ரூ.15,000க்கும் குறைவான மே மாத மொபைல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
00:00

இந்திய மொபைல் சந்தை, விலையை முதன்மை அடிப்படைக் காரணமாகக் கொண்டு இயங்கும் ஒரு சந்தையாகும். அதனாலேயே பல நிறுவனங்கள், அனைத்து நிலை விலைகளிலும் பல மாடல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. சென்ற மே மாதத்தில், இந்தியாவில் நடுநிலையில் பல மொபைல் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்தன. ரூ. 15,000க்கும் குறைவான விலையில் வந்த சில ஸ்மார்ட் போன்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

HTC Desire 628: எச்.டி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைக் கால மாடல் ஸ்மார்ட் போன். இதன் அதிகபட்ச விலை ரூ.13,990. 5 அங்குல திரை, லாலிபாப் சிஸ்டம், 1.3 கிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் மற்றும் 3 ஜி.பி. ராம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இதன் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியை 2 டெரா பைட் அளவிற்கு உயர்த்தலாம் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். HTC BoomSound செயலியின் இயக்கத்தில் இதன் ஸ்பீக்கர்கள் சிறப்பாக இயங்குகின்றன.

Galaxy J5 (2016): ரூ. 13,990 என விலையிட்டு சாம்சங் நிறுவனம் தன் சாம்சங் கேலக்ஸி ஜே 5 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. 5.2 அங்குல திரை, ஆண்ட்ராய்ட் 6 மார்ஷ்மலாய் சிஸ்டம், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக குவாட் கோர் ப்ராசசர், 2 ஜி.பி. ராம், 16 ஜி.பி, ஸ்டோரேஜ் மெமரி, 13 எம்.பி. மற்றும் 5 எம்.பி. திறன் கொண்ட கேமராக்களுடன் 3,100 mAh திறன் கொண்ட பேட்டரி இதன் சிறப்பம்சங்களாகும்.

Moto G4 Plus: மோட்டாரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன். இதன் அதிக பட்ச விலை ரூ. 13,499. முதல் முதலாக விரல் ரேகை சென்சாருடன், மோட்டாரோலா நிறுவனம் கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் போன் இது. 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa Core Qualcomm Snapdragon 617 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ராம் மெமரி, 16/32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, 3,000 mAh திறன் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

ZUK Z1: லெனோவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் ZUK Z1. இதன் விலை ரூ. 13,499. மெட்டல் பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு, 5.5 அங்குல திரையினைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் சிஸ்டம், 2.5GHz Qualcomm Snapdragon 801 ப்ராசசர், 3 ஜி.பி. ராம் மற்றும் 64 ஜி.பி, ஸ்டோரேஜ் என இதன் சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் பேட்டரி 4,100 mAh திறன் கொண்டதாக உள்ளது இதன் சிறப்பினை உயர்த்துகிறது.

Intex Aqua Joy: இந்தப் பட்டியலில் மிக விலை குறைவான ஸ்மார்ட் போன், இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள Intex Aqua Joy ஆகும். 4 அங்குல திரை, 1.2GHz Quad-core Spredtrum ப்ராசசர், லாலிபாப் சிஸ்டம், 512 எம்.பி. ராம், 4 ஜி.பி, ஸ்டோரேஜ் மெமரி என இதன் சிறப்பம்சங்கள் விரிகின்றன. இதன் விலை ரூ. 5,999. இன்டெக்ஸ் நிறுவனம் ரூ. 5,599 விலையில், Cloud String HD ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. 5 அங்குல திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், விரல் ரேகை சென்சார் என அம்சங்கள் கொண்டதாக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 ஜி.பி. ராம் மெமரி கொண்ட இந்த போனில், 2,200 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
Aqua Secure என்ற பெயரில், இன்னொரு ஸ்மார்ட் போனையும், மே மாதம் இன்டெக்ஸ் வெளியிட்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,499. ராம் மெமரி 1 ஜி.பி. இதன் பேட்டரி 1,900 mAh திறன் கொண்டது.

Bolt Selfie Q424: செல்பி படம் எடுப்பதில் துடியாய் இருப்பவர்களுக்கென விசேஷமாய் வடிவமைத்து, Bolt Selfie Q424 ஸ்மார்ட் போனை, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.4,999. 4.5 அங்குல அளவில் திரை. முன்புறமும், பின்புறமும் 5 எம்.பி. திறன் கொண்ட கேமராக்கள் என இதன் சிறப்பம்சங்களைக் கூறலாம்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரூ. 8,499 என்ற விலையில், Canvas Evoke என்ற ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில், இதுவே முதல் ஸ்மார்ட் போனாகும். இதன் திரை 5.5 அங்குல அளவில் இருப்பது இதன் முதல் சிறப்பு. ஆக்டா கோர் Qualcomm Snapdragon 415 ப்ராசசர் இதனை இயக்குகிறது. 3 ஜி.பி. ராம், 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி கிடைக்கின்றன. 13 எம்.பி. திறனில் ப்ளாஷ் இணைந்த கேமராவும், 5 எம்.பி. திறன் கொண்ட இன்னொரு கேமராவும் உள்ளன.

Lava A79: லாவா நிறுவனத்தின் இந்த ஸ்மர்ட் போன் விலை ரூ. 5,699. இதன் திரை 5.5. அங்குல அளவில் அமைந்துள்ளது. ஆண்ட்ராய்ட் 5.1 சிஸ்டம், 1.2 GHz quad-core ப்ராசசர், 1 ஜி.பி, ராம், 8 ஜி.பி.ஸ்டோரேஜ் மெமரி என இதன் சிறப்பம்சங்கள் உள்ளன. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது.

Eluga A2: பானாசோனிக் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட் போன் Eluga A2. இது ஒரு 4ஜி போன். இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் 16 ஜி.பி. 5 அங்குல அளவில் திரை கொண்ட இந்த ஸ்மார்ட் போனில், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இயக்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறனுடன் கூடிய பின்புறக் கேமராவும், 5 எம்பி திறன் கொண்ட முன்புறக் கேமராவும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 9,490.

மேலே சொல்லப்பட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களுடன் வேறு சில ஸ்மார்ட் போன்களும், இதே விலை அளவில் அறிமுகமாகி இருக்கலாம். பயனாளர்கள் ஸ்மார்ட் போன் வாங்குகையில், மேலே சொல்லப்பட்ட ஸ்மார்ட் போன்கள், விலை, வசதிகள் ஆகியவற்றை மனதில் கொண்டு தாங்கள் வாங்குவதற்கான போனை முடிவு செய்திடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X