இணையத்தினால் இந்திய உற்பத்தியும் பொருளாதாரமும் உயரும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
00:00

பேஸ்புக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஒவ்வொருவரும் இணைய இணைப்பினப் பெற்றுப் பயன்படுத்தினால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர் அளவில் வளர்ச்சி பெறும் என்று அறிவித்துள்ளது. இதே போல, உலகின் ஒவ்வொரு குடிமகனும் இணைய இணைப்பினைப் பெற்றால், 2020 ஆண்டில், உலக உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவின் மதிப்பு 6.7 லட்சம் கோடி டாலராக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.இந்த வகையில் இணையப் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டால், இந்தியா மற்றும் சீனாவின் உற்பத்திப் பிரிவின் வளர்ச்சி, 2.089 லட்சம் கோடி டாலராக உயரும். இது உலக அளவில் கணிக்கப்பட்ட உற்பத்தி பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்காகும். அத்துடன், இந்தியாவில், இணைய இணைப்புக் கட்டணம் 66% குறைந்தால், ஐந்தில் நான்கு பேரால், இணைய இணைப்பினைத் தனக்கென பெற்றுப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இணைய சேவை வழங்கும் பிரிவில் இயங்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 11% நஷ்டத்தில் இயங்குவதால், தற்போதைய இணையக் கட்டணத்தில் குறைப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை.பேஸ்புக் நிறுவனம், ஆய்வு நடத்துவதில் புகழ் பெற்ற Pricewater house Coopers நிறவனம் மூலமாக இத்தகைய ஆய்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆய்வின் முடிவில், titled “Connecting the world: Ten mechanisms for global inclusion” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தற்போது ரூ.100 என்ற அளவில், இணைய டேட்டா இணைப்பிற்கென வசூலிக்கப்படும் கட்டணம், ரூ. 34 ஆகக் குறைக்கப்பட்டால், இந்தியாவில் உள்ள ஜனத்தொகையில், 80% பேர் இணைய இணைப்பினை நிச்சயம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. IndiaSpend என்னும் அமைப்பின் அறிக்கையின்படி, இணையப் பயன்பாடு, 2015 ஆம் ஆண்டில், இந்திய ஜனத்தொகையில் 29% பேரைச் சென்றடைந்துள்ளது. இது 35.4 கோடி பேராகும். இந்த ஜூன் மாத இறுதியில், இது 39% ஆக (46.2 கோடி பேர்) உயரும். இணைய டேட்டாவிற்கான செலவினைக் கணக்கிடுகையில், 500 எம்.பி. அளவிலான டேட்டா திட்டம், அனைவருக்கும் கட்டுபடியான திட்டமாக இருக்கும். ஒருவரின் மாத வருமானத்தில், இது 5% க்கும் குறைவாக இருக்கும். இணையம் வழியாக, தினந்தோறும் 5 நிமிடம் இயங்கக் கூடிய விடியோவினை பார்க்கக் கூடிய திறன் பெற்றவர்கள், மொத்தத்தில் 2% பேர்தான் என்று இந்த அறிக்கை எடுத்துரைத்துள்ளது. இன்னும் கூடுதலாக, இரண்டு நிமிட விடியோவினை, இதனுடன் சேர்த்துக் கணக்கிட்டால், 1% இந்தியர்கள் தான் இதனை மேற்கொள்ள முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, இணையப் பயன்பாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால், பலர் இதிலிருந்து விலகி வருகின்றனர். இன்னும் பலர் இணைப்பே இல்லாமல் உள்ளனர். சென்ற பிப்ரவரி மாதத்தில் Pew Research Centre என்னும் அமைப்பு வெளியிட்ட அறிவிக்கையின்படி, 22% பேர், எப்போதாவது ஒருமுறை தான் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும், தாங்கள் ஸ்மார்ட் போன் ஒன்றைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.இந்தியாவில், இணைய இணைப்புகளில், 70% பேர் 2ஜி இணைப்பினையே கொண்டுள்ளனர். ஆனால், இவை இணைய சேவை தரும் நிறுவனங்களுக்கு லாபத்தைத் தருவதில்லை. எடுத்துக் காட்டாக, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கிராமப் புற 2ஜி சேவைத் தளம் ஒவ்வொன்றிலும், கூடுதலாக 1000 பேர் இணைந்து சேவை பெற்றால் தான், நிறுவனம் லாபமும் நஷ்டமும் இல்லாத நிலை ஒன்றை அடையும். ஆனால், தொலைபேசி அழைப்பு சேவைப் பிரிவில் 480 சந்தாதாரர்கள் இருந்தாலே, நிறுவனம் லாப நஷ்டம் இல்லாத நிலையை அடையும். ஆனால், பேஸ்புக் இந்த நிலையைத் தன் இலவச இணைய இணைப்புத் திட்டத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்கிறது. (இந்த திட்டத்திற்கு இந்தியா தடை போட்டுவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.) பேஸ்புக் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் இணைய இணைப்பினை அனைவரும் பெற்றுப் பயன்படுத்த வேண்டும் என்பது தன் இலக்காக உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறது. நூறு கோடி இந்தியர்களுக்கு மேல் இணையம் என்பதை அறியாமல் உள்ளனர். இவர்களை இப்படியே இயங்க அனுமதிக்கக் கூடாது என்று பேஸ்புக் கூறுகிறது. பேஸ்புக் நிறுவனர் மார்க் இது பற்றிக் கூறுகையில், “உலக அளவில், 56% பேர் இணைய இணைப்பு இல்லாமல் உள்ளனர். இவர்களை இணையம் வழி மற்றவர்களுடன் இணைத்தால், அது பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். புதிய விற்பனை சந்தைகளை ஏற்படுத்தும். அத்துடன் பல கோடி பேர் வறுமையிலிருந்து மீள்வார்கள்” என அறிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X