பேஸ்புக் கணக்கினைப் பாதுகாக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மே
2016
00:00

நீங்கள் வழக்கமாக 'பேஸ்புக்' அக்கவுண்ட் பயன்படுத்துபவரா? ஒரு நாள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், எதனையோ பறிகொடுத்தது போல் உள்ளதா? அப்படியானால், அதனைச் சரியாகப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு நல்லது? அதற்கான பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமல்லவா?
ஆனால், பேஸ்புக், நீங்கள் உங்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள உதவிடுகிறது. அதற்கு, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் முகவரியும், மொபைல் தொலைபேசியும் தேவை. இந்த இரண்டும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இயக்க நிலையில் இருந்தால் மட்டுமே, பாஸ்வேர்டினைத் திரும்பப் பெற முடியும். இதற்கான வழிகளைப் பார்ப்போம்.
முதலில் உங்கள் பேஸ்புக் ஹோம் பேஜ் செல்லவும். பின்னர், மேலாக, வலதுபுறம் காட்டப்படும் சிறிய அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி பட்டியலில் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் பக்கத்தில், மேலாக உள்ள General என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், General Account Settings என்ற பிரிவில், e-mail என்பதில் கிளிக் செய்து, அதில், தற்போது தாங்கள் பயன்படுத்தி வரும் மின் அஞ்சல் முகவரி இருக்கட்டும். இதனை மாற்ற வேண்டும் என எண்ணினால், Edit என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் பழைய மின் அஞ்சல் முகவரியை மாற்றலாம். அல்லது, புதியதாக ஒரு மின் அஞ்சல் முகவரியை இணைக்கலாம். இன்னொரு மின் அஞ்சல் முகவரி இருப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் பேஸ்புக் முகவரியை ஒருவர் திருடி பயன்படுத்தினால், இரண்டாவது அஞ்சல் முகவரி உதவிக்கு வரும்.
உங்கள் தற்போதைய மின் அஞ்சல் முகவரி காட்டப்படும். தொடர்ந்து “Add another email or mobile number” என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து, புதிய மின் அஞ்சல் முகவரியை அதில் உள்ளீடு செய்திடலாம். இதே போல, முதன்மை மின் அஞ்சல் முகவரி எது என்பதை அமைக்கலாம். இதில் ஏதேனும் ஒன்றை நீக்க வேண்டும் என எண்ணினால், அதனைத் தேர்ந்தெடுத்து, Remove என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.
அடுத்து உங்கள் போன் எண்ணையும் மாற்றலாம்; அல்லது புதுப்பிக்கலாம். இதற்கு Add another email or mobile number என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Add your phone number? என்பதில் கிளிக் செய்து, புதிய எண்ணைத் தரவும். உங்களுடைய பாஸ்வேர்ட், மின் அஞ்சல் முகவரியையும், போன் எண்ணையும் இணைத்து, ஒன்றைச் சார்ந்து ஒன்றாகப் பயன்படுத்தும் வகையில் தரப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X