மொபைல் போன்களில் ஆபத்து கால பட்டன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2016
00:00

வரும் 2017 முதல் விற்பனைக்கு வரும் மொபைல் போன்களில், ஆபத்தான நேரங்களில் பயன்படுத்த, ஆபத்துக்கான உதவிக்கான பட்டன் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு விதி அமைக்க இருப்பதாக, தகவல் தொழில் நுட்ப மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான ஓர் ஆயுதமாக இதனைப் பயன்படுத்தலாம். பெண்கள் தாங்கள் தாக்கப்படுவோம் எனத் தெரியும் காலத்தில், இதனை அழுத்தினால், உடனே, அருகே உள்ள காவல் நிலையத்திற்கும், போனைப் பயன்படுத்துபவர் ஏற்கனவே செட் செய்து வைத்துள்ள மொபைல் எண்களுக்கும் அவசரத் தகவல் அனுப்பப்படும். அவசர உதவி தேவைப்படும் போதும் இதனைப் பெண்களும் மற்றவர்களும் பயன்படுத்தலாம்.
இதனைத் திறமையாகப் பயன்படுத்த, அனைத்து போன்களிலும், அதன் இருப்பிடம் காட்டும் தொழில் நுட்பம், ஜி.பி.எஸ்., இணைக்கப்பட வேண்டும். இந்த பட்டன், சாதாரண போன்களில் 5 அல்லது 9 க்கான கீயாகவும், ஸ்மார்ட் போன்களில், பவர் பட்டனாகவும் இருக்கும். பவர் பட்டனை மூன்று முறை தொடர்ந்து அழுத்தினால், அது விபத்துக்கான உதவி தேடும் பட்டனாகச் செயல்படும்.
2017க்கு முன்னர் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களில், இந்த விபத்து பட்டன் செயல்பாட்டினை, தொழில் நுட்ப மையங்களில் அமைத்துக் கொள்ளலாம்.
இடம் காட்டும் தொழில் நுட்பமான ஜி.பி.எஸ். அனைத்து போன்களிலும் கட்டாயமாக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் இருந்து இது அமலுக்கு வரும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு துறை, இந்த ஆலோசனையை முன் வழங்கி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் ஒருமுகமாகத்தான், 112 என்ற எண்ணை அனைத்து வகை அவசரத் தேவைக்குமான எண்ணாக அறிவிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விபத்து கால Panic Button குற்றம் நடைபெறுவதனைப் பெரும் அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X