கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2016
00:00

கேள்வி: விடுமுறையில் நாம் சென்றால், நமக்கு வரும் மின் அஞ்சல்களுக்கு, அது குறித்த பதிலை தானாக அனுப்பும் வகையில், ஜிமெயிலை செட் செய்திடலாம் என ஒரு டிப்ஸ் படித்தேன். அதனை எப்படி மேற்கொள்வது? என்று தெரியவில்லை. வழி காட்டவும்.
கா. பரணிராணி, விருதுநகர்.
பதில்: நாம் அலுவலகம் அல்லது வீட்டில் இல்லாத போது, நம் ஜிமெயிலுக்கு வரும் அஞ்சல்களை வேறு ஓர் ஊரிலிருந்தும் பார்த்து பதிலளிக்கலாம். ஆனால், ஓய்விற்கெனச் செல்கையில், சிலர் தங்களுக்கு வரும் அலுவலகக் கடிதங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என முடிவு செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுப்பப்படுவதற்கென ஜிமெயில் வசதியைத் தந்துள்ளது. இதனை vacation/holiday response என அழைக்கின்றனர். அலுவலக ரீதியாக அனுப்பப்படும் கடிதங்களுக்கு, உடனே பதில் தந்தாக வேண்டும். இந்த வசதி மூலம், அஞ்சலை அனுப்பியவருக்கு நீங்கள் விடுமுறையில் இருப்பது தெரிவிக்கப்படுவதால், அவர் உங்கள் அலுவலகத்தில் வேறு ஒருவரை நாடலாம் அல்லவா. இதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் உங்கள் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்தினைத் திறக்கவும். உடன் உங்களுக்கான இன்பாக்ஸ் திறக்கப்படும். இங்கு மேலாகக் காட்டப்படும் செட்டிங்ஸ் (Settings) வீல் ஐகான் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஜிமெயில் தளத்தின் பல பிரிவுகள் காணப்படும். ஸ்குரோல் செய்து சென்று, “Vacation Responder” என்னும் பிரிவு செல்லவும். அதில் எந்த நாளிலிருந்து எந்த நாள் வரை விடுமுறையில் இருக்கப் போகிறீர்கள் என்று அமைத்திட வேண்டும். பின்னர், நீங்கள் தர விரும்பும் செய்தியினை அமைக்க வேண்டும். இது தனிப்பட்டுத் தெரிய வேண்டும் எனில், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் எழுத்துருவினை மாற்றி அமைக்கலாம். வண்ணத்தினையும் மாற்றலாம். பின்னர், அனைத்தையும் சேவ் செய்துவிட்டு வெளியேறவும். குறிப்பிட்ட காலத்தில், உங்களுக்கு வரும் அஞ்சல்களுக்கு, அவற்றை அனுப்பியவரின் மின் அஞ்சல் முகவரிக்கு இந்த பதில் செல்லும்.
கேள்வி: நான் இன்னும் விஸ்டா பயன்படுத்தும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்றினைப் பயன்படுத்தி வருகிறேன். இந்த சிஸ்டத்தினை குரோம் பிரவுசர் சப்போர்ட் செய்திடாது என்று படித்தேன். அப்படியானால், புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்க வேண்டுமா?
என். ஆறுமுகம், மதுரை.
பதில்: இதற்காகப் புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்க வேண்டிய அவசியமில்லை. வேறு ஒரு பிரவுசருக்கு, பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மாறிக் கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்த வேண்டும். விஸ்டா சிஸ்டத்தில், SP2 பேட்ச் பைல் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கு, அடுத்த ஏப்ரல் வரை சப்போர்ட் கிடைக்கும். ஆனால், விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான மைக்ரோசாப்ட் தரும் சப்போர்ட் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று நிறுத்தப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அந்தச் சூழ்நிலையில், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் ஏற்றுக் கொள்ளும் விண்டோஸ் சிஸ்டத்திற்கு (விண்டோஸ் 7) அல்லது லினக்ஸ் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும். இது இயலாவிட்டால், புதிய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்துவது
நல்லது.
கேள்வி: புதிதாக ஐபோன் 6 ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதில் மெசேஜ் பெறுகையில், அதனை அனுப்பியவரின் படம் காட்டப்படுகிறது. முன்பு பயன்படுத்திய ஐபோனில், இந்த படங்கள் காட்டப்படாமல் இருந்தன. அதை செட் செய்தார்களா என்று தெரியாது. அப்படி இந்த போனிலும் செய்திட முடியுமா?
கே.பிரேம் சந்த், திருச்சி.
