சோனி எக்ஸ்பீரியா இ4 டூயல் பிளாக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
00:00

பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, சோனி நிறுவனம், எக்ஸ்பீரியா வரிசையில் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் எக்ஸ்பீரியா இ4 டூயல் பிளாக் (Xperia E4 Dual Black) இதன் அதிக பட்ச விலை ரூ.7,200. இதில் தரப்பட்டுள்ள 5 அங்குல ஐ.பி.எஸ். கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 540 x 960 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. நான்கு விரல்களில் இயக்கக் கூடிய மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. திரையின் பாதுகாப்பிற்கு, கீறல் ஏற்படுத்த முடியாத கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஞ்சர், இமெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. டாகுமெண்ட் வியூவர் இருப்பதனால், போனிலேயே டாகுமெண்ட்களைப் படிக்கவும் திருத்தவும் முடிகிறது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம் என்பது இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பாகும். இதன் பரிமாணம் 137 x 74.6 x 10.5 மிமீ. எடை 144 கிராம். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் திறன் 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வை பி, புளுடூத், யு.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது. முன்புறக் கேமரா 2 எம்.பி.திறன் கொண்டதாக உள்ளது. இதன் சிப்செட் Mediatek MT6582 . 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த குவாட் கோர் சிப்செட் கோர்டெக்ஸ் ஏ 7 வகையைச் சேர்ந்தது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட். ஆர்.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம் கொண்ட எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இசை ரசிகர்களுக்கு வசதியைத் தருகின்றன. இதன் பேட்டரி போனிலேயே இணைக்கப்பட்டுள்ளது. வெளியே எடுக்க இயலா வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லித்தியம் அயன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டது. 552 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. தொடர்ந்து 12 மணி நேரம் பேசும் வசதியைக் கொண்டது. இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.7,200.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X