ரூ.25,000க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:00

கம்ப்யூட்டர் மலரில், வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க, மொபைல் மலர் பிரிவில், பட்ஜெட் விலை போன்கள், புதிய வரவுகள், பெரிய நிறுவனங்களின் புதிய போன்கள் எனப் பல பிரிவுகளில், ஸ்மார்ட் போன்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இங்கு ரூ.25,000க்கும் குறைவான விலையில், மொபைல் போன் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களில், மக்கள் ஆதரவு பெற்ற சில போன்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. இவை எந்த தகுதியின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படவில்லை. சந்தையில் இவற்றிற்குக் கிடைக்கும் வரவேற்பு, விற்பனை அடிப்படையில் தகவல்கள் பெறப்பட்டு தரப்படுகின்றன.

ஸியோமி எம்.ஐ. 5 (Xiaomi Mi 5): முதன் முதலில் Snapdragon 820 ப்ராசசருடன் இந்தியாவில் அறிமுகமான ஸ்மார்ட் போன் ஸியோமி எம்.ஐ. 5. தொழில் நுட்ப ரீதியில் ஆய்வு செய்து ஸ்மார்ட் போன்களைத் தேர்ந்தெடுப்பவர்களின் ஆதரவினை இதனால் பெற்றது. 3 ஜி.பி. ராம் மெமரி, 5.15 அங்குல அளவில் திரை, பின்புறமாக 16 எம்.பி. திறன் கொண்ட கேமரா, இரண்டு சிம் இயக்கம், 4ஜி எல்.டி.இ. சப்போர்ட் எனப் பல புதிய நவீன வசதிகளைக் கொண்டதாக இது உள்ளது. இதன் மாடல்களில், தற்போது 32 ஜி.பி. மாடல் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 64 மற்றும் 128 ஜி.பி. மாடல்கள் இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படவில்லை. மெமரி கார்ட் ஸ்லாட் இல்லாததால், இதன் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்த முடியாது என்பது ஒரு குறை. இதன் விலை ரூ. 24,999. 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி கொண்ட ஸ்மார்ட் போனுக்கு இது சற்று அதிகம் எனப் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கூகுள் (எல்.ஜி.) நெக்சஸ் போன்கள்: பொதுவாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் போன்கள் விரும்புபவர்கள், நெக்சஸ் போன்களுக்கு முதலிடம் கொடுப்பார்கள். ஆனால், இவற்றில் பொதுவாக கேமரா மற்றும் பேட்டரி சரியாக இருப்பதில்லை என்ற புகார்கள் இருக்கும். இந்த குறைபாடுகள் இல்லாமல் விற்பனைக்கு அறிமுகமான நெக்சஸ் போன்கள் Nexus 5X and Nexus 6P ஆகும். Nexus 5X போனில், 12.5 எம்.பி. திறன் கொண்ட சிறப்பான கேமரா தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் இடைமுகம் மற்றும் Snapdragon 808 hexa-core இந்த போன்களின் கூடுதல் சிறப்புகளாகும்.
ஆனால், இந்த மாடல் போன்களிலும், கூடுதல் மெமரி மேற்கொள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்படவில்லை. லவுட் ஸ்பீக்கரின் ஒலி எதிர்பார்த்த அளவில் இல்லை. USB Type-C போர்ட் தரப்பட்டுள்ளது. ஆனால், கம்ப்யூட்டரில் இதனை இணைக்கத் தேவையான கேபிள் தரப்படாததால், தனியாக ஒன்று வாங்க வேண்டியுள்ளது. இவை வெளியான போது அறிவிக்கப்பட்ட விலை ரூ. 32,000 மற்றும் ரூ. 36,000 ஆக இருந்தாலும், தற்போது ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவாகக் கிடைக்கின்றன.

ஒன் ப்ளஸ் 2: மிகப் பிரபலமாக பேசப்பட்ட, புகழப்பட்ட ஒன் ப்ளஸ் போனை அடுத்து வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் பல திறன்களைக் கொண்டிருக்கும் எனப் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. இதன் ராம் மெமரி 4 ஜி.பி. இதன் ப்ராசசர் Snapdragon 810 2.1. அடுத்த சிறப்பு இதன் 13 எம்.பி. கேமரா. 5.5 அங்குல அளவில் திரை. டூயல் சிம் செயல்பாடு மற்றும் 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க் இணைப்பு என பல சிறப்பம்சங்கள் உள்ளன. யு.எஸ்.பி. டைப் 4 போர்ட் இருந்தாலும், அதனை முழுமையாகப் பயன்படுத்த இயலவில்லை. பேட்டரியின் வாழ்நாளும் மிகவும் குறைவாகவே உள்ளதாகப் பலர் தெரிவித்துள்ளனர். இதன் விலை ரூ. 22,999 (64 ஜி.பி.) மற்றும் ரூ.20,999 (16 ஜி.பி.).

