மேலும் 9 ஸ்டேஷன்களில் இலவச வை பி இணைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2016
00:00

அண்மையில், அதிவேக வை பி இணைய இணைப்பினை இலவசமாக வழங்கும் திட்டத்தில், மேலும் 9 ரயில்வே ஸ்டேஷன்களை கூகுள் இணைத்துள்ளது. போபால், புவனேஸ்வர், எர்ணாகுளம் சந்திப்பு, கச்சேகுடா, புனே, ரெய்பூர், ராஞ்சி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்களில், இந்த வசதி தரப்பட்டுள்ளது. மொத்தம் 400 பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில், இணைய இணைப்பிற்கான வை பி அலைவரிசை இணைப்பினை, பொதுமக்களுக்கு தரும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்ற டிசம்பர் மாதம், இந்தியாவிற்கு வருகை புரிந்த கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை, இந்த திட்டத்தினை அமல்படுத்த இருப்பதாக அறிவித்தார். 2016 ஆம் ஆண்டு முடிவிற்குள், முதல் கட்டமாக 100 ஸ்டேஷன்களில் இணைப்பு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய ரயில்வேக்குச் சொந்தமான ரெயில் டெல் (RailTel) நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி மாதம், முதலில் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் இத்திடம் தொடங்கப்பட்டது. ரெயில்டெல் நிறுவனம் ஏற்கனவே ரயில்வே ட்ராக் ஓரமாக 26,000 மைல் தூரத்திற்கு கண்ணாடி நார் இழையிலான கட்டமைப்பினை தொலை தொடர்பிற்கு அமைத்துள்ளது. இதே கட்டமைப்பினை கூகுள் தன் வை பி திட்டத்திற்கும் பயன்படுத்துகிறது. இவற்றின் துணையுடன், ரயில்வே ஸ்டேஷன்களில் Wireless Access Points அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு ரயில்வே நிலையங்களில் மட்டும் இலவச இணைய இணைப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. ட்ரெயின்களிலும் இந்த Wireless Access Points அமைக்கப்படும் பட்சத்தில், பயணிக்கும் போதும் மக்கள் இணைய இணைப்பினைப் பெற இயலும்.
பிரதம மந்திரி மோடி அவர்களின் “டிஜிட்டல் இந்தியாவின்” ஓர் அம்சமாக இந்திய இணையக் கட்டமைப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட 2030 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டத்தில், நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகளில், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதும் ஒன்றாகும். இதன் ஓர் அங்கமாக, 2020 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்து வரும் நாடுகளில், அனைவரும் பெறும் வகையிலான இணைய இணைப்பு வழங்குவதனை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது. கூகுள் தரும் இலவச இணைப்பும் இந்த திட்டத்தில் இணைந்ததாகும்.
பிரதமர் மோடி, சென்ற 2015 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டிற்குச் சென்ற போது, பேஸ்புக், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்குச் சென்று, இணைய விரிவாக்கத் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கு எப்படி உதவ முடியும் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
உலக அளவில், இந்தியா 130 கோடி மக்களுடன், அதிக மக்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இணையப் பயன்பாட்டினை 19% மக்கள் மட்டுமே கொண்டுள்ளனர். இது உலக அளவில் மிகவும் குறைவாகும். ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இணைய கட்டமைப்பு விரிவாக்கத்தினால், இணையத் தொடர்பு உள்ள மக்களின் எண்ணிக்கை விரைவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில் மட்டும், 10 கோடி பேர் முதல் முறையாக இந்தியாவில் இணையப் பயன்பாட்டிற்கு அறிமுகமாகியுள்ளனர். இது வரும் 2018ல், 40 கோடியாக உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச இணைப்பு தருவதில் முனைந்துள்ள கூகுள் நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்டுள்ள ”லூன் திட்டமும்” இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விண்ணில் பலூன்களைப் பறக்கவிட்டு, அதிலிருந்து தகவல் தொடர்பு கட்டமைப்பில் இதுவரை இணைக்கப்படாத கிராமங்களுக்கு இணைய இணைப்பிற்கான அலைக்கற்றைகளை வழங்குவது இந்த திட்டத்தின் செயல்பாடாகும். இந்த ஆண்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரலாம். இவ்வாறு பறக்கவிடும் இணைய பலூன்கள், ஏறத்தாழ 100 நாட்கள் பறக்கும். விண்ணில் இருந்தவாறு, குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு இலவச இணைய இணைப்பினை வழங்கும். இது தரை வழி இணைப்பினைக் காட்டிலும் அதிக வேகமும், எளிமையும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X