விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கு மாறுவதற்கு, ஜூலை 29 இறுதி நாள் என்பதால், இதுவரை தயங்கிக் கொண்டிருந்த பலர், விண்டோஸ் 10க்கு மாறி வருகின்றனர். மாறியவர்கள், பலர் தாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் எளிதாக மாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். பலர் தங்கள் சந்தேகங்களை அவ்வப்போது, கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தீர்த்துக் கொண்டு இயங்கி வருகின்றனர். ஆனால், பலரும் கேட்கும் வினா, விண்டோஸ் 10ல் இயங்கும் ஷார்ட் கட் கீகள் என அழைக்கப்படும், செயல்பாடுகளுக்கான சுருக்கு விசைகள் குறித்துதான். ஏற்கனவே பழகி வந்த சுருக்கு விசைகள் அனைத்தும் அதே இயக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், பல புதிய வசதிகளுக்கான விசைகள் எவை என்றும் கேட்டுப் பலர் தொடர்பு கொள்கின்றனர். அவர்களுக்கான, சில முக்கிய சுருக்கு விசைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
1. Win + I: விண்டோஸ் கீயுடன் 'I' இணைக்கப்பட்டு அழுத்தப்படும்போது, நமக்கு All Settings விண்டோ கிடைக்கிறது. மைக்ரோசாப்ட், இப்போதைய இயக்க முறைமையில், கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து இயக்க பிரிவுகளையும், புதியதான Settings செயலிக்கு மாற்றிவிட்டதால், இந்த சுருக்கு விசை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
2. Win + A: விண்டோஸ் கீ + A, விண்டோஸ் 10ல் உள்ள 'ஆக் ஷன் சென்டரை' திறக்கிறது. அனைத்து நோட்டிபிகேஷன் எனப்படும் அறிவிப்புகளை இங்கு காணலாம். இதற்காக டாஸ்க் பாரில் உள்ள சிறிய ஐகானைக் கிளிக் செய்திட வேண்டாம்.
3. Win+S: விண்டோஸ் 10ல் இணைத்துத் தரப்பட்டுள்ள மிகப் பெரிய வசதி, 'கார்டனா' எனப்படும் நம் பெர்சனல் டிஜிட்டல் உதவியாளர். இதனைப் பெற இந்த சுருக்கு விசையைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் இதனைக் கிளிக் செய்தால், “ நான் உங்களுக்கு உதவிடும் முன், செட்டிங்ஸ் சென்று நான் உணரக் கூடிய மொழியை செட் செய்திட வேண்டும்” என செய்தி கிடைக்கும். பேசி வேலை வாங்க முடியவில்லை என்றால், டெக்ஸ்ட் அமைத்தும் உதவி கேட்கலாம். டெக்ஸ்ட் வழியாக இதனைப் பயன்படுத்த Win+C சுருக்குவிசையினைத் தர வேண்டும். பேச்சு மொழி வழி ("Hey, Cortana") செட் செய்திடவில்லை என்றால், இதனை நாம் பயன்படுத்தலாம். நாம் விரும்புவதை, கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் தேடி எடுத்துக் கொடுக்கும்.
4. Win + Ctrl + D: விர்ச்சுவல் டெஸ்க்டாப் என கூடுதலாக, டெஸ்க்டாப் திரைகளை உருவாக்க இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 10ல் அறிமுகப்படுத்தப்பட்ட பயனுள்ள வசதி இது. கூடுதலாக கிடைக்கும் டெஸ்க்டாப் திரைகளில், நாம் விரும்பும் அப்ளிகேஷனை அமைத்து இயக்கலாம். ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷனை நம் கண்காணிப்பில் வைத்து இயக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தியவர்கள் அனைவரும் விரும்புவார்கள்.
5. Win + Ctrl + Left / Right Arrow Keys: ஒன்றுக்கு மேற்பட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோக்களை திறந்து, அவற்றில் பணியாற்றிக் கொண்டிருந்தால், இந்த சுருக்கு விசைகள், அவற்றிற்கு இடையே செல்லப் பயன்படும்.
