பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
00:00

பேக் அப் எடுப்பதில் இத்தனை விஷயங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை அனைத்தும் நம் பாதுகாப்பிற்கே என்ற தகவல்கள் தெளிவாக உள்ள கட்டுரை “பெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்” என்ற தலைப்பில் நீங்கள் தந்துள்ள கட்டுரை. பிரவுசர்கள் குறியீடுகள் எல்லாம் பேக் அப் செய்திட வேண்டும் என்ற தகவலைப் படித்த பின்னரே, அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். மிக்க நன்றி.
என். கார்த்திகேயன், தேனி.

பேக் அப் எடுப்பது மிக முக்கியமான ஒன்று எனப் பலருக்குத் தெரியும். ஆனால், எவற்றை எல்லாம் பேக் அப் எடுக்க வேண்டும். இல்லை எனில், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதை உங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே கற்றுக் கொண்டேன். மிக நல்ல கட்டுரை. பாராட்டுகளும் நன்றியும்.
என். கிருபா லஷ்மி, சென்னை.

தற்போதைய ஸ்மார்ட் போன் பயன்பாடு, அவற்றின் விற்பனை குறித்த ஆய்வு தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. இந்தியச் சந்தையில் இவற்றின் தற்போதைய விற்பனை நிலவரம் குறித்த அரிய தகவல்களைக் கொண்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாக இருந்தது.
என். சேகர் பாண்டியன், மதுரை.

விண்டோஸ் 10 உடன் தரப்படும் எட்ஜ் பிரவுசரையும் சுத்தப்படுத்தும் வகையில் சிகிளீனர் தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது என்ற தகவல், அண்மைக் காலத்தில் விண்டோஸ் 10 க்கு மாறியவர்களுக்கு பயனுள்ள தகவலாகும். சி கிளீனர் அதன் தொடக்க காலத்தில் இருந்து, இத்தகைய மேம்பாட்டுடன் அப்கிரேட் செய்து தருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
என். முகமதுபாரூக், புதுச்சேரி.

விண்டோஸ் 10 சிஸ்டம் பதிந்து பயன்படுத்துகிறவர்களுக்கும், அந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகத்துடன் உள்ளவர்களுக்கும் உதவிடும் கட்டுரை எட்ஜ் பிரவுசர் பற்றியது. மற்ற பிரவுசர்களுடன் ஒவ்வொரு வசதியாக ஒப்பிட்டு தந்திருதால், இன்னும் பலர் இதற்காகவே விண்டோஸ் 10க்கு மாறுவார்கள்.
ஆர். உதயசந்திரன், உதகமண்டலம்.

விண்டோஸ் 10ல் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை உருவாக்குவது குறித்து தந்த தகவல் மிகவும் பயனுள்ளது. மிக கடினமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பழைய முறையையே இதுவும் பின்பற்றுகிறது என்பதைக் கூட தெளிவாகவும், விபரமாகவும் தந்துள்ளீர்கள்.
கா.புண்ணிய சேகரன், செங்கல்பட்டு.

குரோவ் அவர்களின் இளம் வயது படமும், பின் நாளில் அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் படமும், அவர் மறைவை ஒட்டி மனதை வருத்தம் அடையச் செய்கிறது. மிக நல்ல முறையில் அவரின் வாழ்வு மற்றும் சாதனைகள் குறித்த தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.
எம். எஸ். அருள் பிரகாஷ், திருப்பூர்.

இணையப் பயனாளர்களில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான தகவலே. ஆனால், இன்னும் கிராமப் புறங்களில் மக்கள் இணையம் குறித்து அறியாமலேயே இருக்கிறார்கள். தற்போது, பொறியியல் கல்லூரி விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் மக்கள் கட்டாயமாக, இணையத்தினைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஜே. என். ஸ்ரீதர் வெங்கடேசன், திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.