3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 டிச
2010
00:00

இந்தியாவில் 3ஜி சேவை வரத்தொடங்கி, அதனைப் பெற்றுப் பயன்படுத்தும் முயற்சியில் பலரும் இறங்கி உள்ளனர். குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களே இதன் பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து நீல்சன் ஆய்வு நிறுவனம்  எடுத்த கணிப்பில், தொடக்கத்தில் நகரத்தில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. 3ஜி தரக்கூடிய கூடுதல் வசதிகள் மற்றும் அதி வேக இன்டர்நெட் பயன்பாடு குறித்து 70% மக்களிடம் விழிப்புணர்ச்சி இருந்தாலும், பெரும்பான்மையான மொபைல் பயன் படுத்து பவர்கள் முழுமையாக  3ஜி சேவைக்கு மாற, 8 முதல் 10 ஆண்டுகாலம் ஆகும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்விற்கெனச்  சந்தித்தவர்களில், 19% பேர், தாங்கள் 3ஜி சேவையினை உறுதியாக மேற்கொள்வதாகவும், 43% பேர் இதனை மேற்கொள்வது குறித்து ஐயப்பாடுடன் பதிலளித்தாகவும் தெரிகிறது. 5% பேர் தங்களுக்கு இது தேவையில்ல என்றும், இந்த தொழில் நுட்பத்திற்கு மாறப்போவது இல்லை என்றும் கூறி உள்ளனர்.
நிறுவனங் களில்,குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், வேலை பார்ப்பவர்களும், எப்போதும் இன்டர்நெட் தொடர்பில் இருக்க விரும்பு பவர்களும், இந்த சேவையை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.  3ஜி சேவைக் கட்டணத்தைக் குறைத்தால், இந்த சேவையினை வழங்கும் நிறுவனங்களின் வருமானத்திற்கு பாதிப்பு வரலாம். மேலும் 3ஜி சேவையில் மட்டும் மாற்றங்கள் இருந்தால் போதாது;  அதற்கு இணையாக, 3ஜி தரக்கூடிய மொபைல் போன்களும் வர வேண்டும் எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என நீல்சன் ஆய்வு நிறுவன இயக்குநர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன் படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சற்றுத் தள்ளி வைத்து,  இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்து வதனைத் தவிர்க்கலாமே. 

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X