லெனோவா வைப் எஸ் 1 விலை குறைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2016
00:00

லெனோவா நிறுவனம் தன் வைப் எஸ் 1 ஸ்மார்ட் போனை (Lenovo Vibe S1) சென்ற நவம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. அப்போது இதன் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 12,999 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறமாக, இரண்டு செல்பி கேமராக்கள் உள்ளன. 8 எம்.பி.திறன் கொண்டு ஒன்றும், 2 எம்.பி. திறன் கொண்டு ஒன்றுமாக இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டு டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதியுடன் இயங்குகிறது. ஜியோ டேக்கிங், டச் போகஸ், முகம் அறிதல், பனோரமிக் தோற்றம் எனப் பல நவீன வசதிகள் கொண்டதாக இது உள்ளது.
இதன் திரை 5 அங்குல அளவில் அமைந்துள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1920 x 1080 ஆகத் தரப்பட்டுள்ளது. முழுமையான ஹை டெபனிஷன் டிஸ்பிளே கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் MediaTek MT6752 ப்ராசசர் இணைக்கப்பட்டு இயங்குகிறது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் இயக்கம் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப். இரண்டு நானோ சிம்களை இதில் பயன்படுத்தலாம். இதில் ஒரு ஸ்லாட்டினை மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டாகவும் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
இதன் பரிமாணம் 143.3×70.8×7.8 மிமீ. எடை 132 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டுள்ளது. குறைக்கப்பட்ட விலையில் Amazon.in. இணைய தளத்திலும், மற்ற ஸ்மார்ட் போன் விற்பனை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X