லெ எக்கோவின் அசத்தலான ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
00:00

சீன நிறுவனமான லெ எக்கோ (LeEco), எதிர்பார்த்தபடி, சென்ற வாரம் இரண்டு ஸ்மார்ட் போன்களை LeEco Le 2 மற்றும் Le Max 2 என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டில் அதிகத் திறன் கொண்டது Le Max 2. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் இதன் ராம் மெமரி தான். 6 ஜி.பி. அளவில் ராம் மெமரி தரப்பட்டுள்ளது. சென்ற ஏப்ரலில் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போன்கள், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. Le 2 அதிக பட்ச விலை ரூ. 11,999; Le Max 2 அதிக பட்ச விலை ரூ. 22,999. வரும் ஜூன் 20 முதல் இந்த போன்களை வர்த்தக இணைய தளங்கள் (Lemall.com மற்றும் Flipkart) மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
LeEco Le 2 ஸ்மார்ட் போனில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் திரை 5.5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ரெசல்யூசன் 1,080 x 1,920 பிக்ஸெல்கள். இதில் ஆக்டா கோர், 64 பிட் Snapdragon 652 SoC ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. ராம் மெமரி 3 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 16 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இணைக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., வை பி, புளுடூத், ஜி.பி.எஸ்., மற்றும் சி டைப் யு.எஸ்.பி., தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது.
Dual-SIM LeEco Le Max 2 ஸ்மார்ட் போனிலும் இரண்டு சிம்களைப் பயனபடுத்தலாம். QHD SuperRetina டிஸ்பிளே கொண்ட 5.7 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி மிகச் சிறப்பாக 1,440x2,560 என்ற அளவில் உள்ளது. இதில் 64 பிட், குவாட் கோர் குவால்காம் Snapdragon 820 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி மிகச் சிறப்பானதாக 6 ஜி.பி. அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 64 ஜி.பி. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 21 எம்.பி.திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., வை பி, புளுடூத், ஜி.பி.எஸ்., மற்றும் சி டைப் மைக்ரோ யு.எஸ்.பி., தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,100 mAh திறன் கொண்டது.
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் Sense ID 3D விரல் ரேகை உணரும் தொழில் நுட்ப வசதி தரப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலாக, மொபைல் போன்களில் தரப்படும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லாமல், அதன் இடத்தில், சி டைப் யு.எஸ்.பி. (USB Type-C) ஆடியோ போர்ட் தரப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் போன்களில் மட்டுமே. இவற்றுடன் தரப்படும் ஹெட்செட் மிக உயர்வான Hi-Fi audio தரத்தில் உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X