27 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
00:00

எப்படியாகினும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தான் இலக்கு வைத்த எண்ணிக்கையிலான சாதனங்களில் பதித்திட மைக்ரோசாப்ட் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அண்மையில், விண்டோஸ் 10 சிஸ்டம் 27 கோடி சாதனங்களில் பதியப்பட்டு இயக்கப்படுவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினை பரவலாக்க, Get Windows 10 என்னும் தலைப்பில் பல முயற்சிகளை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து பாப் அப் விண்டோக்களில், விண்டோஸ் 10க்கு மாறச் சொல்லி கேட்கிறது. சில நேரங்களில், பல பயனாளர்களுக்கு இது எரிச்சலைக் கொடுப்பதாக உள்ளது. இது எரிச்சலைக் கொடுப்பதனாலேயே, பல சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள், குடிசைத் தொழில் தயாரிப்புகளைப் போல, பல்வேறு சிறிய சாப்ட்வேர் புரோகிராம்களை, விண்டோஸ் 10 குறித்து வரும் தகவல் விண்டோக்களை நிறுத்தவென தயாரித்து வழங்கி வருகின்றன.
பலர், இது குறித்து குற்றச் சாட்டுகளையும் எடுத்துரைக்கின்றனர். என் நண்பர் ஒருவருக்கு இது போல ஒரு பாப் அப் கட்டச் செய்தி வந்துள்ளது. அந்த நேரத்தில், அவர் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அழுத்திய கீகளைத் தனக்குத்தான் என்ற வகையில் எடுத்துக் கொண்ட, விண்டோஸ் 10 முனைப்பு புரோகிராம், உடனேயே, விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிய ஆரம்பித்துவிட்டது. வேறு வழியின்றி, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம் நண்பர். இடையே நிறுத்த எந்த பட்டனும் தரப்படவில்லை. ஒரு வழியாக, விண்டோஸ் 10 சிஸ்டம், 45 நிமிடங்களுக்குப் பின்னர், அவரின் லேப்டாப் கம்ப்யூட்டரில் பதியப்பட்டது. சில சில்லரைப் பிரச்னைகள் பின்னர் கண்டறியப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளை மேற்கொண்டேன் என்றும் நண்பர் கூறினார்.
இவ்வாறு, பலரின் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 பதியப்பட்டுள்ளது. அதனாலேயே, விண் 10 இயங்கும் சாதனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
தற்போது, இந்த சிஸ்டம் இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கை 27 கோடியாகி, இன்னும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சான்பிரான்சிஸ்கோவில், அண்மையில் நடந்த மைக்ரோசாப்ட் டெவலப்பர் கருத்தரங்கில், இந்த தகவலை, இதன் தலைமை நிர்வாகி மையர்சன் தெரிவித்துள்ளார்.
2018ல், விண்டோஸ் 10 நூறு கோடி சாதனங்களில் இயங்க வேண்டும் என்ற இலக்கினை எப்படியும் எட்டிவிடுவோம் என சத்ய நாதெள்ளாவும் அறிவித்துள்ளார்.
இலவசமாக விண்டோஸ் 10 பெறும் காலம் இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும். ஜூலை 29, 2016க்குப் பின்னர், விண் 10 வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி மட்டுமே பெற வேண்டியதிருக்கும். இந்த சலுகை நீட்டிக்கப்படாது என்று எடுத்துக் கொண்டால், வரும் மாதங்களில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறும் சாதனங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும்.
பெர்சனல் கம்ப்யூட்டர்களின் விற்பனையும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல, வேகத்தில் இல்லை. இப்போது இயங்கும் கம்ப்யூட்டர்களில், 60 கோடி கம்ப்யூட்டர்கள் ஐந்து ஆண்டுக்கு முற்பட்டவை என்றும், அவை விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ளக் கூடிய ஹார்ட்வேர் தேவைகளைக் கொண்டுள்ளது சந்தேகமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பயனாளர்களிடம் விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொள்வதற்கான பயன்களைத் தொடர்ந்து அறிவித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இனி நிறுவன வாடிக்கையாளர்களை, அதே வேகத்துடன் அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒன்றே, தன் இலக்கான நூறு கோடியை எட்ட வழி வகுக்கும் என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X