பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
00:00

இந்த ஆண்டின் ஆப்பிள் டெவலப்பர் கருத்தரங்கின் சிறப்பே, சிறுமி செல்வி அன்விதா விஜய் தான். ஒன்பது வயதில், யுட்யூப் மூலம் கோடிங் செய்வதனைக் கற்று, சிறுவர்களுக்கான செயலிகளை உருவாக்கிய இவரின் திறனை மிக அழகாக, ஆப்பிள் நிறுவனம் கெளரவப் படுத்தியுள்ளது. தான் உருவாக்குபவை மக்கள் முன்னேற்றத்திற்கு துணை புரிய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இவரை மனதாரப் பாராட்டலாம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் நாளில் இவர் நிச்சயம் மிகப் பெரிய தொழில் முனைவோராக வருவார். மற்ற அனைத்து இதழ்களும் இவர் குறித்து எழுதாத போது, தினமலர் இவரைப் பற்றி எழுதி, நம் சிறுவர்களுக்கு ஊக்க மருந்தினைக் கொடுத்துள்ளது. பாராட்டுகள்.
டாக்டர் மு.சிவானந்தம், கோவில்பட்டி.

“உலகில் தானாக இயங்கும் பிழை திருத்தி” என கிராமர்லி செயலியை அழைப்பதில் தவறே இல்லை. என்ன அழகாக, பிழைகளின் தன்மையைக் கூறுகிறது. இதனை எப்படி வடிவமைத்தார்கள் என்றே எண்ணிப் பார்க்க இயலவில்லை. இது காட்டும் 250 வகையான பிழைகளை, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இது குறித்த விரிவான கட்டுரை, கம்ப்யூட்டர் மலர் ஆசிரியரின் திறனைக் காட்டுகிறது. ஒவ்வொரு வசதிக்குமாக தரப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகள் மிக எளிமையாகவும், சொல்ல வந்ததைக் கூறுவனவாகவும் உள்ளன. பாராட்டுகள்.
டாக்டர் மா. இளந்திரையன், தஞ்சாவூர்.

எட்ஜ் பிரவுசர் வேகமாக இயங்கினாலும், பல வசதிகளை முழுமையாகத் தர இயலவில்லை. இதனைத் தங்கள் கேள்வி பதில் பகுதியில் விளக்கத்துடன் தந்துள்ளது பயன் தருவதாக உள்ளது. நன்றி.
சா. மீனா ராஜப்பா, சிதம்பரம்.

மனித வாழ்க்கையின் போக்கினைப் புரட்டிப் போடக்கூடிய திறன் படைத்த, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுடன் இருக்கிறோம் என்ற தயக்கம் சிறிது கூட இல்லாமல், தன்னம்பிக்கையுடன் அன்விதா புகைப்படத்தில் இருப்பது ஒன்றே இவர் தன் திறமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு சாட்சியாகும். வளரட்டும் அவர் திறன், புகழ் மற்றும் பணி.
என். பெருமாள் ராஜா, சேலம்.

மைக்ரோசாப்ட் லிங்க்ட் இன் நிறுவனத்தை ஏன் வாங்கியது? என்ற கேள்வியுடன் அந்த தகவலை நான் பெற்றேன். நோக்கியா போல இதன் கதையும் ஆகிவிடுமோ என்று நினைத்தேன். ஆனால், தங்கள் கட்டுரை, மிகத் தெளிவாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கத்தினை விளக்கியுள்ளது. சாதாரண வாசகருக்கும் புரியும் வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
பா. தென்றல், தூத்துக்குடி.

கூகுள் தேடலில் தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் அனைத்தும் பயனுள்ளவையாகவும், நாம் தேடுபவற்றை, வரையறை கொண்டு தேடுக்கூடிய வழிகளைத் தருவதாகவும் அமைந்துள்ளன. எழுதியவருக்கு நன்றி.
சி. மஹராஜன், வேளாங்கண்ணி.

வேர்ட் டாகுமெண்ட்களில் இத்தனை வகைகளா! என்று வியக்கும் வண்ணம் தகவல்களைத் தந்துள்ளீர்கள். பல ஆண்டுகளாக வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தியும், நீங்கள் உங்கள் கட்டுரையில் தந்துள்ள தகவல்களை அறியாமலேயே இருந்திருக்கிறேன். என் சகாக்கள் பலரும் வியப்புடன் தாங்கள் கூறியவற்றைத் தற்போது கையாண்டு பார்த்தனர். மிக்க நன்றி.
எஸ். சுப்ரமணியன், தேவாரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X