அசையும் படங்களை நிறுத்தலாம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
00:00

சிறிய அளவிலான அசையும் படங்கள் நமக்கு வேடிக்கையாகவும் சிரிப்பை வரவழைப்பதாகவும் அமைக்கப்பட்டு இணையத் தொடர்புகளில் காட்டப்படுகின்றன. இவை தொடர்ந்து இயங்கும் தன்மை உடையவை. நாமும் அவற்றைப் பயன்படுத்த தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், சில வேளைகளில் இவை எரிச்சலைத் தருவதாயும் அமைகின்றன. மிக மெதுவாக இயங்கும் இணைய இணைப்பினை நாம் கொண்டிருக்கையில், இந்த சிறிய அசையும் படங்கள் (Animated GIF) நிறைய நேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும், இவை திரையில் வந்தவுடனேயே, நம் அனுமதி இன்றியே இயங்கத் தொடங்கிவிடுகின்றன. நாம் மற்றவற்றில் நம் கவனத்தைச் செலுத்த முடியாது. இவற்றை நிறுத்தும் வழிகளை சில பிரவுசர்கள் கொண்டுள்ளன. சில ஆட் ஆன் தொகுப்புகளும் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
Animated GIFs என அழைக்கப்படும் இவை, தொழில் நுட்ப ரீதியாக படங்களே. விடியோ காட்சிகள் அல்ல. எனவே, “இயக்குவதற்கு கிளிக் செய்திட” ப்ளக் இன் புரோகிராம்கள் மற்றும் விடியோ இயக்க தடுப்பு நீட்சி செயலிகளைக் (click-to-play plugins மற்றும் video-blocking extensions) கொண்டு இவற்றின் இயக்கத்தினை நிறுத்த முடியாது. ஆனால், ஒரு பக்கத்தில் இயங்கத் தொடங்கும் இந்த அசையும் படங்களை எஸ்கேப் கீ அழுத்தி அதன் இயக்கத்தினை நிறுத்தலாம். ஆனால், குரோம் பிரவுசர் இது போல எஸ்கேப் கீ செயல்படுத்தப்படுவதனை விரும்பவில்லை. மொஸில்லா இந்த சுருக்கு வழியைத் தன் அண்மைக் காலத்திய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளில் எடுத்துவிட்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த சுருக்கு வழி செயல்படுகிறது. ஆனால், மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரில், இது செயல்படவில்லை. எனவே, இந்த படங்களின் அசைவை நிறுத்த வேறு சில வழிகளைக் கையாள வேண்டியதுள்ளது.
குரோம் பிரவுசரில், இந்த அசையும் படங்களின் இயக்கத்தினை நிறுத்த எதுவும் தரப்படவில்லை. எனவே, இயக்கத்தினை நிறுத்த, பிரவுசர் எக்ஸ்டன்ஷன் செயலிகளைக் கையாள வேண்டும். இதற்கென, கூகுள் நிறுவனம் தன் அத்தாட்சி பெற்ற சில எக்ஸ்டன்ஷன் செயலிகளை அனுமதித்துள்ளது. அத்தகைய செயலிகளில் ஒன்று Animation Policy. இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம், பிரவுசர் டூல் பார் ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் இந்த அசையும் படங்கள் அசைவதனை நிறுத்தலாம். இந்த டூல் பாரினைப் பயன்படுத்தி, இந்தப் படங்களின் அசைவினை முழுமையாக நிறுத்தலாம். அல்லது ஒருமுறை இயங்கிவிட்டு நிறுத்தும்படி அமைக்கலாம். இந்த அமைப்பினை அமைத்தவுடன், இணையதளப் பக்கத்தை மீண்டும் மூடித் திறக்க வேண்டும்.
