ஸ்மார்ட் போன் விற்பனை குறைகிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மே
2016
00:00

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், முதல் முறையாக, ஸ்மார்ட் போன் விற்பனை குறைந்துள்ளது. Strategy Analytics என்னும் ஆய்வு நிறுவனம் இந்த தகவலைத் தந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை 21% உயர்ந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் இது 3% குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பன்னாட்டளவில், 34 கோடியே 50 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாயின. தற்போது இது 33 கோடியே 46 லட்சமாக உள்ளது.
ஸ்மார்ட் போன்கள், 1996 ஆம் ஆண்டு விற்பனைக்கு முதன் முதலாக விற்பனைக்கு வந்தன. தொடர்ந்து விற்பனை அதிகரித்து வந்த நிலையில், தற்போதுதான் விற்பனை குறைந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தேவைக்கு அதிகமாகவே ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இதுவே இந்த ஆண்டு விற்பனை குறைவதற்குக் காரணமாகும். சீனாவில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனையும் இதே போல் குறைந்து, ஆப்பிள் ஈட்டிய லாபமும் குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 85% ஆக இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மிகக் குறைந்து 14% ஆக இருந்தது. இந்த காலாண்டில், ஆப்பிள் சீனாவில் ஏழு நேரடி விற்பனை மையங்களைத் திறந்து, மொத்த மையங்களின் எண்ணிக்கையை 35 ஆக உயர்த்தியது.
பன்னாட்டளவில், மிக அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்திடும் நிறுவனமாகத் தொடர்ந்து சாம்சங் இடம் பெற்றுள்ளது. இதன் பங்கு உலக அளவில் 23.6% ஆக உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விற்பனை, 2015 முதல் காலாண்டில், 8.27 கோடி இருந்தது. 2016 ஆம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் இது 7.9 கோடியாகக் குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இதே வகையில், 6.12 கோடியிலிருந்து 5.12 கோடியாகக் குறைந்தது. மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில், பன்னாட்டளவில், 18%லிருந்து 15% ஆகக் குறைந்தது.
பெரும்பாலான நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் விற்பனையில் சற்று சரிவைச் சந்தித்த நிலையில், சீனாவின் ஹுவே நிறுவனம் மட்டும், தன் விற்பனையில் உயர்வைச் சந்தித்துள்ளது. 1.73 கோடி போன்கள், சென்ற 2015 முதல் காலாண்டில் விற்பனை செய்த இந்நிறுவனம், தற்போது 2.83 கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. சீனாவின் ஸியோமி நிறுவனம் மேற்கொண்ட விற்பனையில் எந்த வித மாற்றமும் இல்லாமல், 1.46 கோடியாக தொடர்ந்து இருந்தது.
2015 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 51 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்த ஆப்பிள், 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 22 லட்சம் மட்டுமே விற்க முடிந்தது. ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில், ஆப்பிள் தொடர்ந்து மக்களால் விரும்பப்படும் நிறுவனமாக உள்ளது. இருப்பினும் பன்னாட்டளவில், ஸ்மார்ட் வாட்ச் விற்பனை உயர்ந்துள்ளது. 2015 முதல் காலாண்டில், 13 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டன. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில், 42 லட்சமாக உயர்ந்தது. இந்த விற்பனையில் 223% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையிலும், சாம்சங் முதல் இடத்தில் உள்ளது. 2015ன் முதல் காலாண்டில், 40 கோடி ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்த சாம்சங், 2-016 முதல் காலாண்டில் 60 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது. ஸ்மார்ட் வாட்ச்களை மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கி விட்டனர் என்ற போக்கினையே இது காட்டுவதாக, இப்பிரிவில் இயங்கும் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X