6. Win + Ctrl + F4: இதனைப் பயன்படுத்தி, மேலே சொல்லப்பட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோவினை மூடலாம்.
7. Win + Tab : இந்த சுருக்கு விசைகள் விண்டோஸ் 10ல் புதியதாகத் தரப்பட்டுள்ள Task View வசதியைக் காண வழி தரும்.
8. Ctrl+Alt+Tab: உங்களுடைய டெஸ்க்டாப் விண்டோவில், திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் காண, இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இது முந்தைய Alt+Tab போல செயல்பட்டாலும், மவுஸ் அல்லது ஆரோ கீகளைப் பயன்படுத்தியே, புரோகிராம்களைத் திறக்க இயலும்.
9. Win + Arrow Keys: விண்டோவினை மொத்தமாக ஓர் ஓரத்திற்கு ஒதுக்குவது, விண்டோஸ் 10 இயக்க முறைமையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தி, விண்டோவினை எந்த மூலைக்கும் கொண்டு செல்லலாம்.
10. Win +G: Game VDR என்று ஒரு டூல், விண்டோஸ் 10ல் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. இதனைப் பலரும் அறிந்திருக்கவில்லை. இதனைப் பயன்படுத்தி, விடியோ காட்சிகளைப் பிடிக்கலாம். இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தி, Game VDR டூலைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். உடனேயே பதியும் பணியை மேற்கொள்ளலாம். பொதுவாக, இது போன்ற டூலினை, கேம்ஸ் விளையாடுபவர்கள் பயன்படுத்துவார்கள். இருப்பினும், மற்ற புரோகிராம்களைப் பதியவும் பயன்படுத்தலாம். முழுத் திரையையும் பதியப் பயன்படுத்த முடியாது. ஒரே ஒரு புரோகிராம் விண்டோவினை மட்டும் பதிந்து கொள்ளலாம்.
11. Win +Alt+G: அப்போதைய புரோகிராம் அல்லது கேம் விண்டோவினை உடனடியாகப் பதிவு செய்திட, இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இது Game VDR டூலை இயக்கி, அப்போது இயக்கத்தில் இருக்கும் விண்டோவினைப் பதியத் தொடங்கும்.
12. Win +Alt+R: Game VDR தொடங்கிய பின்னர், இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தி, உடனடியாக, அப்போது மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவினை நிறுத்தலாம்.
விண்டோஸ் 10 இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட், சிஸ்டத்தில் உள்ள கட்டளைப் புள்ளி இயக்கத்தில் (Command Prompt) சில மேம்படுத்தலை மேற்கொண்டுள்ளது. Command Prompt Windowவில், மேற்கொள்ளக் கூடிய சுருக்கு விசைகளை இங்கு காணலாம்.
Ctrl+A: கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோ உட்பட, அனைத்து இயக்க விண்டோவில் உள்ள டெக்ஸ்ட்டினை தேர்ந்தெடுக்கிறது.
Ctrl + C: முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் செயல்பட்டதற்கு மாறாக, இந்த கட்டளையப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் கட்டத்தில் கிடைக்கும் டெக்ஸ்ட் அல்லது முடிவுகளை காப்பி செய்திடலாம். இதற்குப் பதிலாக, "Ctrl + Insert" என்ற சுருக்கு விசையையும் பயன்படுத்தலாம்.
Ctrl + V: காப்பி செய்வதற்கான முந்தைய கட்டளையைப் போல, இந்த சுருக்கு விசையினைப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில், டெக்ஸ்ட்டை ஒட்டலாம். இதே செயல்பாட்டினை, Shift+Insert பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம்.
Ctrl+M: இந்த சுருக்கு விசையினைப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில், Marker mode என்னும் நிலைக்கு மாறிக் கொள்ளலாம். இதன் மூலம், Shift + Arrow கீகளைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X