கரப்பான் பூச்சியா விண்டோஸ் எக்ஸ்பி?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:00

எத்தனை அடிகளை வாங்கினாலும், கரப்பான் பூச்சி விரைவில் சாகாமல், அதன் கால்களை ஆட்டிக் கொண்டு இருப்பதனை நாம் அன்றாடம் பார்க்கிறோம். உலகமே அழியும் நிலை வந்தாலும், இறுதியாக உயிர்வாழப் போவது கரப்பான் பூச்சி எனப் பலர் வியந்து கூறுவார்கள். அதே போல, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உதவிக் கோப்புகள் வழங்குவதை நிறுத்தி, மைக்ரோசாப்ட் அதனைக் கைவிட்ட பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்னும் பயன்படுத்தப் படுகிறது. பன்னாட்டளவில், 18 கோடியே 10 லட்சம் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி இன்றைய நிலையில் பயன்படுத்தப்படுவதாக Net Applications என்னும் மையம் எடுத்த ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இதனைப் பயன்படுத்துபவர்களை, இந்த சிஸ்டத்திலிருந்து பிரிப்பது இயலாத செயல் என்று இந்தப் பிரிவில் இயங்குபவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சீனாவில், இதன் பயன்பாடு மிக அதிகம். அங்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இது இரண்டாவது இடத்தினைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8லிருந்து, எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தன் முழு உதவியையும் மைக்ரோசாப்ட் நிறுத்தியது. அதன் பின்னர், இதனைப் பயன்படுத்தியவர்கள், கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குப் பாதுகாப்பு கருதி, வேறு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறினார்கள். பலர், 'பாதுகாப்பு தரப்படவில்லை என்றாலும் பரவாயில்லை, இதுவே போதும்' என்ற முடிவுடன் தொடர்ந்து இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மொத்த கம்ப்யூட்டர் பயனாளர்களில், 11% பேர் ஆவார்கள். விண்டோஸ் பயன்படுத்துபவர்களில், 12% பேர் இன்னும் எக்ஸ்பியைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இயக்கி வருகின்றனர். உலக அளவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 91.5% கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது. விண்டோஸ் இயக்கும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 150 கோடி.
விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்காவது இடத்தினைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம் 86.1 கோடி கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 10 சிஸ்டம் 23.5 கோடி கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 மற்றும் 8.1 இணைந்து 19.9 கோடி கம்ப்யூட்டர்களிலும் இயங்குகின்றன.
சீனாவில் ஐரிஷ் நிறுவனமான StatCounter நிறுவனம் நடத்திய ஆய்வில், எக்ஸ்பி சிஸ்டம் அங்கு உள்ள கம்ப்யூட்டர்களில், 26.2% பயன்படுத்தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. சீனர்கள் அதிகம் பயன்படுத்தும் 'பைடு' (Baidu) தேடல் சாதனத்தின் நிறுவனத்துடன், மைக்ரோசாப்ட் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, 'பைடு' தேடல் சாதனம், பயனாளர்களை விண்டோஸ் 10க்கு மாறுவதற்குத் தூண்டியது. இதற்குப் பிரதிபலனாக, மைக்ரோசாப்ட் 'பைடு' தேடல் சாதனத்தை, விண்டோஸ் 10ல் மாறா நிலை தேடல் சாதனமாக, சீனாவில் அமைத்தது. இருந்தாலும், விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வது மிக மிக மெதுவாகவே, சீனாவில் நடந்து வருகிறது. மார்ச், 2017 வரை எக்ஸ்பி 5% கம்ப்யூட்டர்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து மக்கள் விடுபடாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அடுத்த மேம்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 10 க்கு மாறிக் கொள்ள, ஹார்ட்வேர் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். புதிய கம்ப்யூட்டர் ஒன்றினை வாங்கிப் பயன்படுத்த, மக்கள் தயாராக இல்லை.
மேலும், நேரடியாக, விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ள முடியாது. விண்டோஸ் 7க்கு மாற்றிக் கொண்ட பின்னரே, விண்டோஸ் 10க்கு மாற முடியும். இதுவும் ஒரு தடை கல்லாக உள்ளது. இருப்பினும், விண்டோஸ் எக்ஸ்பி, வரும் ஆண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஓரிலக்க சதவீதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விண்டோஸ் 7 இன்னும் அதிகம் பயன்படுத்தப்படும் விண்டோஸ் சிஸ்டமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. NetMarketShare கணிப்புபடி, 52% கம்ப்யூட்டர்களில், விண் 7 இயங்கி வருகிறது.
விண்டோஸ் 1-0, மொத்த கம்ப்யூட்டர்களில் 14% இடத்தைக் கொண்டுள்ளது. விண் 10 இலவசமாகப் பெறும் இறுதி நாள் நெருங்கி வருவதால், வரும் மூன்று மாதங்களில், மிக அதிகமான கம்ப்யூட்டர்களில், விண் 10 இடம் பெறுவதைப் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X