பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
00:00

இன்னும் பலருக்கு இணையம் என்ற சொல்லே தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இப்போது இணையத்தினைக் கற்று தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவில்லை என்றால், பின் நாளில், இத்தகையோரின் நிலை மிகவும் மோசமாகவும், இரு வேறு பிரிவு வாழ்க்கை வாழும் மக்களிடையே இடைவெளி அதிகமாகவும் இருக்கும். எனவே, அரசுகளும், பெரிய நிறுவனங்களும் இந்த வெற்றிடத்தினையும், இடைவெளியையும் நீக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்தியாவில் இந்த நிலை எப்படி உள்ளது என உங்களிடமிருந்து கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
ஏ.எம். காதர் பாட்சா, புதுச்சேரி.

மிக அருமையாக, ஆப்பிள் நிறுவனத்தின் நாற்பதாண்டு இயக்க சரித்திரத்தை உங்கள் கட்டுரை தருகிறது. மாணவர்களுக்கும், தொழில் தொடங்குபவர்களுக்கும், ஆப்பிள் நிறுவனம் வளர்ந்த விதம் அறிய நல்ல தகவல் தொகுப்பு. முதலில் தொடங்கி, பின் விலகி, மீண்டும் அதன் தொய்வுற்ற நேரத்தில் தலைமைப் பொறுப்பினை ஏற்று, உலகம் புகழும் அளவில், ஆப்பிள் நிறுவனத்தை உயர்த்திய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் சாதனை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது.
பழ. சாத்தப்பன், காரைக்குடி.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு சாதனமும், முற்றிலும் புதியதாக, அனைவரும் பயன்படுத்தியே ஆக வேண்டியதாக அமைந்தது ஓர் அறிவியல் புரட்சியாகும். இன்று, ஆப்பிள் நிறுவனத்திற்கான தனி மதிப்பும், அதனைப் போல் இன்னொரு வடிவமைப்பு இயலாதது என்பதுவும் ஆப்பிள் நிறுவனத்தின் பெருமையாகும். கட்டுரை ஆசிரியர் இதனைச் சுருக்கமாகப் பல இடங்களில் எடுத்துரைத்துள்ளார். நன்றி.
என். ஜாபர் அலி, காரைக்கால்.

ராம் நினைவகத்தின் இயக்க தன்மை, மின் சக்தியைச் சார்ந்து இயங்கும் தன்மை ஆகியவற்றைத் தெளிவாக விளக்கியது நீங்கள் ராம் நினைவகம் குறித்துத் தந்துள்ள கட்டுரை. சிறப்பான பாடக் கட்டுரையாகவும் உள்ளது.
ஆர். மஹேஸ்வரி ரமேஷ், சென்னை.

மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ப்ராசசர் குறித்து விளக்கம் தரும் வகையில் தரப்பட்டுள்ள கட்டுரை, நிறைய தகவல்களைத் தருகிறது. ப்ராசசரின் வேகம் மற்றும் அதன் சிறப்பு செயல் தன்மை குறித்து அறிய ஏதேனும் சாப்ட்வேர் உள்ளதா எனவும் விளக்கி இருக்கலாம்.
ஆர். கே. ஹரிதாஸ், திருப்பூர்.

கம்ப்யூட்டருக்கான ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. போர்ட்டில் வைத்துப் பயன்படுத்தலாமா! வியப்பாய் உள்ளதே. வாசகரின் கேள்விக்கு அளித்துள்ள பதிலில், எத்தகைய புதிய தகவல். கம்ப்யூட்டர் மலர் எப்போதும் அப்டேட் ஆக இருப்பது, அதன் சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.
ஆர். கணேசன், சீர்காழி.

சிறிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில், வர்த்தக இணைய தள நிறுவனங்களை அமைத்திட, என்ன என்ன தேவைப்படும் எனத் தெளிவான கட்டுரை ஒன்று தரவும். பலரின் வாழ்வில் இது ஒளியேற்றும் என உறுதியாக நம்பலாம்.
ஜே. பத்மா ராஜேந்திரன், மதுரை.

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறுவது குறித்த சாதகமான அம்சங்களைத் தருகிறீர்கள். பலரும் மாறிவிட்டோம். இனி இதில் பயன்படுத்தக் கூடிய டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் அதிக எண்ணிக்கையில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
ஆர். சோழ ராஜன், மேலூர்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X