணைய வழி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும், அவற்றை வாங்குபவர்களுக்கும் இடையே தொழில் நுட்ப கட்டமைப்பினை ஏற்படுத்தி, வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாகும். பொருட்களைத் தன் முதலீட்டுப் பணத்தில் வாங்கி வைத்துக் கொண்டு, இணையம் வழி விற்பனை செய்திடும் வர்த்தக அமைப்பாக இவை இயங்கக் கூடாது. (இந்த விதி, ஆப்பிள் போன்ற நிறுவனத்திற்குத் தடையாக இருக்கும். ஏனென்றால், ஆப்பிள் தன் விற்பனை நிலையங்கள் வழியாக மட்டுமே, தன் பொருட்களை விற்பனை செய்திடும். மற்ற நிறுவனங்களின் கடைகள் வழியாகச் செல்வதனை விரும்பாது.) இந்த விதிமுறை மூலம், பொருட்களைத் தயாரிப்பவர்கள், இணையம் வழி மொத்த மற்றும் சில்லரை வர்த்தகத்தில் எந்த அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. இது சில்லரை வர்த்தகர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
இந்தப் புதிய கொள்கை அறிவிப்பிற்கு முன்னரும், இந்தியாவில் புதிய முறை வர்த்தகத்திற்கான சந்தர்ப்பங்கள் உருவாகிப் பலரும் பயன் பெற்று வந்தனர். இந்திய அளவில், வர்த்தக வளாகங்கள் (mall based stores) தொடர் விற்பனை மையங்கள், நிறுவனத்தின் தனி விற்பனை மையம் எனப் பல வகைகளில் வர்த்தக நடைமுறைகள் பெருகின. இவற்றின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 15% முதல் 20% வரை பெருகி வந்தது. இருப்பினும் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் குறைவாகவே (8%) இருந்தது.
இதற்கிடையே, இந்திய இணையம் மற்றும் மொபைல் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 5.2 கோடி புதிய இணையப் பயனாளர்கள் செயல்படத் தொடங்கியதாக அறிவித்தது. அப்போது மொத்தம் 35.2 கோடி பேர் இணையம் பயன்படுத்தினர். இவர்களில் 60% க்கும் மேலாக, 21.3 கோடி பேர் இணையத்தைத் தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாக அணுகினர். இந்த எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிட்டால், ஒவ்வொரு 3 விநாடி காலத்திலும், இந்தியாவில் வாழும் ஒருவர் தங்கள் மொபைல் வழியாக இணைய அனுபவம் பெற்றிருப்பது தெரியவரும்.
இந்த இணைய மக்களால், சில்லரை வர்த்தகமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மொத்த சில்லரை வர்த்தகத்தில், இது 4% முதல் 6% வரையே என்றாலும், இதன் வளர்ச்சி அதிக வேகத்தைக் கொண்டுள்ளதை அனைவரும் கணித்துள்ளனர். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இணைய உலாவில், 62% தேடல்களில், 25 சில்லரை வர்த்தக இணைய தளங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மொத்த இந்திய இணையப் பயனாளர்களில், 12% பேர் இணையதளங்கள் வழியாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இது அடுத்த ஆண்டு, 20% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்ற ஆண்டு, 60 கோடி டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இணைய வர்த்தகம், 2020 ஆம் ஆண்டில், இரு மடங்காக உயரும் என்று அனைவரும் கணித்துள்ளனர்.
இந்தியாவில், இணைய வர்த்தகத்தில், சரியான போட்டி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ப்ளிப்கார்ட், முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதன் தற்போதைய விற்பனை ஆயிரம் கோடி டாலர் மதிப்பளவில் உள்ளது. பத்தாண்டுகளாக இயங்கும் இந்நிறுவனத்தில், பதிந்து வைத்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 4.6 கோடி. இதன் ஊழியர்கள் 33 ஆயிரம். ஒவ்வொரு நாளும், இதன் தளத்தை ஒரு கோடி பேர் பார்த்து வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு, அமேஸான் இந்தியா நிறுவனம் தோன்றியபோது, ப்ளிப்கார்ட் நிலை சற்று தடுமாறியது. மிகப் பெரிய அளவில் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ள அமேஸான் தன் விற்பனை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்க்கும் ஸ்நாப்டீல், அனைத்து வகை பொருட்களையும் விற்பனை செய்திடும் நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இதனிடத்தில் பதிந்துள்ள விற்பனையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டியுள்ளது.
சீனாவில் இயங்கும் சில்லரை இணைய வர்த்தக நிறுவனமான, அலிபாபா, இந்தியாவில் தன் வர்த்தகத்தினைத் தொடங்கி, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து முன்னணி நிறுவனமாக வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவை தவிர, பல மாநிலங்களில், சிறிய அளவில், இணைய தளம் வழியாக சில்லரை வர்த்தகத்தினைப் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

சவால்கள்: இந்தியாவில் இணைய வர்த்தகத்திற்கு இமாலய வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது உண்மையே. ஆனால், அது மிக எளிதாக எட்டக் கூடியதாக இல்லை என்பதே இன்றைய நிலையாக உள்ளது. புதிய வர்த்தக சோதனை முயற்சிகளில் முதலீடு செய்திடும் நிறுவனங்கள், இணைய வர்த்தக நிறுவனங்களிடம் நிதி முதலீடு செய்திடத் தயங்குகின்றன.
அடுத்தபடியாக, ஓர் இணைய வர்த்தகத்திற்குத் தேவையானக் கட்டமைப்பு இந்த நிறுவனங் களிடம் இல்லை. குறிப்பாக, சரக்குகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய வழிமுறைகளை இந்த நிறுவனங்கள் சரியாக வழிமுறைகளை அமைக்கவில்லை.
இணைய வர்த்தக நிறுவனங்களிடம் பதிவு செய்திடும் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் வழங்கிடும் பொருட்களின் தரம் குறித்து வரையறை செய்திடும் விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை.
அடுத்ததாக, அரசு குறிப்பிட்ட அளவிற்கு மேல், விலைக் கழிவினைத் தரக் கூடாது என வரையறை செய்துள்ளது. பொதுவாகவே, இந்த இணைய வர்த்தக நிறுவனங்கள், அதிரடியாக டிஸ்கவுண்ட் அறிவித்து, தங்களை வர்த்தகத்தினைப் பெருக்கிக் கொள்கின்றன. எனவே, அரசின் அறிவிப்பு இவற்றின் உற்சாகத்தைத் தடை செய்வதாக உள்ளது.
இருப்பினும் இந்த தடைகளை எல்லாம் சரி செய்து, வர்த்தகத்தினைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டுதான் உள்ளன இந்த இணைய தள வர்த்தக நிறுவனங்கள். வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில், அரசும் இந்நிறுவனங்களும் செயல்படத் தொடங்கினால், இணைய வர்த்தகத்திற்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X