கம்பி வழி இணைய இணைப்பில் ஏ.சி.டி. முதலிடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Atria Convergence Technologies நிறுவனம் (ACT Broadband) புதியதாகக் கம்பி வழி இணைய இணைப்பு தருவதில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் மூன்று, ஜனவரி முதல் மார்ச் வரை, மாதங்களில், 80 ஆயிரம் பேரைப் புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற மார்ச் 31 அன்று, ஏ.சி.டி. நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை 9 லட்சத்து 40ஆயிரம். சென்ற டிசம்பர் 31 அன்று, இந்த எண்ணிக்கை 70 ஆயிரம் ஆக இருந்தது. மார்ச் 31ல், ஏர்டெல், கம்பி வழி இணைய சந்தாதாரர்களாக, 17.4 லட்சம் பேரைக் கொண்டிருந்தது.
சென்ற 2015 ஆம் ஆண்டில், ஏ.சி.டி. மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் நவம்பர் மாதம் வரை 2,30,000 சந்தாதாரர்களைச் சேர்த்திருந்தன. டிசம்பர் 31 முடிய, பார்தி ஏர்டெல் 2.6 லட்சம் சந்தாதாரர்களையும், ஏர்டெல் நிறுவனம் ஏ.சி.டி. 2.5 லட்சம் சந்தாதாரர்களையும் புதியதாக இணைத்திருந்தன. சென்ற ஆண்டின் இறுதியில், கம்பி வழி இணைய இணைப்பாக, ஏர்டெல் 16.7 லட்சம் சந்தாதாரர்களையும், ஏ.டி.சி. 8.6 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருந்தன.
ட்ராய் வெளியிட்ட டேட்டா அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் ஐந்து நிறுவனங்கள், கம்பி வழி இணைய இணைப்பு வழங்குவதில் முன்னணியில் உள்ளன. பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் எம்.டி.என்.எல்., ஏ.சி.டி எனப்படும் அட்ரியா கன்வர்ஜென்ஸ் லிமிடெட், யு ப்ராட்பேண்ட் (You BB). இந்த ஐந்தில், பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை மட்டுமே, இந்தியா முழுவதும் இயங்கும் நிறுவனங்களாகும்.
ஏ.சி.டி. முதலில் கேபிள் சிஸ்டம் ஆப்பரேட்டராக (MSO) தன் செயல்பாட்டினைத் தொடங்கியது. தென்னிந்தியாவில் ஒரு சில மாநகரங்களில் மட்டுமே தன் பணியை மேற்கொண்டது. சிறிது காலம் கழித்தே, கம்பி வழி இணைய சேவை வழங்கும் வர்த்தகத்தினைத் தொடங்கியது. குறைந்த காலத்திலேயே, மிகப் பெரிய எண்ணிக்கையில் சந்தாதாரர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் தங்கள் சந்தாதாரர்களை இழக்கையில், மற்ற மூன்று தனியார் நிறுவனங்களும், தங்கள் சந்தாதாரர் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வந்தன. சென்ற மார்ச் வரையில், பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் கம்பி வழி சந்தாதாரர் எண்ணிக்கை 99.4 லட்சமாகவும், எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை 11.1 லட்சமாகவும் இருந்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X