சில பயனாளர்கள், மேலே சொல்லப்பட்ட கூகுள் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் சில இணைய தளப் பக்கங்களில் செயல்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் Gif Jam (Animation Stopper) என்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இது வழக்கமான முறைக்கு மாறாக, வேறு வழியில் செயல்படுவதால், குரோம் பிரவுசரில் நிச்சயம், அசையும் படங்களின் செயல்பாட்டினை நிறுத்தும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் இணைந்தபடி இதற்கென ஒரு டூல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி, அசையும் பட இயக்கத்தினை நிறுத்தலாம்; அல்லது ஒரே ஒரு முறை மட்டும் இயக்கும்படி அமைக்கலாம்.
இதனை அமைக்க பயர்பாக்ஸ் முகவரிக் கட்டத்தில் about:config என டைப் செய்து என்டர் தட்டவும். மாற்றக் கூடாத அமைப்பினை மாற்ற இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை செய்தி இங்கு கிடைக்கும். ஏனென்றால், இந்தப் பிரிவில் தேவையற்ற மாற்றங்களை நம்மை அறியாமல் ஏற்படுத்திவிடுவோம். இது வேண்டாத பிரவுசர் இயக்கத்தினைத் தரலாம். எனவே, இங்கு “I'll be careful, I promise!” என்பதில் கிளிக் செய்த பின்னரே, மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
தொடர்ந்து தேடல் கட்டத்தில் image.animation என about:config பக்கத்தில் டைப் செய்து தேடவும். இங்கு image.animation_mode என்ற ஒரு அமைப்பு பிரிவினைக் காணலாம். இது மாறா நிலையில் normal என்றபடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், ஒவ்வொரு அசையும் படமும், தொடர்ச்சியாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்து, none என்றபடி அமைக்கவும். அல்லது, ஒருமுறை இயங்கி நிறுத்தும் வகையிலும் அமைக்கலாம். இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர், பிரவுசரை மீண்டும் இயக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டியதில்லை. இங்கு ஏற்படுத்திய மாற்றத்தை நீக்கி, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, about:config திரை சென்று, மீண்டும் normal என்றபடி இதனை அமைக்க வேண்டும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், எஸ்கேப் கீயை அழுத்தி அசையும் பட அசைவுகளை நிறுத்தலாம். புதியதாக இணையப் பக்கம் ஒன்று, கம்ப்யூட்டரின் பிரவுசரை அடைந்தவுடன், எஸ்கேப் கீயை அழுத்தினால், அந்தப் பக்கத்தில் காணப்படும் அசையும் படங்களின் இயக்கம் நிறுத்தப்படும்.
மொத்தமாக இவை நிறுத்தப்படுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் வேறு ஓர் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் பிரவுசரில், செட்டிங்ஸ் மெனு ஐகானில் கிளிக் செய்து திறக்கவும். இங்கு “Internet Options” என்பதில் கிளிக் செய்து, “Advanced” என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஸ்குரோல் செய்து, கீழாகச் சென்று, “Multimedia” என்னும் பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Play Animations in Webpages” என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கிவிடவும்.
இந்த புதிய மாற்றம் செயல்பாட்டிற்கு வர, நீங்கள் கம்ப்யூட்டரின் இயக்கத்தினையே மீண்டும் இயக்க வேண்டியதிருக்கும். இதைச் செய்து முடித்துவிட்டால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், அசையும் படங்களில் அசைவினைக் காண முடியாது. முழுமையாகவும், எப்போதும் இந்த படங்களின் அசைவினை நிறுத்த, இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் வேறு எளிய வழிகள் இல்லை.
மைக்ரோசாப்ட் அண்மையில் தந்திருக்கும் எட்ஜ் பிரவுசரில் இந்தப் பட அசைவுகளை நிறுத்தும் வழிகள் எதுவும் இல்லை. எட்ஜ் பிரவுசர், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்வது இல்லை. வரும் விண்டோஸ் 10 இயக்க முறைமையின் ஆண்டுவிழாவின் போது, இதற்கான எக்ஸ்டன்ஷன் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X