பலனளிக்கும் இலவச இணைய இணைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
00:00

கூகுள் நிறுவனம், இந்திய ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் 100 ரயில்வே நிலையங்களில், இலவச இணைய இணைப்பினை மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது. தற்போது 19 நிலையங்களில் இந்த இணைப்பு கிடைக்கிறது. மக்கள் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்களா? எந்த வகை தகவல்களைத் தேடுகிறார்கள்? என்ற கேள்விகளுடன், பயன்பாட்டினைப் பார்த்த போது, ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்தன.
தொடக்கத்தில், திரைப்படங்கள், விளையாட்டு செய்திகள், அதிக அளவில் பைல்கள் தரவிறக்கம் என்ற வகையில், இந்த ரயில்நிலைய இலவச இணைப்பு பயன்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில், மக்கள் கல்வி நிலையங்கள், பாட வகுப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து மிக அதிகமாகத் தேடல்களை மேற்கொண்டனர். குறிப்பிட்ட வயதினர், வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்காக இந்த இணைய இணைப்பினைப் பயன்படுத்தினர் என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் தகவலாகும்.
இலவச இணைப்பு தரும் அனைத்து ரயில் நிலையங்களையும் ஒப்பிடுகையில், பல மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் சிறிய நகரமான புவனேஸ்வர் ரயில் நிலையப் பயன்பாடு முதல் இடத்தில் உள்ளது. முதல் நாளிலேயே, நாட்டின் மிகப் பெரிய ரயில் நிலையமான
மும்பையைக் காட்டிலும் மிக அதிகமான இணையப் பயன்பாடு, இதன் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு வாரத்தில், மும்பையில் லட்சம் பேர் இணைப்பினைப் பயன்படுத்தினர். ஒரே நாளில், இந்த எண்ணிக்கையயும், புவனேஸ்வர் ரயில் பயணிகள்
மிஞ்சினர்.
முதல் நிலை நகரங்களின் ரயில் நிலையப் பயணிகளைக் காட்டிலும், இரண்டாம் நிலை ரயில் பயணிகளே, அதிகம் இதனைப் பயன்படுத்தியதாக கூகுள் ஆய்வும் தெரிவிக்கிறது. வழக்கமாக ஒருவர், ஒரு நாளில் 3ஜி இணைப்பில் மேற்கொள்ளும் டேட்டாவினைக் காட்டிலும் 15 மடங்கு அதிகமாக, இந்த இலவச இணைப்புகளில் மேற்கொண்டனர்.
புவனேஸ்வர் ரயில் நிலையங்களில் அதிகப்படியான எண்ணிக்கையில் மாணவர்கள் வருகின்றனர். பட்ட வகுப்புகள், தேர்வு முடிவுகள், போனில் செயலிகளை மேம்படுத்த சாப்ட்வேர் தரவிறக்கம் எனப் பயனுள்ள தேடல்களை இவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த இலவச இணைப்பினைப் பயன்படுத்தவே, பெரும் எண்ணிக்கையில் மக்கள் ரயில் நிலையம் வருவது, இதன் பிளாட்பாரம் டிக்கட் விற்பனை அதிகமானதிலிருந்து தெரிய வருகிறது. இணைய இணைப்பு தரும் முன், மார்ச் மாதத்தில், 1,10,483 பிளாட்பாரம் டிக்கட்கள் விற்கப்பட்டன. இது ஏப்ரல் மாதத்தில், 1,17,384 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 17ல் தான், இலவச இணைய இணைப்பு இங்கு அறிமுகமானது. மே மாதம், இந்த எண்ணிக்கை, 1,40,034 ஆக உயர்ந்தது.
பொருளாதார வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு வளம் மற்றும் இளைஞர்களின் உயரிய இலக்குகள் ஆகியன அனைத்தும் இணைந்து, புவனேஸ்வரைத் தலைநகராகக் கொண்டிருக்கும் ஒடிஸா மாநிலத்தை, இணையப் பயன்பாட்டில் உயர்த்து வருகிறது. சென்ற ஆண்டின் இறுதியில், இந்த மாநிலத்தில் 73 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். இணையப் பயன்பாட்டில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையேயான வேறுபாடு இங்கு அவ்வளவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஆனால், ஆந்திர மாநிலம் இதனைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது. இதன் இணைய சந்தாதாரர் எண்ணிக்கை 2 கோடிக்கும் மேலாகும். இங்கு நூற்றுக்கு 57 மக்கள் இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 57, கர்நாடகா மாநிலத்தில் 56 மற்றும் ஒடிஸாவில் 51 என இந்த விகிதம் உள்ளது.
ஒவ்வொரு வாரமும், தற்போது இலவச இணைய இணைப்பு தரப்படும் 19 ரயில் நிலையங்களில், 4.3 லட்சம் பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவெங்கும் 45 ஆயிரம் கி.மி. தூரத்திற்கு பைபர் ஆப்டிக் நெட்வொர்க்கினை கூகுள் அமைத்துத் தர, இணைய இணைப்பினைக் கொண்டு இயங்கும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 100 ஐத் தொட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து
வருகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X