பயன்படுத்திய ஆப்பிள் போன்களை விற்க தடை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2016
00:00

ஏற்கனவே, பயன்படுத்தி பின்னர், புதிய போன்களை வாங்கும் போது திரும்ப அளித்த, சின்ன சின்ன பிரச்னைகளுக்காகத் திரும்பப்பெற்ற ஆப்பிள் ஐபோன்களை, புதுப்பித்து விற்பனை செய்வதை ஆப்பிள் நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில், இது போல பயன்படுத்தி பின்னர் புதுப்பித்த ஐபோன்களை விற்பனை செய்திட, மத்திய அரசின் இதற்கான துறையிடம் அனுமதி கேட்டது. அரசு முற்றிலுமாக இதனை ஒதுக்கி, அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இத்தகைய போன்கள், தங்கள் பயன்பாட்டு காலத்தின் இறுதியில் இருக்கும். எனவே, விரைவில் அதன் பயன்பாட்டு தன்மையை இழந்து, ஏற்கனவே, இந்தியாவில் பெருகி வரும் மின் அணு சாதனங்கள் குப்பையை அதிகப்படுத்தும் என, அரசின் சுற்றுப் புறச் சூழ்நிலைக்கான அமைச்சகம் தெரிவித்தது. இவ்வாறு விற்பனைக்கு வருபவை பழைய போன்கள் இல்லை என்றும், இவற்றை ஒரிஜினலாகத் தயாரிக்கும் இடத்தில் புதுப்பிக்கப்பட்டவை எனவும், அவற்றிற்கு புதிய IMEI எண்கள் தரப்பட்டு, ஓராண்டு வாரண்டியும் கொடுக்கப்படுவதாகவும் ஆப்பிள் தெரிவித்ததனை அரசு ஒதுக்கிவிட்டது.
இது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் விற்பனையாகும் போன்களின் எண்ணிக்கையில், ஆப்பிள் நிறுவன போன்கள் 2% பங்கினையே கொண்டுள்ளன. சென்ற மார்ச் மாதம், தன் விண்ணப்பத்தில் சற்று மாறுதல்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு, அரசின் தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறையிடம் (Department of Industrial Policy and Promotion ( DIPP)) சமர்ப்பித்தது. இதன் பின்னரும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், சில இந்திய விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தன் உற்பத்தி பொருட்களை இங்கு விற்பனை மையங்களைத் திறந்து விற்பனை மேற்கொள்ள அனுமதி வேண்டினால், அதன் தயாரிப்புகளுக்கான 30% பொருட்கள், இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆப்பிள் நிறுவனம் இந்த விதியிலிருந்து விலக்கு வேண்டும் என விண்ணப்பித்து அனுமதியும் பெற்றது.
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய நேரடி விற்பனை மையத்தினை இந்தியாவில் இன்னும் அமைக்கவில்லை. Redington மற்றும் Ingram Micro ஆகிய நிறுவனங்கள் மூலமே தன் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.