பதில்: மாறா நிலையில், ஐபோன் 6 / 6 ப்ளஸ், மற்றும் 6எஸ் ஸ்மார்ட் போன்களில், உங்களுடன் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் படங்கள் அவர்களின் மெசேஜ்களுடன் காட்டப்படும். ஆனால், இவற்றை மறைக்க நினைத்தால், சிறிய செட்டிங் அமைப்பின் மூலம் மறைத்துவிடலாம்.
போட்டோக்களை மறைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் தொடர்பில் உள்ளவர்களில் பலருக்கு படங்கள் இல்லாமல் இருக்கலாம். அல்லது படங்கள் இல்லாமல் வெற்றிடமாய் இருப்பதை நீங்கள் விரும்பலாம். எப்படி இருந்தாலும், படங்களை எப்படி மறைப்பது என இங்கு பார்க்கலாம். போனின் ஹோம் ஸ்கிரீனில் “Settings” என்பதில் டேப் செய்திடவும். செட்டிங்ஸ் திரையில், “Messages” என்பதில் தட்டவும். அடுத்து, “Show Contact Photos” என்பஹ்டில் தட்டி, அதன் அருகே உள்ள ஸ்லைடர் பட்டனை மாற்று திசையில் இழுத்து, அதன் இயக்கத்தினை முடக்கும் வகையில் அமைக்கவும். பச்சை நிற வட்டம் மறைந்து போகும். அந்த இடம் வெள்ளையாகத் தெரியும். இதன் பின்னர், மெசேஜ் அருகில், அதனை அனுப்பியவரின் போட்டோ இருக்காது. முன்பு பயன்படுத்திய முந்தைய ஐபோன்களில், இது போல போட்டோ காட்டப்படும் வசதி தரப்படாமல் இருந்தது. ஐபோன் 6/6 ப்ளஸ் மற்றும் 5/5 ப்ளஸ் ஆகிய போன்களில் மட்டுமே இவை காட்டப்படுகின்றன.
கேள்வி: நீங்கள் ஒருமுறை சிகிளீனர் செயலியைப் பயன்படுத்தும்படி எழுதி இருந்தீர்கள். அதன்படி, அதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன். அண்மையில், அதனை இயக்கியபோது, பி.டி.எப். கிரியேட்டர் போன்ற சில அப்ளிகேஷன்களை நீக்குமாறு பரிந்துரைக்கிறது. நான் சிகிளீனர் செயலி மீதும் அதன் செயல்பாடுகளின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால், ஏன் பி.டி.எப். கிரியேட்டரை நீக்கச் சொல்கிறது என்று தெரியவில்லை. விளக்குமாறும், அறிவுரை கூறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். சந்தியா மோகன், தாம்பரம், சென்னை.
பதில்: சி கிளீனர் இவ்வாறு பரிந்துரைப்பதற்குச் சில வாய்ப்புகள் உள்ளன. சி கிளீனர், எந்த செயலிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ, அவற்றை விவகாரமானது என்று எண்ணி, ஒதுக்குமாறு கூறலாம். சி கிளீனர் ஒரு சில வழிகளைப் பின்பற்றி, புரோகிராம் ஒன்று மால்வேர் புரோகிராமா என அறியும்படி வடிவமைக்கப் பட்டிருக்கலாம். அந்த வழிகளில் சிலவற்றை, பி.டி.எப். கிரியேட்டர் மற்றும் சில செயலிகள் கொண்டிருக்கலாம். எனவே, அவற்றை சிகிளீனர் நீக்குமாறு பரிந்துரைக்கலாம். பி.டி.எப்.கிரியேட்டர் செயலியின் சில பதிப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன என்று பலர் தெரிவித்துள்ளனர். அது PDFforge Toolbar என்னும் புரோகிராமிற்கு உங்களை வழி நடத்தும். இது ஒரு வகையில் விளம்பரம் கொண்டதாகும். அந்த விளம்பரம் வேறு பல இணைய தளங்களுக்கு உங்களை வழி நடத்தும். எனவே இதனை சிகிளீனர் நீக்குமாறு கூறும் வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு வாய்ப்பும் உண்டு. இலவசமாகத் தரப்படும் புரோகிராம்களில், சிலர் வேண்டும் என்றே, மால்வேர் புரோகிராம்களை இணைத்திருக்கலாம். நீங்கள் வெகு நாட்களாக, பி.டி.எப்.கிரியேட்டர் செயலியை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்தி வந்திருந்தால், அப்படியே தொடர்ந்து பயன்படுத்தவும்.
