மிகச் சிறிய எஸ்.எஸ்.டி ட்ரைவில் 512 ஜி.பி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

தென் கொரிய நிறுவனமான சாம்சங், அண்மையில், மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் ஒன்றை வடிவமைத்துள்ளது. NVMe PCIe SSD என அழைக்கப்படும் இதில், 512 ஜி.பி. அளவிலான டேட்டாவினைப் பதியலாம். அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் தபால் ஸ்டாம்ப்பினைக் காட்டிலும் சிறியதான வடிவில் இது உள்ளது. இதனை, மிக உயர்நிலையில் பயன்படுத்தப்படும் மெல்லிதான லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும் இணைக்கலாம்.
இந்த Samsung BGA NVMe SSD டிஸ்க்கின் எடை ஒரே ஒரு கிராம். இதன் பரிமாணம் 20 x 16 x 1.5 மிமீ. வழக்கமான 2.5 அங்குல டிஸ்க் எடுத்துக் கொள்ளும் இடத்தில், நூறில் ஒரு பங்கு இடத்தையே இது எடுத்துக் கொள்கிறது. NAND flash memory, DRAM and controller ஆகிய அனைத்தின் செயல்பாடுகளையும் இது உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
PM971-NVMe எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரைவ், குறைவான கொள்ளளவான 256 மற்றும் 128 ஜி.பி. அளவுகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் டேட்டா பரிமாறும் வேகமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. டேட்டாவினைப் படிக்கும் வேகம், ஒரு விநாடிக்கு 1500 எம்.பி. எழுதும் வேகம் 900 எம்.பி. இதற்கு தென் கொரிய நாட்டில் உருவான TurboWrite தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேகம் குறித்து கூறுவதென்றால், 5 ஜி.பி. திறனுடைய ஹை டெபனிஷன் திரைப்படத்தை மூன்று விநாடிகளில் பதிவதைக் கூறலாம்.
டேப்ளட் பி.சி.க்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களின் வடிவ அமைப்பு தொடர்ந்து சுருங்கி வருவதால், இது போன்ற அடிப்படை டிஜிட்டல் கருவிகளும் சிறிய அளவில் அமைய வேண்டியதுள்ளது. அந்த தேவையை, இந்த புதிய எஸ்.எஸ்.டி. ட்ரைவ் நிறைவேற்றுகிறது.
சென்ற ஜூன் முதல், இது டிஜிட்டல் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X