பெர்சனல் பிரேக்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:00

விண்டோஸ் இயக்கத்தின் மிகச் சிறந்த வசதியே அதன் ஸ்டார்ட் மெனு. அதனை விண்டோஸ் 8ல் நீக்கியதால் தான், ஸ்டார்ட் மெனுவில் பழக்கப்பட்ட மக்கள், சிஸ்டத்தினையே ஒதுக்கித் தள்ளினார்கள். பின், மீண்டும் மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப, தன் விண்டோஸ் 10ல் இதனைப் புதிய அம்சங்களுடன் கொண்டு வந்துள்ளது. இந்த வடிவமைப்பு உருவானதை, மிக அழகாக, ஒரு சரித்திரக் கட்டுரை போல தந்தது மிக அருமை. நன்றி.
என். ஜெயப்பிரகாஷ், சேலம்.

முதலில் நீக்கிய தன் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 10ல் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மைக்ரோசாப்ட் கூடுதல் வசதிகளுடன் கொண்டு வந்துள்ளது. அதன் சிறப்புகளை விளக்கமாக தந்துள்ளது பயனுள்ள டிப்ஸ் ஆக அமைந்துள்ளது.
என். ஆர். மகேஸ்வரன், உசிலம்பட்டி.

''பேஸ்புக்கில் செஸ் விளையாடலாம்” என்ற தலைப்பு வியப்பினைத் தந்தது. எத்தனை ஆண்டுகளாக, பேஸ்புக்கினைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால், இது தெரியவில்லையே எனப் பலரும் உங்கள் கட்டுரையினைப் படித்த பின்னர் ஆச்சரியப்பட்டுள்ளனர். இப்போது விளையாடத் தொடங்கியுள்ளனர். உங்களுக்கு மட்டும் இது எப்படி தெரிந்தது? அது மட்டுமின்றி, அதனை விளையாடத் தேவையான குறிப்புகளையும் ஒரு பாடக் கட்டுரை போலத் தந்துள்ளீர்கள். பாராட்டுகள் சார். இப்படியே, இன்னும் பல புதிய புதைந்து கிடக்கும் தகவல்களைத் தரவும்.
பேரா. எஸ். பரமசிவம், மதுரை.

டாகுமெண்ட்டில் சப் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட் அமைப்பது குறித்த டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
என். மஞ்சுளா தேவி, கடலூர்.

இணைய வழி வர்த்தகத்திற்கான அரசின் ஆதரவும், வாய்ப்புகளும் கூடியுள்ள நிலையை வாய்ப்புகள் தலைப்பில் நன்றாகவும் தெளிவாகவும் தந்துள்ளீர்கள். சவால்கள் என்ற பகுதியில் அரசு மக்களைக் காப்பாற்றும் வகையில் அறிவித்துள்ள விதிமுறைகளையும், அவை எப்படி ஒரு நல்ல முறையிலான வர்த்தகத்தினை வளர்க்கும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது மிக அருமை.
எஸ்.நிரஞ்சன், கோயமுத்தூர்.

செல்லினம்' நம் ஸ்மார்ட் போன்களின் தமிழ்ச் சங்காக என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஸ்மார்ட் போன்களில் இன்று தமிழில் எளிதாக எழுத முடிகிறதென்றால், அதற்குக் காரணம் செல்லினம் தான். இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 70%க்கு மேல் இதன் பயன்பாடு உள்ளது என்றால், அதற்குக் காரணம் அதன் எளிமையும், சொல்லை முன் கூட்டியே தரும் வசதியும் தான். இதனைத் தந்த முத்து நெடுமாறன் அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஆர். விஜயராணி, திருச்சி.

இணையத்தில் ஒளிந்து கொள்ளும் வசதிகள் குறித்த கட்டுரையைப் படித்துவிட்டு, அதனைத் தீய செயல்பாடுகளுக்குத் தானே நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். நாணயத்தின் இரு பக்கம் போல இதில் நன்மையும் உள்ளது. தீமையும் உள்ளது. நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.
தெ. சு. மஹாதேவன், கும்பகோணம்.

விண்டோஸ் 10ல் புதியது என்ன? என்ற வாசகரின் கேள்விக்கு, கோபப்படாமல், புதிய வசதிகளில் முக்கியமானவற்றை எடுத்துரைத்தது மிகவும் அருமை. உங்களின் கடமை வழுவாத எழுத்துக்கு ஒரு வணக்கம்.
எஸ். ஆரோக்கியநாதன், புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X