குழந்தைகளையும் போன்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:00

இன்று நம் அனைவரின் இல்லங்களிலும் உள்ள நம் ஸ்மார்ட் போன்கள், சிறுவர்களை இழுக்கும் காந்தங்களாக மாறி வருகின்றன. இன்றைய சிறுவர்கள், ஏன் ஓராண்டு முடித்த குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களை அதிகம் விரும்புகின்றனர். பலர், ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி, விளையாடுகின்றனர். போட்டோ எடுக்கின்றனர். அதே நேரத்தில், அவர்கள் பிரச்னைகளையும் இழுத்துவிடுகின்றனர்.
ஸ்மார்ட் போனில், விளையாட உங்களால் அனுமதி தரப்பட்ட சிறுவர்கள் தாங்கள் அறியாமலேயே, ஏதேனும் பொருட்களை வாங்கலாம். விளையாட்டுகளின் இடையே, இது போல, சில பொருட்கள் அல்லது விளையாட்டினைத் தரும் புரோகிராம்கள் வேண்டுமா என்று விளம்பரங்கள் வருகின்றன.
நாமாக இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்துவோம். ஆனால், சிறுவர்கள் அதன் பின்னணி அறியாமல், அதற்கு சரி என்று கிளிக் செய்தால், அதற்கான பணம் ஏற்கனவே நீங்கள் பதிந்து வைத்துள்ள அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். சில சிறுவர்கள், மேல் நாடுகளில், நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து, தேவைப்படாத திரைப்படங்களை டவுண்லோட் செய்துவிடுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சில சிறுவர்கள், நம் பேஸ்புக் தளத்தினைத் திறந்து, நாம் அறியாதவர்களை உரையாட அழைத்திடும் நிகழ்வுகளும் நடந்து வருவதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்குத் தீர்வு அளிக்கும் வகையில், கூகுள் பிளே ஸ்டோரில், Kids Place என்னும் அப்ளிகேஷன் புரோகிராம் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து, நம் ஸ்மார்ட் போனில் பதிந்து கொண்டால், சிறுவர்கள், நாம் அனுமதிக்கும் தளங்கள் மட்டுமே சென்று, குறிப்பிட்ட செயல்பாடுகளில்மட்டுமே ஈடுபட முடியும். அதற்கேற்ற வகையில் ஹோம் ஸ்கிரீன் ஒன்று மட்டுமே, சிறுவர்களுக்குக் காட்டப்படும். இந்த திரையில், நாம் அனுமதிக்கும் அப்ளிகேஷன்கள் மட்டும் காட்டப்படும்.
அவர்களால், அப்ளிகேஷன் ஸ்டோருக்குச் செல்ல முடியாது. இதன் மூலம் அவர்கள் அறியாமல் அல்லது அறிந்து கூட எந்த அப்ளிகேஷனையும் விலைக்கு வாங்க முடியாது.
நீங்கள் முடிவு செய்தால், வை பி இணைப்பினைக் கூட நிறுத்தி வைக்கலாம். டேட்டா திட்டத்தினை முடக்கி, இணைய இணைப்பு கிடைக்காதபடி செய்திடலாம். போனுக்கு வரும் அழைப்புகளிலிருந்தும் சிறுவர்களை விலக்கி வைக்கலாம்.இவை மட்டுமின்றி, சிறுவர்கள் குறிப்பிட்ட நேர அளவில் மட்டுமே விளையாடலாம் என வரையறை செய்திடலாம். எந்த நேரத்தில் அவர்கள் விளையாடலாம் என்பதனையும் குறித்து வைக்கலாம். Kids Place இலவசமாக கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X