பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
00:00

இதுவரை தரப்பட்ட இணைய தளக் குறிப்புகளில் மிகச் சிறந்ததாக, நீங்கள் தந்துள்ள 'கிராமர்லி' தளத்தைக் கருதுகிறேன். மிகப் பயனுள்ள குறிப்புகளை வேர்ட், இமெயில், பேஸ்புக் ஆகிய அனைத்திலும் எழுதும்போது தருகிறது. மற்றும் இதன் இணையதளத்தில் தரப்பட்டுள்ள இலக்கணம் குறித்த நூல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் இதனை அணுகித் தெரிந்து கொண்டு தேவையானதைப் பயன்படுத்த வேண்டும். ஆசிரியருக்கு மிக்க நன்றி.
பேரா. கே. ஜெயபாலன், திருச்சி.

விண்டோஸ் 10 சிஸ்டம் இன்னும் அந்நியப்படுத்தப்பட்டே தான் பார்க்கப்படுகிறது. இதற்கு மாறியவர்கள், நம்முடைய பழைய வழக்கமான செயல்பாடு இதில் கிடைக்குமா என்றே சந்தேகம் கொண்டு இயக்குகின்றனர். இதனை நம் வயப்படுத்தி, எளிதாக இயக்கலாம் என்ற நம்பிக்கையைத் தரும் கட்டுரை, 'விண்டோஸ் 10~ நம்முடையதாக்க'. மிகத் தெளிவான வழிகளைக் காட்டி, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எளிதாக இயக்க வழி நடத்துகிறது, இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ள குறிப்புகள்.
எஸ். இளமாறன், மதுரை.

கிராமர்லி பேஸ்புக் தளத்தில் அனைவரும் சேர்ந்து தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும்படி அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி விட்டேன். கிராமர்லி டூல்களையும் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தியுள்ளேன்.
பெ. இலக்குவன், ஆசிரியர், மேலூர்.

வேர்டில், பைல்களை மொத்தமாகத் திறப்பது குறித்த டிப்ஸ் கொண்ட பதில் மிகப் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
ஆர். பாஸ்கரதாஸ், பெங்களூரு.

நான் பதிந்த போதும், விண்டோஸ் 10ல் ஹைபர்னேட் வசதி காட்டப்படாமல் இருந்தது. உங்கள் குறிப்பினைப் படித்த பின்னர், உடனே அதனைக் கொண்டு வந்துவிட்டேன். குறிப்பிற்கு நன்றி.
ஆர். பாலா ஜெயராமன், திருநெல்வேலி.

நான் சென்னையில் வசிக்கிறேன். ஏ.சி.டி. கம்பி வழி இணைய இணைப்பினை நானும் என் நண்பர்களும் பயன்படுத்துகிறோம். மிக வேகமான இணைய இணைப்பு, குறைந்த கட்டணம் என பல சிறப்புகளைக் கொண்டதாக உள்ளது. நீங்களும் அதனையே உங்கள் கட்டுரையில் குறிப்ப்பிட்டுள்ளீர்கள்.
ஜே.ப்ராங்லின், சென்னை.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள், அவர்கள் தரும் சாப்ட்வேர் செயலியைப் பயன்படுத்த நாம் தொடங்குகையில் நம்முடைய தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் அனுமதியைப் பெறுகின்றன. கூடுதலாக, நம்மிடமிருந்து தனியாகவும் தனிநபர் தகவல்களைத் திரட்டுகின்றன. எனவே, இவற்றிடம் குறைவாகவே தகவல்களைத் தருக என்ற உங்கள் கட்டுரை சரியான நேரத்தில் தரப்பட்ட எச்சரிக்கையாகக் கருதுகிறேன்.
எஸ்.முகுந்தன், சேலம்.

கேள்வி பதில் பகுதியில், ஸ்டிக்கி நோட்ஸ் குறித்த கேள்விக்கான பதிலைப் படித்த பின்னரே, அதன் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து அறிந்தேன். அனைத்தையும் பயன்படுத்தி வருகிறேன். வரும் விண் 10 முதல் ஆண்டு நிறைவினை ஒட்டி தரப்பட இருக்கின்ற புதிய கூடுதல் வசதிகளுக்காகக் காத்திருக்கிறேன். நினைவில் கொள்ளத்தக்க வகையில் தரப்பட்ட அனைத்து குறிப்புகளுக்கும் நன்றி.
பா. சேவியர், விருதுநகர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumareshanSK - Bodinayakanur,இந்தியா
29-ஜூன்-201601:44:09 IST Report Abuse
KumareshanSK You can add a page for cellphone accessories, like holders, Bluetooth headphones etc.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X