ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 டிச
2010
00:00

யு.எஸ்.பி.போர்ட் வழி மிக இலகுவாகவும், எளிதாகவும் இருந்தாலும் பல நேரங்களில் அது சிக்கல்களைத் தருவதாக அமைகிறது. உங்களுடைய விரிவான கட்டுரை இவற்றிற்கான தீர்வுகளைத் தருவதாய் அமைந்துள்ளது.
-சி.கே. கந்தசாமி, சென்னை.
பேஸ்புக் ஏற்கனவே பல பன்னாட்டு நண்பர்களின் பெரிய கூடாரமாக அமைந்து செயல்பட்டு வருகிறது. இதில் இமெயில் வசதியும் தந்துவிட்டால், முழுமையான தனி நட்பு உலகமாக மாறிவிடும். நமக்கிடையே பேதங்களும், வெறுப்புகளும் களைய இது போன்ற முயற்சிகள் தேவை. இதனை வரவேற்போம்.
-இரா. சம்பந்த மூர்த்தி,   கோயம்புத்தூர்.
டேப்ளட் பிசி குறித்த தகவல்கள் உற்சாகத்தை அளிக்கின்றன. விலை மட்டும் குறைவாக இருந்து விட்டால், இன்றைய மொபைல் போன்களைப் போல, இந்தக் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். தகவல் பரிமாற்றம் என்பது, மூச்சுவிடுவதைப் போல மாறிவிடும்.
-ஆ.தில்லைநாயகம், சென்னை.
வேர்டில் கூட்டலுக்கான டிப்ஸ் மிகவும் பயனுள்ள  ஒரு உதவி. மிக்க நன்றி.
--மா. சின்னராஜ் குமார், விருதுநகர்.
வேர்டில் புக்மார்க் என்பது புதிய செய்தியாகவும், மிகவும் பயன்தரத்தக்கதாகவும் உள்ளது. அடிக்கடி இனி பயன்படுத்துவேன்.
-சா. மோகன சுந்தரம், கம்பம்.
தொடரும் டெக்ஸ்ட் இடையே, காலம் ஏற்படுத்தி டெக்ஸ்ட் பார்மட்டிங் மிக அருமையான ஒரு உத்தி. மேலும் டெக்ஸ்ட் விஷயத்திற்கேற்ப இவற்றை அமைப்பதால், சொல்ல வேண்டிய தகவல்கள் நன்றாகக் காட்டப்படும். குறிப்பு தந்தது மிகவும் சந்தோஷம்.
-கே.எல். கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
பவர்பாய்ண்ட் ஆப்ஜெக்ட் இயக்கம் நல்ல டெக்னிக்கலான கட்டுரை. நேரம் எடுத்து, வரிவரியாகப் படித்துப் புரிந்து கொண்டேன். ஒரு ஆசிரியர் வகுப்பு எடுப்பதைப் போல உள்ளது.
-டி. இசைராணி யுவராஜ், திருப்பூர்.
சின்னத்திரை சீரியல்களில் சிக்கி மக்கள் தங்கள் பொன்னான நேரத்தினை போக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இணையத்தில் வேறு இந்த வசதியா? சுத்தமாக மக்களை சோம்பேறியாக்கு கிறீர்கள்.
-டி. அனந்த பத்மநாபன், சென்னை.
சீரியல்கள் முன் அமர்ந்து நேரத்தைப் போக்காமல், இணையத்தில் வேறு தகவல்களைப் படிக்கையில்,  விளம்பரங் களில் நேரத்தை வீணாக்காமல் சீரியல்களைப் பார்க்கத் தரும் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தகவலுக்கு நன்றி.
-டி. ஆர். பிரகாஷ், திருத்தணி.
பி.எஸ்.என்.எல். இலவச சிம் குறித்து ஏன் அந்த நிறுவனம் எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. தாங்கள் தகவல் அளித்த பின்னரே, கஸ்டமர் கேர் மையம் சென்று சிம் வாங்கினேன். நல்ல முயற்சி. ஆனால் மக்களுக்கு முறையாக அறிவிக்கப்பட வேண்டும்.
-தே. உஷா ராணி, பொள்ளாச்சி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X