உலகின் மிக மெல்லிய லேப்டாப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
00:00

லேப்டாப் வடிவமைத்துத் தருவதில் பன்னாட்டளவில் பெயர் பெற்ற ஹ்யூலட் பேக்கார்ட் என்னும் எச்.பி. நிறுவனம், உலகிலேயே மிகக் குறைந்த தடிமன் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டரை வடிவமைத்து, இந்த ஜூன் மாதம் 21 அன்று, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திட உள்ளது. இந்த லேப்டாப் கம்ப்யூட்டர் HP Spectre என அழைக்கப்படுகிறது. இதன் விலை ஏறத்தாழ ரூ. 78,650 ஆக இருக்கலாம்.
இந்த லேப்டாப்பின் தடிமன் 10.4 மில்லி மீட்டர் (0.41 அங்குலம்). 12 அங்குல அளவில், 0.52 அங்குல தடிமனுடன் வெளிவந்திருக்கும் மேக்புக் (MacBook) மற்றும் மேக் புக் ஏர் ஆப்பிள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் மெல்லியதாக எச்.பி. இருக்கிறது. இதனுடைய தோற்றமும் முற்றிலும் புதிய வகையில், அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. இந்த HP Spectre லேப்டாப் கம்ப்யூட்டரில், LDDR3 RAM 8 ஜி.பி. என்ற அளவில் தரப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் வசதிக்கு எஸ்.எஸ்.டி. ஹார்ட் ட்ரைவ் 512 ஜி.பி. அளவில் உள்ளது. இதில் 6th generation Intel Core i5 (2.3-GHz Intel Core i5-6200U CPU) மற்றும் i7 ப்ராசசர்கள் இயங்குகின்றன.
இதில் தரப்பட்டுள்ள ஹைப்ரிட் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 9 மணி நேரத்திற்கும் மேலாக செயல்பாட்டிற்கான மின் சக்தியை வழங்குகிறது. இதில் டைப் சி யு.எஸ்.பி. போர்ட்கள் மூன்று தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் தரப்பட்டுள்ள டச் பேட் மிக அகலமாகப் பெரிய அளவில், 5.5 X 2.6 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர்களிலிருந்து (Bang & Olufsen Speakers) கிடைக்கும் ஒலி மிகத் தெளிவாக உள்ளது. இதன் திரை 15 அங்குல அளவில் தொடு உணர் திரையாக அமைக்கப்பட்டுள்ளது. பல மணி நேரப் பயன்பாட்டிலும், இதில் வெப்பம் உணரப்படவே இல்லை.
எச்.பி. நிறுவனத்திற்கு, நான்கு சாய்வு கோடுகளால், எச்.பி. என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட லோகோ ஒன்று புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எச்.பி.நிறுவனத்தின் இந்த புதிய இலச்சினையைத் தாங்கி வரும் லேப்டாப் கம்ப்யூட்டர் HP Spectre லேப்டாப் ஆகும். இந்த இலச்சினை இனி வரும் அனைத்து எச்.பி. கம்ப்யூட்டர்களிலும் இடம் பெறுமா அல்லது உயர்ரக கம்ப்யூட்டர்களில் மட்டும் இடம் பெறுமா என்பது குறித்து இன்னும் தெளிவாக்கப்படவில்லை.
இதன் விலை சற்று அதிகமாக உள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X