ஆப்பிள் நிறுவனத்தில் 4000 பேருக்கு வேலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மே
2016
00:00

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் சென்ற வாரம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது வெளியிடப்பட்ட இந்நிறுவனத்தின் அறிவிப்பில், இந்தியாவில், ஹைதராபாத் நகரில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், ஆப்பிள் தன் நிறுவனப் பிரிவு ஒன்றை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வரும் தன் சாதங்களுக்கான 'வரைபடச் சேவைகள்' (Maps feature) குறித்த ஆய்வும் வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படும். இந்த வகையில், 4000 பேருக்கு இங்கு வேலை வாய்ப்புகள் தரப்படும். ”இங்கு நல்ல திறமை கொண்டவர்கள் பெரும் அளவில் உள்ளார்கள் என்றும், தங்களுடைய செயல்பாடுகளுக்கென, இங்கு இயங்கும் பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் எங்கள் உறவை வளர்த்துக் கொண்டு, திறன் பெற்றவர்களைப் பயன்படுத்த விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல, பெங்களூருவில், ஆப்பிள் நிறுவனம், “வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி” மையம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது இயங்கத் தொடங்கும் எனவும் குக் அறிவித்தார். ஹைதராபாத் நகரில் அமைய இருக்கும் ஆய்வுப் பிரிவு எப்போது தொடங்கப்படும் என காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பத்து பேரில் இருவர் இங்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது. இந்த சந்தையில், சாம்சங் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தைப் பெற்று இயங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனப் போன்களின் பங்கு 2 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்தியாவில், எந்த சாதனத்திற்கும் அதன் விலை அடிப்படையிலேயே விற்பனைச் சந்தை அமையும். அந்த வகையிலேயே ஆப்பிள் போன்கள், குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ரூ. 6,000 விலையில் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கும் நிலையில், மிக உயர்ந்த விலை நிலையில் விற்பனையாகும் ஆப்பிள் போன்களுக்கு, இங்கு இடம் கிடைப்பது கடினம் தான். எனவே, ஆப்பிள், இந்திய சந்தையில் குறிப்பிடும் அளவிற்குத் தன் போன்களை விற்பனை செய்திட வேண்டும் என்றால், குறைந்த விலையில் விற்கப்படும் வகையில், தன் போன்களை வடிவமைக்க வேண்டும்.
ஆனால், அமெரிக்காவில் உள்ளது போல, மொபைல் சேவை நிறுவனங்கள் வழியாகத் தன் ஐ போன்களை விற்பனை செய்திட, டிம் குக் முயற்சி செய்கிறார். இந்த வகையில், ஐபோன் ஒன்றை வாங்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நிறுவனத்தின் மொபைல்
போன் சேவையை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விலை இருக்கும். இதன் தொடர்பாக, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனத் தலைவர்களுடன் குக் பேச்சு வார்த்தை நடத்தினார். 4ஜி சேவை பெரிய அளவில் அமல்படுத்தப்படுகையில், இந்த மொபைல் சேவை ஒப்பந்தம் இணைந்த விலையில், ஐ போன்களை விற்பனை செய்திடும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட பழைய போன்களை, இந்திய சந்தையில் விற்பனை செய்திட இந்திய அரசிடம் அனுமதி கேட்டது. இந்திய நிறுவனங்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், அரசு அனுமதி மறுத்துள்ளது.
125 கோடி மக்கள் தொகையுடன், ஒவ்வொரு மாதமும், 60 லட்சம் புதிய இணைய பயனாளர்களைத் தரும் இந்தியா தற்போது, சிலிக்கன் பள்ளத்தாக்கில் இயங்கும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X