இந்தியாவில் அதிக மொபைல் பயனாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
00:00

இந்த 2016 ஆம் ஆண்டின், முதல் மூன்று மாதங்களில், மொபைல் பயன்படுத்துவதில், உலக அளவில், மிக அதிகமாக புதியவர்களைக் கொண்ட நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. ஜூன் மாதம் வெளியான Ericsson Mobility Report இந்த தகவலைத் தந்துள்ளது. பன்னாட்டளவில், மொபைல் புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 6 கோடியே 30 லட்சம். இதில் 2 கோடியே 10 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். மியான்மர் மற்றும் இந்தோனேஷியா நாடுகள், தலா 50 லட்சம் பேருடன் அடுத்த இடங்களில் உள்ளனர். அடுத்ததாக, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா, தலா 30 லட்சம் புதிய சந்தாதாரர்களுடன் உள்ளன. சில நாடுகளில், மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, அந்நாட்டின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. செயல்படாத சந்தா இணைப்புகள், ஒருவரே பல மொபைல் போன்களைப் பயன்படுத்துவது, ஒவ்வொரு வகை தொடர்புக்கும் ஒரு மொபைல் போன் மற்றும் எண்ணைப் பயன்படுத்துவது போன்றவையே இதற்குக் காரணங்களாக உள்ளன. பன்னாட்டளவில், 500 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ஆனால், சேவை தரப்படும் சந்தாக்களின் எண்ணிக்கை, 740 கோடியாக உள்ளது.
ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், மொபைல் போன் பயன்பாடு, சில நாடுகளில், 120% க்கு மேல் உள்ளது. சீனாவில் இது 92%, இந்தியாவில் 80% ஆக உள்ளது. இந்தியாவில் தற்போது 103 கோடியே 50 லட்சம் சேவை சந்தாக்கள் உள்ளன. சீனாவில் இது 129கோடியே 50 லட்சமாக, உலக அளவில் முதல் இடம் கொண்டு உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், மொபைல் போன் வழி இணைய இணைப்பு சேவை 20% உயர்ந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில், முதல் மூன்று மாதங்களில் இதனைப் புதியதாக 14 கோடி பேர் பெற்றனர். இணையத்தில் மிகப் பெரிய அளவில், விடியோ படக் காட்சிகள் பெருகி வருவது, மொபைல் வழி இணைய இணைப்புகளின் எண்ணிக்கையையும் உலக அளவில் உயர்த்து வருகிறது. “இன்றைய இளைஞர்கள், விடியோ ஸ்ட்ரீமிங் விரும்புபவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இணைய வழி விடியோ இல்லாத ஒரு நாளை அவர்கள் அனுபவித்ததே இல்லை. வழக்கமான தொலைக் காட்சி பார்ப்பது, இப்போது மொபைல் வழி இணைய விடியோ பார்ப்பதற்கு மாறி வருகிறது. இதில் பெரும்பாலான விடியோ பார்க்கும் நிகழ்வுகள், வை பி இணைய இணைப்பு வழி இருந்தாலும், மொபைல் வழி டேட்டா மூலம் விடியோ பார்க்கும் நேரமும் அதிகரித்து வருகிறது. வாழ்வியல் முறையில் இது ஒரு பெரிய மாற்றமாகும். அகல திரை கொண்ட தொலைக் காட்சிப் பெட்டியிலிருந்து சிறிய அளவிலான மொபைல் போன் விடியோவிற்கு இளைஞர்கள் மாறி வருகின்றனர். 20 முதல் 59 வயதுள்ளவர்கள் ஸ்மார்ட் போன் வழியாக இணையம் பார்க்கும் நேரம் அளவிற்கு, 16 முதல் 19 வயதுள்ளவர்களும் பார்க்கின்றனர்.
சற்று வயதானவர்கள் மாற்றங்களுக்கு எளிதில் மாற மாட்டார்கள். எடுத்துக் காட்டாக, 30 முதல் 35 வயதுள்ளவர்கள், குறைந்த வயதுள்ளவர்களைக் காட்டிலும், 4 மணி நேரம் கூடுதலாகவே, வழக்கமான தொலைக் காட்சிப் பெட்டியில் பொழுதைப் போக்குகின்றனர். ஆனால், வயதில் குறைந்தவர்கள், சிறிய ஸ்மார்ட் போன் திரையுடன் திருப்தி அடைகின்றனர். நாள் முழுவதும், ஸ்மார்ட் போன் மூலமாகவே, விடியோ காட்சிகளைக் காண்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், இது 85% அதிகரித்துள்ளது.
மொபைல் டேட்டா மூலம் இணையத்தை அணுகுவதைக் காட்டிலும், வை பி இணைப்பு வழியாக இணையத்தை அணுகும் பழக்கமே வேகமாக அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன் வழி விடியோ காண்பதில் 85% வை பி இணைப்பு வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தேவைக்கேற்ற அளவில் வை பி இணைப்பு மற்றும் வேகம் அனைத்து பொழுதிலும் கிடைக்காததால், மொபைல் டேட்டா திட்டங்கள் வழியாக இணைய இணைப்பில் விடியோ காண்பதுவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X