ஜூலை 29க்குப் பின்னர் இலவசம் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மே
2016
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும்போது, இதுவரை இல்லாத வகையில், அதனை இலவசமாகத் தருவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினைக் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று இயக்குபவர்களின் கம்ப்யூட்டர்களில், விண் 10 இலவசமாக அப்கிரேட் செய்யப்படும் எனத் தெரிவித்தது. தொடர்ந்து அனைத்து வழிகளிலும், இது குறித்த அறிவிப்பினை பாப் அப் தகவல்களாகத் தந்து கொண்டே இருந்தது. அதே சமயத்தில், இந்த இலவச அப்கிரேட், விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்கு மட்டுமே தரப்படும். பின்னர், இதற்கு கட்டணம் செலுத்தித்தான் இயக்குவதற்கான உரிமை பெற முடியும் எனவும் அறிவித்தது. எனவே, ஜூலை 29க்குள், விண்டோஸ் 7 மற்றும் 8.1 சிஸ்டம் கொண்டிருப்பவர்கள், தங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அனுமதிக்கும் பட்சத்தில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற முடியும்.
விண்டோஸ் 10 தொடர்ந்து மக்களிடம் பிரபலமாகி வருகிறது. தற்போது விண்டோஸ் 10 30 கோடி சாதனங்களில் இயக்கப்பட்டு வருவதாக, அண்மையில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஏப்ரல் மாதம் 27 கோடி சாதனங்களில் மட்டுமே இது இயக்கப்பட்டது. விண்டோஸ் 10 இயக்க முறைமை, நூறு கோடி சாதனங்களில் இடம் பெறுவதற்கான இலக்கினை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
இலவசமாகப் பெறுவதற்கான காலக்கெடு நெருங்குவதால், மைக்ரோசாப்ட், அக்காலத்திற்குப் பின்னர் உரிமம் வாங்க திட்டமிடுபவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்று அறிவித்துள்ளது. விண்டோஸ் 10 ஹோம் பதிப்பினைப் பெற 119 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். மற்ற நாடுகளில் இதற்கிணையான அந்த நாட்டு செலவாணியில் செலுத்த வேண்டும். பிரிட்டனில் விண்டோஸ் 10 ஹோம் 99 பவுண்ட் அல்லது விண்டோஸ் 10 ப்ரோ பெற 189.99 பவுண்ட் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பலர் இந்தக் கட்டணம் அதிர்ச்சியைத் தருவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மைக்ரோசாப்ட், முன்பே இலவச அப்கிரேட் குறித்து நாங்கள் கூறிவிட்டோம். அதனை ஏற்காமல் காலம் கடத்தி, அப்கிரேட் செய்யாதவர்கள், இந்தக் கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையினை எழுதுகையில், விண்டோஸ் இயக்க முறைமைகளில், அதிகம் பயன்படுத்தப்படும் முறைமையாக, விண்டோஸ் 7 முதல் இடம் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. மொத்த கம்ப்யூட்டர்களில், 47.82% கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 இயங்குவதாக, இது குறித்துத் தொடர்ந்து கணித்து வரும் நெட்மார்க்கட் ஷேர் அமைப்பு அறிவித்துள்ளது. இரண்டாவது இடத்தில், விண்டோஸ் 10 சிஸ்டம் 15.34% இடத்தைக் கொண்டுள்ளது. வரும் ஜூலை 29க்குள் இது மிக வேகமாக உயர்ந்து முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அனைவரும் கருதுகின்றனர்.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முதல், விண்டோஸ் 10 சிஸ்டம் வரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றன என்பதை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை, 20 மாதங்களில், 13 கோடி சாதனங்கள் பெற்றன. விண்டோஸ் விஸ்டா 17 மாதங்களில், 18 கோடி கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றன. விண்டோஸ் 7 சிஸ்டம், 18 மாதங்களில், 35 கோடி உரிமங்கள் என்ற எண்ணிக்கையில் இடம் பெற்றது. விண்டோஸ் 8, 20 கோடி உரிமங்களை 15 மாதங்களில் எட்டியது. விண்டோஸ் 10, 9 மாதங்களில், 30 கோடி சாதனங்களை அடைந்துள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்கள், மக்களிடம் வரவேற்பினைப் பெறவில்லை. அதனால், மற்ற விண்டோஸ் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், குறைவான எண்ணிக்கையிலேயே இயங்கின.
நீங்கள் இன்னும் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறுவது குறித்து, மாற்றுக் கருத்துகள் கொண்டிருப்பின், மீண்டும் அதனைப் பரிசீலனை செய்வது நல்லது எனப் பலர் எடுத்துக் கூறியுள்ளனர். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இன்னும் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருப்பவர்கள், விரைவில் புதிய கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான கட்டணத்துடன் விலையிட்டு வாங்கிக் கொள்வது நல்லது.
வரும் ஜூலை மாதம், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குப் பெரிய அளவிலான அப்டேட் ஒன்றைத் தருவதற்கு, மைக்ரோசாப்ட் திட்டமிட்டு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் பல புதிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முழுமையாகத் தரப்பட்டுள்ள ஸ்டார்ட் மெனுவில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம். ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 8ல் கைவிடப்பட்டு, பின்னர், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த எதிர்ப்பிற்குப் பின்னர், விண்டோஸ் 10ல் முழுமையாக அறிமுகமானது. அத்துடன், விண் 8ல் தரப்பட்ட டைல்ஸ் இடைமுகமும் தரப்பட்டது.
ஜூலை 29க்குப் பின்னர், Get Windows 10 என்ற விளம்பரம் நிறுத்தப்படும். இது குறித்த பாப் அப் செய்திக் கட்டங்கள் வலுக்கட்டாயமாகத் தரப்படுவது நிறுத்தப்படும். எனவே, இப்போதே கட்டணமின்றி விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வது பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X