பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
00:00

ரயில்வே ஸ்டேஷனில் இலவச இணைய இணைப்பு கொடுத்ததால், அது இணைய மையமாக நிச்சயமாக மாறும். அதனால் தவறில்லை. மக்கள் பிளாட் பாரம் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று, இணைய இணைப்பினைப் பயன்படுத்துகின்றனர் என்ற செய்தியும், வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்ற தகவலும் இந்த திட்டத்தினை உன்னதமாக்குகிறது. கூகுள் மற்றும் ரெய்ல்டெல் நிறுவனங்கள் சமூக மாற்றத்தில் இந்த வகையில் பங்கு கொள்கின்றன.
என். ஜீவராஜ், மதுரை.

பேஸ்புக்கில் டேக் செய்வதனையே எடுத்துவிடலாம். யார் வேண்டுமானாலும், அவர்கள் நண்பர்களை டேக் செய்துவிடுகிறார்கள். தொடர்பில்லாத பதிவுகள் நம்மை எட்டிப் பார்க்கின்றன. மொத்தமாக இந்த வசதியை நிறுத்தலாம். அல்லது டேக் செய்த பின்னர், சம்பந்தப்பட்ட நபர் விரும்பினால் மட்டுமே, டேக் செய்ததனை அமலுக்குக் கொண்டு வரலாம்.
என். சுசீந்திரன், நாகர்கோவில்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள் வெளியானவுடன், தங்களிடமிருந்து நல்லதொரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன். மற்ற இதழ்களைப் போல, ஆப்பிள் சாதனங்களை ஒதுக்கிவிடாதீர்கள்.
என். ஹனிபா, வேதாரண்யம்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்களைக் கையாளும் விதம் குறித்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாகவும், நம் நேரத்தை மிச்சப்படுத்தும் வழிகளைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக Fonts போல்டரில் என்ன ஏற்படும் என்பதைப் படமாகக் காட்டியது சிறப்பான ஒன்றாகும்.
ஆர். ஸ்நேகலதா, திருநெல்வேலி

ஜூன் 30 ஆம் தேதி வெளியான அறிவிப்பு குறித்து உடனே தகவல் தந்த கம்ப்யூட்டர் இதழ், நம் கம்ப்யூட்டர் மலர் தான். நண்பருடன் பேசுவது போல தகவல்களை அதற்கான படங்களுடன் தந்துள்ளீர்கள். என்ன வரப்போகிறது என்றும் கோடி காட்டி, ஆண்ட்ராய்ட் போனில் அவை எப்படி இயங்கும் என்றும் போட்டோக்களின் மூலம் எடுத்துக் காட்டியது மிகவும் சிறப்பு. உங்கள் ஆசிரியர் குழுவிற்கு என் பாராட்டுகள்.
பேரா டாக்டர் எம். நமசிவாயம், கோவை.

'நகெட்' பெயருக்கு இணையாக ஒரு தமிழ்ப் பெயரை ஏன் நீங்கள் தரவில்லை. சென்ற முறை மார்ஷ்மலோவினை 'மெது மிட்டாய்' என்று அழகாகக் கொடுத்திருந்தீர்களே! அடுத்த இதழில் இதற்கானத் தமிழ்ப் பெயரைச் சூட்டவும்.
எஸ்.கீர்த்தி பிரகாஷ், சென்னை.

கடுமையான ஆங்கிலம் மற்றும் எளிமையான ஆங்கிலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் எடுத்துக் காட்டிய மாதிரி சொற்களும் வாக்கியங்களும் மிக அருமை. குறிப்பாக, 'காலதர்' என்ற சொல் எல்லாம் இப்போது தான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
பா. சிவராஜ், திருச்சி.

“விண்டோஸ் 10 டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் பயன்தரும் குறிப்புகள்” கட்டுரையை இந்த இதழோடு நிறுத்திவிட வேண்டாம். தொடர்ந்து இது போல குறிப்புகளைத் தரவும். விண்டோஸ் 10க்கு மாறிய என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆர்வத்தில் விண்டோஸ் 10க்கு வந்துவிட்டோம். நீங்கள் தான் இதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க குறிப்புகள் தர வேண்டும்.
ஆ. செல்வ கண்ணன், புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X