விண்டோஸ் 10 நம்முடையதாக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மே
2016
00:00

பொதுவாக நாம் பணியாற்றும் சூழ்நிலை நம் மனதிற்கேற்ற வகையில் அமைக்கப்பட்டால், நம்முடைய பணி திறன் படைத்ததாகவும், விரைவில் மனதிற்கு நிறைவாக முடிக்கப்படக் கூடியவையாகவும் அமையும். இது நாம் பணியாற்றும் இடத்திற்கு மட்டுமின்றி, நாம் பணி மேற்கொள்ளத் துணை செய்திடும் சாதனங்களுக்கும் பொருந்தும். மேஜை இருக்கை இவற்றுடன் நம் கம்ப்யூட்டர் அமைப்பும் நம் மனதிற்குப் பிடித்த வகையில் அமைக்கப்பட வேண்டும்.
இந்த வகையில், அண்மையில் நம் கம்ப்யூட்டருக்குள் கிட்டத்தட்ட ஊடுறுவி வரும், விண்டோஸ் 10 இயக்க முறைமையினை எப்படி நம் எண்ணங்களுக்கேற்ப அமைக்கலாம் என்று பார்க்கலாம். இதற்கு முன் வந்த விண்டோஸ் பதிப்புகள் போல, இதிலும் அதற்கான வழிகள் பல தரப் பட்டுள்ளன. இருப்பினும், விண்டோஸ் 10 ஐ நம் வயப்படுத்தும் வழிகள் சற்று மாறுபட்டுள்ளன.

தன்வயப்படுத்தல்: பெரும்பாலான தன் வயப்படுத்தும் வேலைகளை நாம் Settings மெனுவில் உள்ள Personalize பிரிவில் இருந்து மேற்கொள்ளலாம். இங்கு செல்வதற்கு, கீழாக இடது மூலையில் உள்ள Start பட்டனை அழுத்தவும். அல்லது, உங்கள் கீ போர்டில் உள்ள விண்டோஸ் கீயை அழுத்தவும். இங்கு கிடைப்பதில் Settings மெனு பட்டன் அழுத்தி, பின்னர், Personalize லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு Personalization பக்கம் கிடைக்கும். இந்தப் பக்கத்தில் கிடைக்கும் பிரிவுகள் எல்லாம், தொடு உணர் மாற்றலுக்கு (context sensitive) உள்ளாகும் நிலையில் தரப்பட்டுள்ளன. அதாவது, இவற்றைத் தேர்தெடுக்கும் வகையில் கர்சரை அதற்கான இடத்தில் வைத்தவுடனேயே, அந்த அமைப்பிற்கு திரை அதன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும்.

பின்புலம்:
சிலருக்கு, தங்கள் பணித்தளம் ஒரே ஒரு வண்ணத்தில் பின்னணியைக் கொண்டிருப்பதனை ரசிக்க மாட்டார்கள். எனவே, கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் பின்னணியை, படங்கள் கொண்ட ஸ்லைட் ஷோவாக அமைப்பார்கள். இங்கே தான் தொடு உணர் திரைமாற்றச் செயல்பாடு உதவிக்கு வருகிறது. ஒரு வண்ணத்தில் அமைக்கையில் நமக்கு பல விருப்பங்கள் கிடைப்பதில்லை. ஆனால், ஸ்லைட் ஷோ என்பதனைத் தேர்ந்தெடுத்தால், பல விருப்பத் தேர்வுகளுக்கு இடம் கிடைக்கிறது. இங்கு, ஸ்லைட் ஷோவில் காட்டப்பட வேண்டிய படங்கள் அனைத்தையும் நீங்கள் ஒரு போல்டரில் போட்டு வைக்க வேண்டும். அவை ஒவ்வொன்றாக, ஸ்லைட் ஷோவாகக் காட்டப்படும். அது வேண்டாம் எனில், நீங்கள் மிக விரும்பும் ஒரே ஒரு இமேஜைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

வண்ணங்கள்: தன் வயப்படுத்துதலில், வண்ணங்கள் அமைப்பது அனைவருக்கும் ஆர்வம் தரும் செயலாகும். மாறா நிலையில், நம் பின்புலப் படத்தின் அல்லது படங்களுக்கு ஏற்ற வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். அவ்வாறு அமைக்கையில், காட்டப்படும் படத்திற்கேற்றவாறு, டைல்களின் வண்ணங்களும், படத்தில் அமையும் எல்லைக் கோடு வண்ணங்களும், சில வேளைகளில் ஐகான்களும் கூட மாறும். இது போல அனைத்து படங்களுடன் இணைந்த வண்ணம் மற்றும் பின்னணியைக் கொள்வது அனைவரும் ரசிக்கும் ஓர் அம்சமாகும்.

