அமேசான் 300 கோடி டாலர் கூடுதல் முதலீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

இந்தியாவில், தன் வர்த்தகப் பிரிவினை இயக்கும் அமேஸான் நிறுவனம், கூடுதலாக மேலும் 300 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதலீடு 500 கோடி டாலராக உயரும். அமேஸான் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஸோஸ், வாஷிங்டனில் நடந்த இந்திய அமெரிக்க வர்த்தகக் குழுவின் தலைவர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அமேஸான் நிறுவனம், சென்ற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் தன் பிரிவினை இந்தியாவில் தொடங்கியது. 2014 ஆண்டு வாக்கில், இதன் மூலதனம் 200 கோடி டாலராக இருந்தது. அப்போது இயங்கி வந்த ப்ளிப் கார்ட் மற்றும் ஸ்நாப் டீல் வர்த்தக தளங்களுடன் போட்டியிட இந்த முதலீடு தேவையாய் இருந்தது.
ஏற்கனவே, இந்தியாவில், 45 ஆயிரம் வேலை வாய்ப்புகளை, அமேஸான் உருவாக்கியுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்னும் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என அமேஸான் கருதுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கான இந்திய அரசின் விதிகளின்படி, அமேஸான் நேரடியாக எதனையும் இங்கு விற்பதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதியதாய் செலுத்தப்பட இருக்கும் மூலதனம், புதிய வழிகளைக் கண்டறியவும், டிஜிட்டல் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும் பயன்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில், இணைய சேவைக்கான க்ளவ்ட் சூழ்நிலையை உருவாக்கும் என்றும், முதல் முதலாக அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவில் ஹைதராபாத் நகரில், சாப்ட்வேர் பொறியியல் பிரிவில் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் ஒன்றினை அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
23-ஜூன்-201622:14:07 IST Report Abuse
தாமரை அமேசான் நிறுவனம் தனது வியாபார விற்பனைக்கு எங்களின் கடவுள் உருவங்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மாற்றிக்கொள்வதுடன் இதுவரை நடந்த தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்ள வேண்டும். இல்லையேல் அமேசானை நாங்கள் பகைவனாகவே பார்க்க வேண்டிவரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X