மாநில மொழிகளைப் பேசும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட்4 மற்றும் யுனைட் 4 ப்ரோ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
00:00

இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை அண்மையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Canvas Unite 4 மற்றும் Canvas Unite 4 Pro என அழைக்கப்படும் இவை அனைத்து நவீன வசதிகளையும் கொண்டவையாக உள்ளன. இவற்றின் அதிக பட்ச விலை முறையே, ரூ. 6,999 மற்றும் ரூ. 7,499.
இவற்றில் 12 மாநில மொழிகளைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் வழி ஒலி அமைப்பினை ஆறு மொழிகளில் பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, வங்காளம் மற்றும் இந்தி மொழிகளில் டெக்ஸ்ட் அமைத்து அவற்றை ஒலிக்கச் செய்திடலாம். பிரவுசரில் டெக்ஸ்ட் அமைத்தால் இந்த செயல்பாடு கிடைக்கிறது. இதனால், வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ். செயலிகளில் பேசவும், டெக்ஸ்ட் டைப் செய்திடவும் முடிகிறது. இரண்டிலும் 5 அங்குல அளவிலான ஹை டென்ஸிட்டி திரை தரப்பட்டுள்ளது.

கேன்வாஸ் யுனைட் 4 போனின் அம்சங்கள்: இதன் திரை, 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன், எச்.டி. தன்மையுடன் ஐ.பி.எஸ்.டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek MT6735P ப்ராசசர் Mali-T720 GPU உடன் தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 64 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிப்படையாகக் கொண்ட Indus OS 2.0 இதனை இயக்குகிறது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. விரல் ரேகை உணரும் இயக்கம் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2500mAh திறன் கொண்டது.

கேன்வாஸ் யுனைட் 4 ப்ரோ போனின் அம்சங்கள்: இதன் திரை, 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன், எச்.டி. தன்மையுடன் ஐ.பி.எஸ்.டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் Spreadtrum SC9832 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிப்படையாகக் கொண்ட Indus OS 2.0 இதனை இயக்குகிறது. இதனை மார்ஷ்மலாய் சிஸ்டத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. விரல் ரேகை உணரும் இயக்கம் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3900 mAh திறன் கொண்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X