லெனோவா வைப் எக்ஸ் 3: இந்த ஸ்மார்ட் போன் ரூ.19,999 என்ற விலைக் குறியீட்டுடன் வெளியாகிப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் ப்ராசசர் Snapdragon 808 hexa-core என்பதுவும் இதன் சிறப்பாக உள்ளது. 4ஜி.பி. ராம் மெமரியுடன், 4K விடியோ பதிவினைச் சிறப்பாகத் தருகிறது. இதன் ஸ்டீரீயோ ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ தன்மை மிகவும் அருமையாக உள்ளதாக, ஆடியோ ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டூயல் சிம் கார்ட் போர்ட் இருந்தாலும், அதில் ஒன்றில், மெமரி கார்ட் பயன்படுத்த விட்டிருப்பது சற்று எதிர்பாரா ஏமாற்றத்தைத் தருகிறது. இதன் வடிவமைப்பும், எடையும் பயனாளர்களைத் திகைக்க வைத்துள்ளது. இதன் விலை இந்த வரிசையில் வரும் போன்களைக் காட்டிலும் மிகவும் குறைவான விலையாக இருப்பதால், பலரின் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா இஸட் 3 ப்ளஸ்: சோனி நிறுவனத்தின் இஸட் 3 வரிசையில் வெளியான போன்களுக்கு இணையானதாக இந்த போன் அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், பல சிறப்புகளுக்காக, விற்பனையில் இடம் பிடித்துள்ளது. முதலில் மிக அதிகமான விலை குறிக்கப்பட்டிருந்தாலும், பின்னர், விலை குறைக்கப்பட்டதனால், மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.
இந்த ஸ்மார்ட் போனில் மிக சக்தி வாய்ந்த இயக்கத்தைத் தரும் Snapdragon 810 processor ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 3 ஜி.பி. நீர் புகாத வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு. சிறப்பான கேமரா, 32 ஜி.பி. ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி. கார்ட் வசதி ஆகியவையும் அனைவரின் கவனத்தை ஈர்க்கின்றன.
ஆனால், முந்தைய போன்களில் தரப்பட்ட பேட்டரியைப் போல இல்லாமல், இதன் பேட்டரி சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளதாகப் பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விலை தற்போது ரூ. 24,500 என அறிவிக்கப்பட்டாலும், விற்பனை மையங்களில், நிலையான விலை என எதுவும் இல்லை என்றே தெரிகிறது.

மோட்டோ எக்ஸ் பிளே: மோட்டோ எக்ஸ் வரிசையில் வந்த இந்த ஸ்மார்ட் போன், மோட்டோ எக்ஸ் வரிசையில் அறிமுகமாகியுள்ள கீழ் நிலை போனாகும். இதன் வடிவமைப்பு, இரண்டு சிம் பயன்பாடு, 4ஜி நெட்வொர்க் இணைப்பு, மைக்ரோ எஸ்.டி.கார்ட் போர்ட், கேமராவின் சிறப்பான பயன்பாடு ஆகியவை இந்த விலையில் வரும் ஸ்மார்ட் போன்களில் காணப்படாத அம்சங்களாகும்.
இதில் தரப்பட்டுள்ள ப்ராசசர் சற்று பழையதாகும். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. என்பது ஏமாற்றத்தைத் தருவதாகப் பயனாளர்கள் கூறுகின்றனர். ஸ்பீக்கர் இன்னும் சற்று சிறப்பாக அமைந்திருக்கலாம். இதன் 16 ஜி.பி. மாடல் போன் ரூ.16,499 மற்றும் 32 ஜி.பி. ரூ. 17,999 என, டர்போ சார்ஜருடன் விலையிடப்பட்டுள்ளன.
சந்தையில், இதே விலை அமைப்பில் இன்னும் சில போன்கள் உள்ளன. மொத்தத்தில், மக்களிடம் வரவேற்பினைப் பெற்ற மாடல்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் விலையும் சற்றேறக் குறைய இருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X