பெர்ஷனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2016
00:00

''பேஸ்புக் ரகசியங்கள்” என்ற கட்டுரையில் காட்டப்பட்டிருக்கும் அனைத்தும், பேஸ்புக் என்னும் சமுதாய தளத்தினைப் பயன்படுத்தும் அற்புத வழிகள். அனைத்துலக மக்களும் பயன்படுத்தும் டிஜிட்டல் சதுக்கம் என்று கட்டுரையாசிரியர் கூறியது மிகச் சிறப்பாக பேஸ்புக் தளத்தை விவரிக்கிறது. அடுத்த சில வழிகள் குறித்த தொடர் கட்டுரைய எதிர்பார்க்கிறேன்.

பேரா எஸ். நமசிவாயம், கோயமுத்தூர்.

நீங்கள் அறியாத இன்பாக்ஸ், தலைகீழாக ஆங்கிலம், பைல் பரிமாற்ற வசதி என பேஸ்புக் தளத்தின் அனைத்து பயன்களையும் பட்டியலிட்ட ஆசிரியருக்கு பாராட்டுகள். அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் எளிய நடையில் மிக அருமையான கட்டுரை. தொடர்ந்து பேஸ்புக் குறித்து எழுதவும். ஏனென்றால், சமுதாய இணக்கத்தின் ஓர் அடையாளமாக இன்று பேஸ்புக் செயல்படுகிறது, உலக அளவில்.
டாக்டர் வ.தி. பாண்டியராஜன், மதுரை.
டைல்ஸ்களை குழுவாக அமைக்கலாம் என்ற உதவிக் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நமக்குத் தேவையான உணவுப் பண்டங்களை மட்டும் ஒரு தட்டில் வைத்து சாப்பிடத் தயார் செய்வது போல உள்ளது. மைக்ரோசாப்ட் இன்னும் பல கூடுதல் வசதிகளைத் தன் இடை முகத்திலும், ஸ்டார்ட் மெனுவிலும் தரும் என எதிர்பார்க்கலாம்.
என். சிவராஜன், திருப்பூர்.
கேள்வி பதில் பகுதியில் காட்டியபடி, புளுடூத் ஸ்பீக்கரை என் விண்டோஸ் 10 இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டரில் இணைத்தேன். மிக எளிதாக வழி காட்டியமைக்கு நன்றி.
எஸ். சுகிர்தமலர், சேலம்.
தேடல் பதியாத பிரவுசர் நிலைகள்” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டது போல, இதனைப் பாலியல் தளங்களுக்கே பலரும் பயன்படுத்தி வந்த நிலையில், அதன் மிக முக்கிய பயன்பாடுகளைப் பட்டியலிட்டது, இணையம் பயன்படுத்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்கையில் இதனைப் பயன்படுத்தினால், நாம் அளிக்கும் பாஸ்வேர்ட் மற்றும் பிற தன் சார்பு தகவல்கள் மற்றவருக்குத் தெரியாத நிலை ஏற்படும்.
பேரா. ஆர். சிவப்பிரகாசம், சென்னை.
உங்கள் கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட தேடல் பதியாத நிலைகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்து வியந்து போனேன். இத்தனை நாட்கள் இந்த பயன் தரும் விஷயங்கள் குறித்து அறியாதவனாக இருந்தது ஆச்சரியமாக உள்ளது. என் மாணவர்களுக்கும் இது குறித்து விளக்கங்கள் அளித்தேன். தினமலருக்கு அனைவரின் சார்பிலும் நன்றி.
ஆ. பெரியநாயகம், ஆசிரியர், பழநி.
இன்டெல் நிறுவனத்தின் தலைவர் குரோவ் மறைவு குறித்த கட்டுரை நல்ல தொகுப்பு. சமுதாயத்திற்கான அவரின் பங்களிப்பினை மிக நன்றாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புகழ்ந்து பேசுபவர்கள், குரோவ் போன்றவர்களின் கண்டுபிடிப்பினை மறந்துவிடுகின்றனர். இன்டெல் நிறுவன
சிப்களே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த உதவியாய் இருந்தன. குரோவ் அவர்கள் இந்த வகையில் பில் கேட்ஸ் அவர்களுடன் இணைந்து அவருக்குத் தேவையானதைத் தந்தார் என்பதே வரலாறு. உங்கள் கட்டுரையில் இதனைத் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளீர்கள்.
பாராட்டுகள்.
பேரா. எஸ்.கதிர்காமன், கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X