லூன் இணைய சேவை திட்டத்தின் சோதனை ஓட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
00:00

கூகுள் நிறுவனம், உலக மக்களை இணைய வழி இணைக்கும் நோக்கத்துடன் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகிறது. விண்ணில் ஏவப்படும் பலூன்கள் மூலம், எளிதாக யாரும் நெருங்க முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இணைய சேவையினை வழங்க, கூகுள் பல நாடுகளில் முயற்சி எடுத்து வருகிறது. அண்மையில் இதன் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பலூன்களில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். தரையிலிருந்து 20 கி.மீ. உயரத்தில் இவை பறந்தபடி இருக்கும். இதிலிருந்து இணைய தொடர்பிற்கான வசதி வழங்கப்படும். ஒரு பலூன் 40 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு இணைய சேவையினை வழங்கும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பின்னர், ஆந்திர மாநிலம் அல்லது மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் லூன் இணைய திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்த திட்டம், 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய அரசின் தகவல் தொலை தொடர்பு அமைச்சகத்திடமிருந்து பல வழிகளில் இந்த திட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே இயங்கி வரும் மொபைல் மற்றும் இணைய சேவை நிறுவனங்களில் செயல்பாடுகளில் இந்த பலூன் சேவை குறுக்கிடும் என்று அரசு கருதியது. அத்துடன் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகமும், லூன் திட்டம் நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பில் குறுக்கிட்டு, நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எனக் கருதியது. விமான சேவை சார்ந்த அமைச்சகம், லூன் பலூன் திட்டம், விமானங்களின் பயணப் பாதைகளில் குறுக்கிடும் எனக் கருதியது.
தொலை தொடர்பு பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், அரசு ஒரு பைசா கூட வாங்காமல், கூகுள் நிறுவனம் இணைய சேவை வழங்க அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்கொள்ளவே, கூகுள் நிறுவனம், இந்திய அரசின் தகவல் தொடர்பு பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து லூன் திட்டத்தினை இயக்க முடிவு செய்துள்ளது. இலவச இணைய சேவையினை இரயில்வே ஸ்டேஷன்களில் வழங்கும் திட்டத்தினை, கூகுள் நிறுவனம் தொடர்ந்து விரிவடையச் செய்து வருகிறது. இத்தகைய ஸ்டேஷன்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதிக மக்கள் இணைய இணைப்பில் வருகையில், தன்னுடைய விளம்பரங்கள் அதிகமான எண்ணிக்கையில் மக்களை அடையும் என கூகுள் திட்டமிடுகிறது. அடிப்படையில், கூகுள், விளம்பரங்களை இயக்கும் நிறுவனமாகும். இணைய பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், தன் விளம்பர வர்த்தகம் அதன் மூலம் அதிகரிக்கும் என கூகுள் இலக்கு வைக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில், 90.4%, விளம்பரங்களில் இருந்தே கிடைத்து வருகிறது. இந்தியாவில், இன்னும் 90 கோடி பேர் இணைய இணைப்பு இல்லாமல் இருக்கின்றனர். இது 22% ஜனத்தொகையாகும். இந்த ஜூன் மாத இறுதிக்குள், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 46.2 கோடியாக உயரும் என்று கூகுள் கணித்துள்ளது. இவர்களுக்கு இணைய சேவை அளிக்கும் பட்சத்தில், தன் விளம்பர வருமானம் பெருகும் என்றும் கூகுள் கருதுகிறது.
இதற்கு முன்பு, “ப்ரீ பேசிக்ஸ்” என்னும் இலவச இணைய இணைப்பு தரும் திட்டத்தினை, பேஸ்புக் முன் வைத்து இயக்கிய போது, அரசு அதனைத் தடை செய்தது. அனைவருக்கும், பொதுவான ஒரே மாதிரியான இணைய சேவை என்னும் அடிப்படைக் கோட்பாட்டிற்கு, பேஸ்புக் திட்டம் எதிராக உள்ளது என்று மத்திய அரசு தடை விதித்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X