கேள்வி: வேர்ட் புரோகிராமில், நாம் ஒரு வாக்கியத்தினை முடித்து முற்றுப் புள்ளி வைக்கையில், வேர்ட் அதனைப் புரிந்து கொண்டு, ஆங்கிலத்தில், அடுத்த வாக்கியத்தை அதன் முதல் சொல்லைப் பெரிய எழுத்து கொண்ட சொல்லாகத் தொடங்குகிறது. ஆனால், இதுவே ஓர் எண்ணை அடுத்து முற்றுப் புள்ளி வந்தால், அவ்வாறு கருதாமல், (எ.கா. ..measures 4 x 3 x 2.) அடுத்த வாக்கியத்தின் முதல் சொல்லை சிறிய எழுத்துடனே தொடங்குகிறது. இதனை வழக்கம் போல மாற்ற இயலுமா?
எஸ். ரம்யா, மும்பை.
பதில்: இல்லையே. நான் சோதனை செய்த வேர்ட் செயலிகளில் எண்களை அடுத்து முற்றுப் புள்ளி வந்தாலும், அடுத்த வாக்கியத்தின் முதல் சொல், நாம் அமைக்காமலேயே முதல் எழுத்துபெரிய எழுத்தாகத்தான் அமைகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்டில் இந்த செயல்பாட்டினை மாற்றி இருக்கலாம். அதனைச் சரி செய்திடும் வழியைக் கீழே தருகிறேன்.
இந்த அமைப்பு AutoCorrect டயலாக் பாக்ஸில் தரப்பட்டுள்ள AutoCorrect டேப்பின் மூலம் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு இயக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அதனைக் கீழே தந்துள்ளபடி உறுதி செய்திடவும்.
1. Word Options டயலாக் பாக்ஸை இயக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, Word Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 மற்றும் வேர்ட் 2013ல், ரிப்பனில் File டேப் தேர்ந்தெடுத்து, Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுகக்வும்.
3. தொடர்ந்து AutoCorrect Options என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Capitalize First Letter of Sentences என்று இருப்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.
5. அடுத்து, ஓகே கிளிக் செய்து ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸை மூடவும். தொடர்ந்து வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸையும் ஓகே கிளிக் செய்து மூடவும். இதன் மூலம் எண்களை அடுத்தும், எழுத்துகளை அடுத்தும் முற்றுப் புள்ளி இடப்பட்டால், அடுத்த வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்து தானாக பெரிய எழுத்தாக மாற்றப்படும். நீங்களாக, இதற்கு வேறு ஒரு கண்ட்ரோல் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. ஒரு வேளை, ”விதிவிலக்குகள்” (AutoCorrect exceptions) என்பதில் இதற்கான பிரச்னை இருக்கலாம். இதனை உறுதி செய்திட, ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸில், Exceptions என்பதில் கிளிக் செய்து, இந்தப் பட்டியலில், Don't capitalize after என்ற கட்டத்தில், எண்கள் தரப்பட்டு ஏதேனும் விரிக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். அப்படி இருந்தால், அதனை நீக்கவும்.
கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருக்கையில், திடீரென விண்டோஸ் திரையை இரு மடங்கு பெரிதாக்கிப் பார்த்தார். பின் உடனே, பழைய நிலைக்குத் திரும்பினார். இதனை எப்படி மேற்கொள்வது? எனக்கு, இணைய தளத்தில் சில வேளைகளில் டெக்ஸ்ட் படிக்க முடியவில்லை. இதே போல பெரிதாக்கிப் பார்க்கலாம். ஆனால், அதுவே தொடர்ந்து இருப்பதையும் நான் விரும்பவில்லை. உதவுங்களேன்.
என். கல்யாணம், திருப்பூர்.
பதில்: உங்கள் நண்பரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே. நமக்குத் தெரியாததை, தெரிந்தவரிடம் கேட்டு, நாம் எந்த வயதில் இருந்தாலும், தெரிந்து கொள்வதில் என்ன தயக்கம்?
இங்கு கேள்வி அனுப்பியதால், நம் வாசகர்கள் அனைவருக்கும் இந்த குறிப்பு செல்கிறது என்பதில் மகிழ்ச்சி. தங்களுக்கும் நன்றி.
விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு ப்ளஸ் (+) அடையாளம் கொண்டுள்ள கீயை (நியுமெரிக் கீ போர்ட் அல்லது மேலாகத் தரப்பட்டுள்ள எண்களோடு சேர்ந்த கீ வரிசை) அழுத்தவும். உடனே, உங்கள் கம்ப்யூட்டர் திரை 200% பெரிதாகும். மீண்டும் விண்டோஸ் கீயுடன் மைனஸ் கீயை அழுத்த, பழைய நிலைக்குத் திரும்பும்.

-டாக்டர் பெ. சந்திர போஸ் -

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X