இலவச பிரவுசர்களிடையே என்ன வேறுபாடு?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
00:00

இணையம் உலா வர நமக்கு பிரவுசர் ஒன்று தேவைப்படுகிறது. பிரவுசர்களைக் கட்டணம் செலுத்தி யாரும் வாங்குவதில்லை. இலவசமாக, இணைய தளங்களிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே ஏதேனும் வேறுபாடு உள்ளதா என யாரும் பார்ப்பதில்லை. ஒன்றைப் பழக்கிக் கொண்டுவிட்டால், தொடர்ந்து அதனையே பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே உள்ளது. ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால், பிரவுசரை மாற்றுவதால் நம் பாதுகாப்பு அதிகமாகும் என்றால், பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்றால், உடனே நாம் வேறு பிரவுசருக்கு மாறிக் கொள்கிறோம். ஆனால், யாரும் இவற்றின் இயக்க முறைகளின் தன்மைகளில் உள்ள வேறுபாட்டின் காரணமாக, பிரவுசரைத் தேர்ந்தெடுப்பதில்லை. இருப்பினும் இந்த பிரவுசர்களிடையே குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வேறுபாடான செயல் தன்மைகள் உள்ளன. இணையத்தில் கிடைக்கும் கீழே குறிப்பிட்டுள்ள பத்து பிரவுசர்களின் செயல்முறைகளுக்கிடையேயான வேறுபாட்டினை இங்கு காணலாம். அந்த பத்து பிரவுசர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: Avant Browser, Chrome, Deepnet Explorer, Firefox, Internet Explorer, Maxthon, Opera, Safari, Torch மற்றும் SeaMonkey.
வேகமான இணைப்பு: பிரவுசர் ஒன்றை இயக்கத் தொடங்கியவுடன், அது இணையத்தில் இணையும் நேரத்தினை இணைய இணைப்பில் ஆய்வு செய்தபோது, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் மிகக் குறைவான நேரத்தில் இணைப்பினைப் பெற்று செயல்பட்டது. இதன் இணைப்பு நேரம் 1.55 விநாடிகள். இதனை அடுத்து குரோம் பிரவுசர், 1.56 விநாடிகளில் இணைந்து செயல்பட்டது. சபாரி 1.85 விநாடிகளில் இணைந்தது. இந்த சோதனையை ஒவ்வொரு பிரவுசரிலும் பத்து முறை, ஸ்டாப் வாட்ச் கொண்டு சோதனை செய்யப்பட்டே இந்த முடிவுகள் அறியப்பட்டன. பிரவுசர் செயல்படத் தொடங்கியதிலிருந்து, ஓர் இணைய தளம் செல்வதற்கான நேரம் அடுத்து கணக்கிடப்பட்டது. இதில் டார்ச் பிரவுசர் 2.8 விநாடிகளிலும், பயர்பாக்ஸ் 3.2 விநாடிகளிலும், ஆப்பரா 3.29 விநாடிகளிலும் தளம் சென்றன. மற்றவை எல்லாம், மேலே காட்டிய சோதனைகளில் வேகம் குறைவாகவே செயல்பட்டன. இயக்கமுறைமைக்கு ஈடு கொடுத்தல்: மேலே சொல்லப்பட்ட பத்து பிரவுசர்களும், கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்றும் சோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில், அனைத்து பத்து பிரவுசர்களின் செயல்பாடுகளிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை. அனைத்தும் விண்டோஸ் இயக்கத்தினை சப்போர்ட் செய்தன. Avant Browser, Deepnet Explorer, Internet Explorer, மற்றும் Torch தவிர மற்றவை மேக் இயக்கத்தில் செயல்பட்டன. Chrome, Firefox, Maxthon, மற்றும் Opera ஆகிய நான்கும் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் சிறப்பாக இயங்கின. Chrome, Maxthon, Opera, மற்றும் Safari ஆகிய நான்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயக்கத்தில் செயல்பட்டன.
தொழில் நுட்ப உதவி: பொதுவாகவே, இணைய பிரவுசர்களின் இயக்க முறை குறித்து அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். இதற்குக் காரணம், இந்த பிரவுசர்களின் செட்டிங்ஸ் முறைகள் தெளிவாகக் காட்டப்படுவதே. மேலும், இந்த பிரவுசர்களின் இயக்கம் குறித்து நாம் பிரச்னைகளை எதிர் கொள்கையில், நமக்கு உதவிட பல இணைய தளங்கள் உள்ளன. இவற்றிடமிருந்து நாம் பலவகை உதவிகளைப் பெற முடிகிறது.இருப்பினும், இந்த பிரவுசர்கள், பயனாளர்களுக்கு உதவிட, இணையத்திலேயே உதவி, பயனாளர்கள் குழு அமைப்பு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் (FAQ) என்ற பிரிவு மற்றும் மின் அஞ்சல் வழி உதவி எனப் பல வகைகளில் உதவுகின்றன. அவாண்ட் பிரவுசர் தவிர மற்ற அனைத்து 9 பிரவுசர்களும் இணையத்தில் பயனாளர்கள் வழிகாட்டி (online user guide)யினை அமைத்து வழங்குகின்றன. Tutorials எனப்படும் விளக்க குறிப்புகளை, அவாண்ட் பிரவுசர் மற்றும் டீப்நெட் எக்ஸ்புளோரர் தவிர மற்ற அனைத்தும் தருகின்றன.மேலே தரப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் நமக்குத் தேவையான பிரவுசரைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X