விண்டோஸ் 10ல் ஹைபர்னேட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

பல வாசகர்கள், தங்களின் விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஷட் டவுண் மெனுவில், ஹைபர்னேட் ஆப்ஷன் காட்டப்படவில்லை என்று எழுதி உள்ளனர். குறிப்பாக லேப்டாப் கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், இந்த ஆப்ஷனை அடிக்கடி பயன்படுத்தி வந்ததாகவும், அது இல்லாதது, சிக்கலைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பலர், அந்த ஆப்ஷன், விண்டோஸ் 10ல் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கலாம். அந்த ஆப்ஷன் மாறா நிலையில் தரப்படவில்லை; நாமாக செட் செய்து கொள்ளலாம். அதனை எப்படி செட் செய்வது என்பதனையும், ஹைபர்னேட் என்பது எந்த நிலையைக் குறிக்கிறது என்றும் பார்க்கலாம்.
பொதுவாக, கம்ப்யூட்டரில் வேலை முடிந்தவுடன், கருமமே கண்ணாக இருப்பவர்கள், பைல்கள் அனைத்தையும் சேவ் செய்து, ஒவ்வொரு புரோகிராமினையும் சரியாக மூடி, கம்ப்யூட்டரின் இயக்கத்தினையும் நிறுத்துவார்கள் (Shut Down). இதுதான் சரியான வழியும் கூட. ஆனால், இடையே சிறிது ஓய்வு எடுப்பவர்கள் (எடுக்கத்தான் வேண்டும்), கம்ப்யூட்டரை மேற்சொன்னவாறு ஷட் டவுண் செய்து, பின் மீண்டும் இயக்குவதை விரும்பவில்லை. மேலும், லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர்களில், அப்படியே விட்டு செல்வது, பேட்டரியின் மின் சக்தியைக் காலி செய்திடும். எனவே தான், மைக்ரோசாப்ட், Sleep மற்றும் Hibernate என இரு ஆப்ஷன்களைத் தந்தது.
ஆனால், விண்டோஸ் 10 இயக்க முறைமையில், மற்ற ஷட் டவுண் விருப்பங்களிடையே, 'ஹைபர்னேட்' ஆப்ஷனைத் தரவில்லை. அதனை விரும்புபவர்கள் மட்டும் இயக்கி வைக்கட்டும் என வழியைத் தந்துள்ளது.

'ஹைபர்னேட்' எதற்காக?
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், 'ஹைபர்னேட்' நிலையை அமைக்கும் முன்னர், அது என்ன வகையான நிலை? எதற்காக அதனைப் பலர் விரும்புகின்றனர்? என்று பார்க்கலாம். 'ஹைபர்னேஷன்' என்பது, வழக்கமாக நாம் மேற்கொள்ளும் ஷட் டவுண் நிலைக்கும், 'ஸ்லீப்' நிலைக்கும் இடைப்பட்ட ஒன்றாகும். இது லேப்டாப் கம்ப்யூட்டரை இலக்காகக் கொண்டே தரப்பட்டது. நாம் நம் கம்ப்யூட்டரை 'ஹைபர்னேட்' நிலையில் வைக்கும்போது, அப்போது கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நிலை சேவ் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. எந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன, எந்த கோப்புகள் செயல்பாட்டில் உள்ளன என்பதை, ஹார்ட் டிஸ்க்கில் கம்ப்யூட்டர் சேவ் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை Off நிலைக்குக் கொண்டு செல்லும். மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது, எந்த இடத்தில் எந்த எந்த புரோகிராம்களுடன் நீங்கள் ஹைபர்னேட் நிலைக்குச் சென்றீர்களோ, அந்த புரோகிராம்கள் இயக்கப்பட்டு, அதில் உள்ள கோப்புகள் நீங்கள் செயலாற்றத் தயாராக இருக்கும். ஸ்லீப் நிலை போல இது மின்சக்தியைப் பயன்படுத்தாது. ஆனால், அதனைக் காட்டிலும் சற்று அதிகமான நேரத்தை, மீண்டும் கம்ப்யூட்டரை இயக்க எடுத்துக் கொள்ளும்.
சரி, இதனை எப்படி விண்டோஸ் 10ல் அமைப்பது? 'ஹைபர்னேட்' ஆப்ஷனை எப்படி 'பவர்' மெனுவில் கொண்டு வருவது? Start > Power எனத் தொடங்கி, டாஸ்க் பாரில் உள்ள தேடல் கட்டத்தில் ''power options” என டைப் செய்து எண்டர் தட்டவும். இதன் முதல் விடையாக 'கண்ட்ரோல் பேனல்' கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் திறக்கப்பட்டவுடன், இடது பக்கம் உள்ள பிரிவில் Choose what the power buttons do என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலாக, Choose the power settings that you want for your computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஸ்குரோல் செய்து, கீழாகச் சென்று, Shutdown settings என்பதில், Hibernate என்பதன் அருகே உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இனி, ஸ்டார்ட் மெனு பெற்று, பவர் பிரிவில் கிளிக் செய்கையில், ஹைபர்னேட் பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X