எச்.டி. டிசையர் 830 அறிமுகமானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2016
00:00

எச்.டி.சி. நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை தைவான் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பன்னாட்டளவில் இதன் விற்பனைக்கான அறிமுகம் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பார்சிலோனா மொபைல் கருத்தரங்கில், டிசையர் 825 ஸ்மார்ட் போனுடன், எச்.டி. டிசையர் 830 குறித்த தகவல்களும் வெளியாகின. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன. எச்.டி.சி. ஸ்மார்ட் போன்களை மட்டுமே வாங்குபவர்கள், இந்த போனின் அம்சங்களைத் தெரிந்து கொண்டு தங்கள் புதிய போன் வாங்கும் திட்டத்தினை மேற்கொள்ளலாம். அல்லது புதியதாக எச்.டி.சி. போன் வாங்க திட்டமிடுபவர்களும், இந்த போன் குறித்துத் தெரிந்து கொண்டு காத்திருக்க விரும்பினால் காத்திருக்கலாம். இதன் திரை 5.5 அங்குல அளவில் 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன் தரப்பட்டுள்ளது. முழுமையாக ஹை டெபனிஷன் டிஸ்பிளே காட்டுகிறது. 1.5 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் MediaTek MT6753T ப்ராசசர், Mali-T720 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 2 டெரா பைட் வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 சிஸ்டம் இயங்குகிறது. இதன் யூசர் இண்டர்பேஸ் HTC Sense 7 ஆக உள்ளது. இதன் பின்புறக் கேமரா 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்டதாக, LED Flash மற்றும் OIS, BSI சென்சார்கள் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. 28 எம்.எம்.லென்ஸ் கொண்டு 1080 பி விடியோ பதிவு மேற்கொள்கிறது. அல்ட்ரா பிக்ஸெல் கொண்ட கேமரா முன்புறமாகக் கிடைக்கிறது. முன்புறமாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டோல்பி ஆடியோ சிஸ்டத்தில் இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ்.ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 2,800 mAh திறன் கொண்டது. மூன்று வண்ணங்களில் இந்தியாவிலும் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உத்தேசமாக ரூ.20,700 ஆக இருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X