வேர்ட் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

எழுத்துக்களை அகலப்படுத்த: வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Scale என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடு
தலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.

டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த: வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Optionsபட்டனை கிளிக் செய்திட வேண்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.
4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.
தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட: வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். இங்கு Editing groupல் Find tool அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். பின் Advanced Find என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். அதில் Find என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
2. More என்ற பட்டன் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸின் விரிவான தோற்றத்தினைக் காட்டும். Find What கட்டத்தில் உள்ள எதனையும் நீக்கிவிடவும். No Formatting பட்டன் இருந்தால் அதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்து, பின்னர், Font என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Find Font என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். இப்போது, Effects என்ற பிரிவில் Superscript, Subscript போன்றவை ஷேட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது, இந்த பண்புகள் எல்லாம், தேடலில் ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பொருள்.
4. அடுத்து நீங்கள் தேடும் டெக்ஸ்ட்டில் இருக்க வேண்டிய பண்புகள் (character attributes) எவை என்று தேர்ந்தெடுக்கவும். இந்த பண்புகளின் பெயர்கள் அடுத்து இருக்க வேண்டிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்க மறக்க வேண்டாம்.
5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X