மைக்ரோசாப்ட் லூமியா 650 டூயல் சிம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
00:00

மைக்ரோசாப்ட் தற்சமயம், தன்னுடைய ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை. தன்னுடைய முதன்மை வர்த்தகத்திலேயே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இன்னும் ஒரு ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. அது, இரண்டு சிம் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட் போன் வரிசையில் வந்த லூமியா 650 ஸ்மார்ட் போன். இந்த போன், அமெரிக்காவிலும் கனடாவிலும் வெளியான பின்னர், அமேஸான் தளம் இதன் விற்பனை குறித்து அறிவிப்பினை வழங்கியது. அமேஸான் இந்தியா தளத்தில், ரூ.16,599
(16 ஜி.பி. வெள்ளை வண்ணம்) என அறிவிக்கப்பட்டது. இதே போன், கருப்பு வண்ணத்திலானதின் விலை ரூ. 16,700. இந்த ஸ்மார்ட் போன் விற்பனை தகவல், அமேஸான் தளத்தின் மைக்ரோசாப்ட் ஸ்டோரிலிருந்து தரப்படாமல், இன்னொரு சில்லரை விற்பனை நிறுவனத்திலிருந்து கிடைக்கிறது.
சென்ற பிப்ரவரி மாதமே, இந்த ஸ்மார்ட் போன் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரும், இந்தியாவில் இதன் விற்பனை குறித்து அறிவிக்கப்படாதது கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.
இந்த விலை சற்று அதிகமாக உள்ளது என இப்பிரிவில் ஆய்வு மேற்கொள்பவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போன், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கென இல்லாமல், வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கானது என்று வகைப்படுத்தப்பட்டது. ஆனால், விண்டோஸ் இயக்கத்தில் உள்ள மிக முக்கியமானதும், மதிப்பு மிக்கதுமான ஒரு வசதியான Continuum. இதில் தரப்படவில்லை.
அது மட்டுமில்லாமல், இது பட்ஜெட் விலை போன் என்பதால், Qualcomm Snapdragon 212 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரியும் 1 ஜி.பி. மட்டுமே. ஆனால், 5 அங்குல அளவில் OLED 720p display கொண்ட திரை தரப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமராவும் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 8 எம்.பி. திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 முதல் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கலாம்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X