லாக் ஸ்கிரீன்: விண்டோஸ் 10 இயக்கத்தினை, இயக்குகையில் தோன்றும் முதல் ஸ்கிரீன் தான் 'லாக் ஸ்கிரீன்'. மைக்ரோசாப்ட் இந்த திரைத்தோற்றத்தில் இடம் பெறுவதற்காகவே, பல அருமையான படங்களைத் தந்துள்ளது. சிலர், தங்கள் பயணங்களில் தாங்கள் எடுத்த அருமையான படங்கள், தங்களின் உறவின் படங்கள் ஆகியவற்றை இதில் அமைக்க விருப்பப்படுவார்கள். அதற்கான வழிகள் இந்த திரையிலேயே கிடைக்கின்றன. இதே பக்கத்தில், Screen timeout மற்றும் Screensaver ஆகியவற்றை அமைக்கவும் வழிகள் தரப்பட்டுள்ளன.

திரையின் கரு: 'திரையின் கருப்பொருள்' என்பது டெஸ்க்டாப் பின்னணியில் உள்ள படம், விண்டோவில் அமையும் வண்ணங்கள் மற்றும் ஒலி இணைக்கப்பட்டால், அதுவும் இணைந்த ஒன்றாகும். நீங்கள் அமைத்துள்ள, அல்லது மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ள 'திரைக் காட்சி' உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதனை மாற்றிக் கொள்ளலாம். http://windows.microsoft.com/en-US/windows/themes?ocid=w8_client_themes என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இவற்றைக் காணலாம். இந்த தளத்தின் இடது பக்கம் 16 தலைப்புகளில், அவற்றின் அடைப்படையிலான அருமையான காட்சிகள் உள்ளன.
இவற்றை நீங்கள் முன்பார்வையாகக் காணலாம். Details என்பதில் கிளிக் செய்தால், ஒவ்வொரு பொருள் பற்றிய தகவல்களும் காட்டப்படுகின்றன. திரையில் அது எந்த வகையில் தோற்றமளிக்கும் என்பதை முன்னோட்டக் காட்சியாகக் காணலாம்.
ஒன்றை நீங்கள் பெற விரும்பினால், Download என்பதில் கிளிக் செய்திடவும். அது உங்கள் கம்ப்யூட்டரை அடைந்தவுடன், அதில் கிளிக் செய்து திறக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டரின் திரைக் கருப்பொருளாக அமைக்கப்பட்டு, உங்கள் டெஸ்க்டாப் திரையில் வைக்கப்படும்.
நூற்றுக்கணக்கான படங்களை இங்கு காணலாம். நாம் எந்த தலைப்பில் ஒரு படம் தேவை என்றாலும், அது இணையத்தில் கிடைக்கின்றது.

ஸ்டார்ட்
: தன்வயப்படுத்துதலில், இறுதியாக நாம் அமைக்க வேண்டிய பிரிவு 'ஸ்டார்ட்'. ஸ்டார்ட் பட்டன் செயல்பாட்டினை இங்கு மாற்றி அமைக்கலாம். இதில் கிளிக் செய்தவுடன், எந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் காட்டப்பட வேண்டும் என்பதனை அமைக்கலாம்.
அண்மையில் பயன்படுத்தப்பட்ட செயலிகள் தேவை எனில் அப்படியே அமைக்கலாம். அல்லது ஸ்டார்ட் டிஸ்பிளே மட்டும், திரை முழுவதும் காட்டப்பட வேண்டும் என விரும்பினால், அவ்வாறும் அமைக்கலாம். (நீங்கள் தொடு உணர் திரை பயன்படுத்துபவராக இருந்தால், இது உங்களுக்கு அதிக பயன்களைத் தரும்).
வாழ்க்கை ஒரே மாதிரியாகச் சென்று கொண்டிருந்தால், நமக்கு சலிப்பினை ஏற்படுத்தும். எனவே, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் தோற்றத்தினை, நம் மனதின் எண்ண ஓட்டங்களுக்கேற்றபடி, நம் எதிர்பார்ப்பிற்கேற்றபடி அமைத்துச் செயல்படுத்தினால், நம் பணியில் நமக்குப் புதிய வேகம் ஏற்படும்.
மேலே சொல்லப்பட்ட தகவல்கள், கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் திரையை, விண்டோஸ் 10 இயக்க முறைமையில் மாற்றுவதற்கான சில குறிப்புகளே. இவற்றை மாற்ற வேண்டும் என நீங்கள் இறங்கினால், இன்னும் பல புதிய வழிகளையும் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X