திரைக் காட்சியினைப் படமாக்கி அச்செடுக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

நமக்குப் பிடித்தமான படங்கள், திரைக் காட்சிகளை அப்படியே படமாக மாற்ற அதனை “ஸ்கிரீன் ஷாட்” ஆக எடுத்துப் பயன்படுத்துவது நம் வழக்கம். பொதுவாக, இத்தகைய திரைக் காட்சிகள் நாம் சொல்ல வரும் தகவலைச் சரியாகக் காட்டுவதில் உதவிடும் டூல்களாக இருக்கும். அது தொழில் நுட்பம் குறித்த தகவலாக இருக்கலாம். அல்லது நம் நண்பர்கள் விரைவில் அழித்திடப் போகும் 'கமெண்ட்', 'ட்வீட்' ஆக இருக்கலாம். இவற்றைத் திரைக் காட்சிகளாக அமைக்கும் பட்சத்தில், அவை நாம் தரும் தகவல்களுக்கு ஆதாரமாக அமையும்.
இத்தகைய திரைக் காட்சி கோப்புகளை அமைக்க நமக்குப் பல வழிகளை விண்டோஸ் இயக்கம் தந்துள்ளது. Print Screen கீ அழுத்தி அமைப்பது முன்பு வந்த இயக்க முறைமைகளில் இருந்தது. விண்டோஸ் சிஸ்டத்திலேயே Snipper Tool என்று ஒரு டூல் தரப்பட்டது. இன்னும் பல தர்ட் பார்ட்டி செயலிகளும் இதற்கான வழிகளைத் தருகின்றன.
விண்டோஸ் இயக்க முறைமையில் மாற்றங்கள் ஏற்படுகையில், இதற்கான வழிமுறைகள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கிடைத்திருக்கும் விண்டோஸ் 10ல், திரைக் காட்சிகளை நம் விருப்பப்படி எப்படி படக் கோப்பாக மாற்றுவது எனப் பார்க்கலாம்.

திரை முழுமையும் காட்சியாக எடுக்க: Print Screen கீயை ஒரு முறை அழுத்தினால், நம் திரையில் காட்டப்படும் காட்சி முழுவதும் அப்படியே நம் கிளிப் போர்டில் தேக்கப்படும். இதனை நாம் பயன்படுத்தும் கிராபிக்ஸ் எடிட்டரில் ஒட்டி அமைக்க வேண்டும். இதற்குப் பலரும் பயன்படுத்துவது Windows Paint. வேறு இமேஜ் எடிட்டர் செயலிகளையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் பெயிண்ட் செயலியை இயக்க, ஸ்டார்ட் மெனு அடுத்து கிடைக்கும் தேடல் கட்டத்தில் Paint என டைப் செய்து கிடைக்கும் விடைகளில், முதலில் உள்ளதில் கிளிக் செய்தால், உடன் இந்த செயலி இயக்கப்படும். இங்கு "Paste" பட்டனை அழுத்த, தேக்கப்பட்ட காட்சி திரையில் ஒட்டப்படும். இதற்கு ஒரு பெயர் கொடுத்து கோப்பாக சேவ் செய்து கொள்ளலாம்.

செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சி மட்டும்: நாம் பல விண்டோக்களை ஒரே சமயத்தில் திறந்து இயக்கிக் கொண்டிருப்போம். அப்போது நாம் இயக்கிக் கொண்டுள்ள விண்டோ மட்டும் நமக்குக் காட்சி கோப்பாகத் தேவைப்பட்டால், எப்படி அதனைக் கொண்டு வருவது? இதற்கு ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு பிரிண்ட் ஸ்கிரீன் கீயை (Alt + Print Screen) அழுத்த வேண்டும். குறிப்பிட்ட விண்டோ காட்சி மட்டும் தேக்கப்படும். மேலே குறிப்பிட்டபடி, பெயிண்ட் புரோகிராம் பெற்று இதனை ஒட்டலாம். அல்லது ஏற்கனவே அது இயக்கத்தில் இருந்தால், Control+N கீகளை அழுத்தி, ஓகே கிளிக் செய்தால், படத்திற்கான அமைப்புக் கட்டம் கிடைக்கும். இதனை நமக்கு வேண்டிய அளவில் அமைத்து, ஓகே கிளிக் செய்திடவும். இனி, பேஸ்ட் அழுத்த, காட்சி பதியப்பட்டு, கோப்பாக மாற்றத் தயாராக இருக்கும். நீங்கள் எடுத்த திரைக் காட்சி, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுக் கட்டத்தில் படமாக, கோப்பாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

மற்ற புரோகிராம் இல்லாமல் அமைக்க: விண்டோஸ் பெயிண்ட் போன்ற இமேஜ் எடிட்டர் இல்லாமல், விண்டோஸ் சிஸ்டத்திலேயே, தானாக காட்சிகளைக் கோப்பாக அமைக்கலாம். இதற்கு Windows key + Print Screen கீகளை அழுத்த வேண்டும். திரைக் காட்சி கோப்பாக Screenshots என்னும் போல்டரில் கோப்பாக அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் விரும்பினால், அதன் பெயரை மாற்றி தக்க வைத்துக் கொள்ளலாம்.

திரைக் காட்சியின் ஒரு பகுதியை மட்டும் எடுக்க: தேடல் கட்டத்தில் “snipping tool” என டைப் செய்திடவும். டூல் கிடைத்தவுடன் "New" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கர்சரை, நீங்கள் திரைக் காட்சியில் பயன்படுத்த விரும்பும் பகுதியில் இழுத்துச் செல்லவும். குறிப்பிட்ட பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கர்சரை விட்டுவிடவும். இப்போது நீங்கள் விரும்பிய காட்சிப் பகுதி மட்டும் “snipping tool”ல் கிடைக்கும். இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X