பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2016
00:00

ஸ்மார்ட் போன்களில், நாம் அனைவரும் விரும்புவது, கம்ப்யூட்டரில் உள்ளது போன்ற வேர்ட் ப்ராசசர் புரோகிராம் தான். சின்ன சின்ன டாகுமெண்ட்களை உருவாக்கவும், நமக்கு வருபவற்றைப் படிக்கவும் இது உதவும். இது குறித்த தங்களின் விரிவான கட்டுரை, அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் எளிமையாகத் தரப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
பேரா. எஸ். கோவிந்த ராஜன், கோயம்புத்தூர்.

அதிகம் பயன்படுத்தப்படாத பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள் பட்டியல் நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியவை. இவற்றை நாம் அறிந்திருந்தாலும், அதிகம் பயன்படுத்தாமலேயே கம்ப்யூட்டரில் இயங்கி வருகிறோம். நல்லவகையான இடித்துரைப்பு இந்த கட்டுரை. இவற்றை இனி நம் வாசகர்கள் அதிகம் பயன்படுத்திப் பயனடைவார்கள்.
ஆர். மகேஸ்வரி, புதுச்சேரி.

கட்டணம் செலுத்தி எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவது ஏறத்தாழ முடிந்துவிட்டது என்றே கூற வேண்டும். அதற்கு ஒரு காரணம் வாட்ஸ் அப் செயலியாகும். இதனை விதிகளைக் காட்டி, அரசு பயமுறுத்தாமல், விதிகளுக்குக் கட்டுப்பட்டு எப்படி இயங்கலாம் என்பதனை வாட்ஸ் அப் நிர்வாகத்திற்குக் கற்றுக் கொடுத்து தொடர்ந்து இயங்க வைக்க வேண்டும்.
என்.கே.இந்திரா, செய்யாறு.

தமிழை முழுமையாக அனைவரும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த யுனிகோடு கட்டமைப்பு தான் ஒரே வழியாகும். இதில் எத்தனை எண்ணிக்கையில் எழுத்துருக்கள் வந்தாலும் நம் மொழி பயன்பாட்டிற்கு நன்மையே. அந்த வகையில், புதிய எழுத்துருக்களை வரவேற்கலாம்.
எஸ். ஆப்ரஹாம் டேனியல், சென்னை.

கரப்பான் பூச்சியா விண்டோஸ் எக்ஸ்பி” ஓர் அருமையான கட்டுரை. விண்டோஸ் எக்ஸ்பி அருமையான பல வசதிகள் கொண்ட ஓர் எளிமையான ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதனை மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிட்டு படைக்கப்பட்ட கட்டுரை சிறப்பாக உள்ளது. மிகத் தெளிவாக, எப்படியும் ஒரு நாள், விண்டோஸ் எக்ஸ்பி மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் பயன்படுத்தப்படும் என்பதையும் கட்டுரை ஆசிரியர் விளக்கியுள்ளார். பாராட்டுகள்.
டாக்டர் ஆ. சிவகுருநாதன், மதுரை.

குழந்தைகளிடம் மொபைல் போன்களைக் கொடுக்காத பெற்றோர்கள் யார் தான் உள்ளனர்? ஆனால், சற்று வளர்ந்த குழந்தைகளிடம், போன்களைத் தர மறுப்பதும், குழந்தைகள் பிடிவாதம் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளாகும். இதற்கான சரியான தீர்வாக அமைந்துள்ளது உங்கள் கட்டுரையில் நீங்கள் தந்துள்ள ஆலோசனைகள். குழந்தைகள் கைகளில் போனைக் கொடுக்கும் முன் டேட்டா பயன் நிலை மற்றும் வை பி தொடர்பை நிறுத்துவது போன்றவை சிறந்த வழிகளே. நன்றி.
என். முருகேசன், கோவை.

ஒன் ட்ரைவ் மற்றும் வேர்ட் இணைந்த பயன்பாடு, விரைவாகச் சென்று கொண்டிருக்கின்ற இந்த உலகில், பல வசதிகளை நமக்குத் தந்து, நம் வாழ்வைப் பொருள் உள்ளதாக ஆக்கும். ஸ்மார்ட் போன் வழி இணையம், நாம் இருந்த இடத்தில் இருந்தே நம் வாழ்வை இயக்கும் விரைவுத் தன்மையைக் கொடுக்கும். ஸ்மார்ட் போனில் வேர்ட் ஒரு பயனுள்ள தகவல். நன்றி.
எஸ். உலகநாதன், விழுப்புரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X