வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
00:00

மொத்த பக்க எண்ணிக்கைவேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. Text குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. அடுத்து Categories கீழ்விரி பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Field Names என்பதில் NumPages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து டயலாக் பாக்ஸை மூடி, பீல்டை இணைக்க ஓகே, கிளிக் செய்திடவும்.
இனி, மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்டப்படும்.

குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட
வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். இங்கு Editing groupல் Find tool அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். பின் Advanced Find என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். அதில் Find என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
2. More என்ற பட்டன் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸின் விரிவான தோற்றத்தினைக் காட்டும். Find What கட்டத்தில் உள்ள எதனையும் நீக்கிவிடவும். No Formatting பட்டன் இருந்தால் அதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்து, பின்னர், Font என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Find Font என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். இப்போது, Effects என்ற பிரிவில் Superscript, Subscript போன்றவை ஷேட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது, இந்த பண்புகள் எல்லாம், தேடலில் ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பொருள்.
4. அடுத்து நீங்கள் தேடும் டெக்ஸ்ட்டில் இருக்க வேண்டிய பண்புகள் (character attributes) எவை என்று தேர்ந்தெடுக்கவும். இந்த பண்புகளின் பெயர்கள் அடுத்து இருக்க வேண்டிய கட் ட த்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்க மறக்க வேண்டாம்.
5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும்.

டாகுமெண்ட்டில் சப்ஸ்கிரிப்ட் / சூப்பர் ஸ்கிரிப்ட்
வேர்டில் சில வேளைகளில் பார்முலாக்கள் மற்றும் குறியீடுகள் அமைக்கையில் சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட், (Subscript, Superscript) அதாவது சொல்லுக்கு மேலாகவும் கீழாகவும் சிறிய அளவில் எண் அல்லது எழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு Font மெனு சென்று அங்கிருக்கும் கட்டங்களை டிக் செய்து அமைக்க வேண்டும். பின் அதனை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுருக்கு வழி ஒன்று உள்ளது. சொல்லுக்கு அருகே அமைத்திட வேண்டிய எண் அல்லது எழுத்தை அமைத்திடுங்கள். பின் அதனைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + =ஆகியவற்றை ஒரு சேர அழுத்தினால் சூப்பர் ஸ்கிரிப்டும் Ctrl + = அழுத்தினால் சப் ஸ்கிரிப்டும் கிடைக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X