இன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது. வரும் 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 11 முதல், விஸ்டாவினை முழுமையாக மைக்ரோசாப்ட் கைவிட்டு விடும். எனவே, இந்த ஓராண்டு காலத்திற்குள், விண்டோஸ் விஸ்டா பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 10 சிஸ்டம் ஒன்றுக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
2012 ஆம் ஆண்டிலேயே, ஏப்ரல் 10 முதல், மைக்ரோசாப்ட் விஸ்டாவிற்கான முதன்மை ஆதரவினை விலக்கிக் கொண்டு, நீட்டிக்கப்பட்ட ஆதரவினை மட்டும் வழங்கி வந்தது. தற்போது நீட்டிக்கப்பட்ட ஆதரவும் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான எந்தவிதமான பாதுகாப்பு கோப்புகளும் வழங்கப்பட மாட்டாது.
எனவே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை குறி வைத்து அனுப்பப்படும் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளிடமிருந்து அல்லது இதில் காணப்படும் பிழைக் குறியீடுகளைப் பயன்படுத்தும் ஹேக்கர்களிடமிருந்து, விஸ்டாவிற்கு பாதுகாப்பு பைல்கள் கிடைக்காது.
அதிர்ஷ்டவசமாக, விஸ்டா மிகவும் குறைவான கம்ப்யூட்டர்களிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த கம்ப்யூட்டர்களில், இது 1.41% சதவீத அளவிலேயே இயங்கி வருகிறது. ஏனென்றால், விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் “மிகப் பெரிய தவறாக வடிவமைக்கப்பட்ட சிஸ்டம்” எனப் பெயர் எடுத்ததாகும். விஸ்டாவைப் பற்றிக் கூறுகையில், அது மோசமானதா அல்லது விண்டோஸ் 8 மோசமானதா என்ற விவாதம் தான் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், இன்னும் 2001ல் அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி, இன்னும் மக்களிடையே பிரபலமான சிஸ்டமாக இயங்கி வருகிறது. 10.90% கம்ப்யூட்டர்களை இது இயக்கி வருகிறது.
விஸ்டா பயன்படுத்துவோருக்கான புதிய வாய்ப்புகள் மிகவும் குறைவே. மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகத் தரும் முடிவெடுக்கையில், விஸ்டா சிஸ்டத்தினை விட்டுவிட்டது. எனவே, விஸ்டா வைத்துள்ளவர்கள், கட்டணம் செலுத்தி மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டம் பெற முடியும். அல்லது, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1க்கு, ஜூலை 29க்குள் மாறிக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 10க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X